ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகள் பற்றி டாக்டர்கள் தகவல் !

0
கைகளில் நரம்பு கிடைக்காததால் ஜெயலலிதாவின் கழுத்து ரத்தக் குழாயில் டியூப் பொருத்தப் பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். 
ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகள் பற்றி டாக்டர்கள் தகவல் !
மேலும் டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப் பட்டிருந்தாலும் திரவ உணவு உட்கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போன்ற வீடியோ நேற்று வெளி யானது. 

இந்த வீடியோ அப்போலோ மருத்துவ மனையில் எடுக்கப் பட்டது. ஆனால் மருத்துவ மனையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் எடுக்கப் பட்டது இல்லை. 

இந்த வீடியோவில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வார்டில் இடம் பெற்றுள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

செயற்கை சுவாச கருவி
செயற்கை சுவாசத்துக்காக தொண்டைப் பகுதியில் டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப் பட்டுள்ள நிலையில் ஜெயலலிதா ஜூஸ் அருந்துகிறார். 

டிரக்யாஸ்டமி கருவி என்பது சுவாசக் குழாயில் பொருத்தப் படுகிறது. உணவு உட்கொண்டால், அது உணவுக் குழாய் மூலமாக செல்லும். 

அதனால் அந்த கருவிக்கும் உணவுக் குழாய்க்கும் சம்பந்த மில்லை. அதனால் திரவ உணவு களை உட்கொள்ளலாம். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் இரவு 10.30 மணிக்கு ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். 

அக்டோபர் 5-ம் தேதி தான் அவருக்கு அந்த கருவி பொருத்தப் பட்டது. அந்த வீடியோ அக்டோபர் மாதத்தில் எடுக்கப் பட்டதாக இருக்கலாம்.

ரத்த அழுத்தக் கருவி
ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பை அளவிடு வதற்கு ஜெயலலிதாவின் வலது கையில் பட்டை கட்டப் பட்டுள்ளது. 

மேலும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அளவிடு வதற்காக அதே கையின் ஆள்காட்டி விரலில் சிறிய கருவி பொருத்தப் பட்டுள்ளது. ஜெயலலிதாவின் கழுத்துப் பகுதியில் ஒரு டியூப் பொருத்தப் பட்டுள்ளது.

டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்யவும், குளுக்கோஸ் ஏற்றவும் கைகளில் நரம்பு கிடைக்க வில்லை என்றால் கழுத்தில் இருந்து இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் டியூப் பொருத்தப்படும். 

ஆனால், இந்த இரண்டில் எதற்காக அந்த டியூப் என்பது தெரியவில்லை. சிகிச்சைப் பெறும் வார்டில் நோயாளியுடன் ஒருவர் தங்குவதற்கான படுக்கை உள்ளது. அதனால் அது சாதாரண வார்டாக இருக்கலாம். 
மேலும் வார்டில் ஆக்ஸிஜனுக்கான குழாய், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கான கருவி உள்ளிட்ட தீவிர சிகிச்சை கருவிகள் வைக்கப் பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)