குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம்?

0
உலகில் உள்ள உயிரின ங்களில் சிந்திக்கும் திறனும், அதைச் செயல் படுத்தும் திறனும் கொண்ட இனம், மனித இனம். 
குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம்?
இந்த மனித இனத்தில் கிடைக்கும் ஒரு வரம் குழந்தை பருவம். குழந்தைப் பருவத்தில் அப்படி என்ன இருக்கிறது? 

ஒரு குழந்தையின் அழுகை, மழலை, சிரிப்பு இவற்றை ரசிக்கத் தெரிந்தால் இதற்கு விடை கிடைத்து விடும். உலகி லேயே அதிகக் குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 
தற்போதைய கால கட்டத்தில் பிறக்கிற குழந்தைகள் ஐ-போன், ஐ-பேட், டேப்லட் போன்ற வற்றை எல்லாம் அம்மாவின் கருவறைக் குள்ளேயே கரைத்துக் குடித்து விட்டுத்தான் வெளியே வருகிறார்கள் போல.

அந்த அளவுக்குத் தொழில் நுட்பத்துடன் அவர்கள் நெருக்க மாக, இணக்க மாக இருக் கிறார்கள். 

இன்றையச் சுற்றுப்புறச் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்ற குழந்தைகள் விசித்திரமான மன நிலையை யும்,  ஆர்வங் களையும் கொண்டி ருப்பது பெற்றோர் களுக்கு ஒரு சவாலாகத் தோன்று கிறது.

குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம்?
குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம்?
குழந்தை களைக் குழந்தை களாக நடத்துவது, குழந்தை களாக இருக்க விடுவது, அவர்களுக் கான உலகில் தொந்தர வின்றி அவர்களை வாழ விடுவது...  

இவை யெல்லாம் இன்று அரிதாகி வருகின்றன. யோசித்துப் பாருங்கள். சின்னஞ் சிறிய பூவிதழ் பாதங்களுக்குப் பள்ளிகளில் மிக உயரமான படிக் கட்டுகள். 
புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் சந்தோஷம் !
பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ குழந்தைகளை மனதில் கொண்டு படிக்கட்டுகளைக் கட்ட முயற்சி எடுக்கி றோமா?

பூங்காக் களில் குழந்தை களுக்கு என்று அமைக்கப் பட்டுள்ள விளை யாட்டுத் திடலில் அவர்களுக்கு என்று என்ன பாதுகாப்பு இருக்கிறது? 

எத்தனை இடங்களில் சறுக்கு மரத்துக்குக் கீழே முறையாக மணல் கொட்டி வைக்கப் பட்டுள்ளது? 

எத்தனை உணவகங் களில் குழந்தை களுக்கேற்ற கைகழுவும் தொட்டிகளும் குழந்தைகள் வசதி யாகச் சாப்பிடு வதற்கேற்ற நாற் காலிகளும் இருக் கின்றன? 

பேருந்துகள், ரயில்கள் எந்த அளவுக்குக் குழந்தை களுக்கேற்ப வடிவமைக் கப்பட்டு ள்ளன?

ஏன் இவ்வளவு அவசரம்?
ஏன் இவ்வளவு அவசரம்?
முன்பெல் லாம் ஐந்து வயது முடியும் வரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அது பிறகு மூன்று ஆனது. பிறகு இரண்டு ஆனது. 

இப்போ தெல்லாம் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தி யவுடன் பிளே ஸ்கூலுக்கு அனுப்பப் படுகிறது. 
வானில் அதிசயம் நிகழ்த்தும் பறவை கூட்டம் !
ஏன் இவ்வளவு அவசரம்? ஏன் இவ்வளவு சிறிய வயதில் பிள்ளைகள் பெற்றோர் களை விட்டு ஏன் பிரிய வேண்டும்?. இதற் காகவா பிள்ளையைப் பெற்றெடுக் கிறார்கள்?

பள்ளிக்குச் செல்லும் குழந்தை களுக்குப் பல்வேறு கட்டுப் பாடுகள், விதி முறைகள். தோளில் புத்தகச்சுமை. 

விடுமுறை என்று சொன்னதும் குழந்தைகளுக்கு ஏன் அவ்வளவு உற்சாகம் வருகிறது? குழந்தை களுக்குப் பள்ளி செல்வது என்றாலே பாகற் காயாய்க் கசப்பது ஏன்?

குழந்தை களின் நண்பர் களாய், விளையாட்டு தோழர் களாய் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஏன் அவர்களை அந்நியப்படுத்துகி றார்கள்?

அரசு விழாக்களிலும், பள்ளி விழாக் களிலும் பல்வேறு பொது நிகழ்ச்சி களிலும், மாணவர் களையும் குழந்தை களையும் வெயிலிலும், குளிரிலும் கட்டாயப் படுத்தி நிற்க வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

குழந்தைகள் தங்கள் பெற்றோர், ஆசிரியர் களிடம் வெளிப் படையாக வும், அதிகப் பிரசங்கித் தனமாக வும், புத்தி சாலித்தன மாகவும் கேள்வி களையும் கேட்க ஆரம்பிப் பார்கள். 

அவர்களைத் திருப்திப் படுத்தும் விதமாகப் பதில் சொன்னால் தான், அவர்கள் உங்க ளிடம் தங்களை மறந்து பழகு வார்கள். புதிய தேடல்களில் ஈடுபடு வார்கள்.

எப்போது பள்ளிக்கு அனுப்பலாம்?
எப்போது பள்ளிக்கு அனுப்பலாம்?
குழந்தை களைச் சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்ப தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்து கொண்டு,  அவர்களுக்குத் தேவையானதை பூர்த்தி செய்ய 

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ‘மைண்ட் ஜோன்’ மருத்துவ மனையின் மனநல ஆலோசகர் ஜெயசுதா காமராஜ் விளக்கு கிறார்: 

“தற்போதைய சூழ் நிலையில், பொருளாதார நெருக்கடி யால் குடும்ப த்தில் உள்ள கணவன் மனைவி இருவரும் வேலை க்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. 

இதனால் தான் குழந்தை களை இரண்டு வயது முடிவ தற்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது. 
ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா?
இது மட்டு மில்லாமல் தன்னுடைய குழந்தை அழகான கையெழுத்துடன், அதிபுத்திசாலியாக வர வேண்டும் என்ற காரணத் துக்காகவும் சிறிய வயதி லேயே பள்ளியில் சேர்த்து விடுகின் றனர்.

ஆனால், உளவியல் ரீதியாகப் பார்த்தால் குழந்தைகள் ஆறு வயதுக்கு மேல் பள்ளிக்குச் சென்றால் மட்டுமே சிறப்பாகச் செயல் படுகின் றனர். 

இரண்டு வயதில் குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்புவ தால், குழந்தை களுக்கு அவர்களுடைய வளர்ச்சி, அதாவது அடுத்தடுத்த நிலைக்கு அவர்கள் செல்வது தாமத மாகும். அவர்களின் விளை யாட்டுத் திறன் குறைந்து விடும். 

சிந்திக்கும் திறனை இழந்து விடுவார்கள். போலியான வாழ்க்கையை வாழ்வது போன்ற உணர்வு ஏற்படும். 

அவர்களின், சுறு சுறுப்பும் மங்கி விடும். இரண்டு வயதில் குழந்தை களைப் பள்ளியில் சேர்ப்பது அவர்களின் உரிமையை மீறும் ஒரு செயல். கற்றுக் கொள்ளும் செயல் இயற்கை யானது. 

ஆனால், அதை நாம் கட்டாயப் படுத்தி, அவர்களுடைய வயதை மீறிக் கற்றுத் தருகிறோம்” என்கிறார் ஜெயசுதா காமராஜ்.

வளர்ப்பும் வார்ப்பும்
வளர்ப்பும் வார்ப்பும்
13 வயது முதல் 19 வயதிலான காலகட்டம், குழந்தை களுக்கும் பெற்றோ ர்களுக்கும் நிறையவே சிக்கலான கால கட்டம். 

குழந்தைகள் பெரியவர்களிடம் இதமான உணர்வைப் பெறும் வகையில் அவர்களுடைய அணுகுமுறை இருக்க வேண்டும்.

ஆனால், பல பெற்றோர்கள் கண்டிப்பு என்னும் பெயரில் மிகவும் கறாராக நடந்து கொள்வது, வேலைப் பளுவைக் காரணம் காட்டிக் குழந்தைகளிடம் அதிகம் பழகாமல் இருப்பது அல்லது 
அதீதமாய்ச் செல்லம் கொடுப்பது, அவர்கள் உணர்வு களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைக் கையாள்வது, 

பொறுமையிழந்து கத்துவது என்று குழந்தைகளின் வாழ்வைச் சிக்கலாக்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரி யான வளர்ப்பு மூலம், குழந்தைகள் சமூக த்தின் மற்ற குழந்தைக ளிடமிருந்து துண்டிக்கப் படுகிறார்கள். 

செயற்கை யாகத் திணிக்கப்படும் ஒழுக்கம் எந்த வகை யிலும் பலன் தராது. தற்போது குழந்தைகள் எல்லாம் வளர்க்கப் படுவதில்லை; வார்க்கப் படுகிறார்கள். 

கல்வி, ஒழுக்கம் ஆகியவை குழந்தை களிடத்தில் இயல்பாக வளர, மலர நாம் உதவினால் போதும் எதையும் திணிக்க வேண்டாம். 

கல்வி என்பது புத்தக த்தில் மட்டும் இல்லை. ஒழுக்கம் என்பது விதி முறைகளில் மட்டும் இல்லை. 

குழந்தை களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவர்களிடம் அன்புடனும் பொறுமை யுடனும் பொறுப்புடனும் பழகுவது தான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கச் சிறந்த வழி. 

அவர்களுக் காக நீங்கள் செலவிடும் நேரம், நீங்கள் கொடுக்கக் கூடிய கோடிக்க ணக்கான பணத்தைக் காட்டிலும் முக்கிய மானது என்பதை மறந்து விடாதீர்கள்.

வளர்க்கவே வேண்டாம்
வளர்க்கவே வேண்டாம்
என்னுடைய குழந்தையை எனக்கு வளர்க்கத் தெரியாதா என்று கேள்வி எழுப்பலாம். உண்மையைச் சொல்லப் போனால், நமக்கு வளர்க்கவே தெரிய வேண்டாம். 

குழந்தைகள் தானாகவே நன்றாக வளரும். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல், தட்டிக் கொடுத்து ஊக்கு வித்தாலே போதும். 

அதே போல், நம்முடைய கெட்ட எண்ணங்கள், கெட்ட பழக்கங்கள், சூது வாது, கள்ளம், கபடம், பாரபட்சம், பாதுகாப்பின்மை  

ஆகிய எதிர்மறை அம்சங்கள் குழந்தைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொண்டாலே முக்கால்வாசி பிள்ளை வளர்ப்பு முடிந்தது. 
மழையாய் கொட்டிய இறைச்சித் துண்டு - விசித்திர சம்பவம் !
நம் சமூகம் எப்படி இருக் கிறது என்பதை வெளிப் படையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். யாரிடமும் வெறுப்பை வளர்க் காமல், எல்லோரு டனும் பழக அனுமதிக்க வேண்டும். 

சாதி மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வளர்கி றார்களா என்பதை மட்டும் உறுதி செய்தால் போதும். ஆசிரியர்கள், 

மாணவர்களை நம் குழந்தைகள் என்று நினைக்கும் மனப் பான்மை வந்தால் போதும். குழந்தை களுக்குப் பள்ளி வாழ்க்கையும் சொர்க்கம் தான். 

தன்னுடைய பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று இந்தியா வின் முதல் பிரதமரான ஜவஹர்கலால் நேரு தெரிவித்தார்.

காரணம், அவர் குழந்தை களிடம் கொண்டிருந்த அன்பு. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களைப் பற்றி பல்வேறு கனவுகள் காண்கிறார்கள். 

என் பிள்ளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, அவர்கள் நல்ல மனிதனாக வளர வேண்டும் என்று நினைப்பதில்லை.

குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்
குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்
“குழந்தை களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டி யவை அதிகள வில் இருக்கிறது. அவர்க ளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசிய மில்லை. 

ஆறு வயது வரை அவர்களை அவர்க ளுடைய போக்கில் விட்டுவிட வேண்டும். 

தற்போது நடைபெற்றுக் கொண்டி ருப்பதெல் லாம் தவறான அணுகு முறை” என்று மனநல ஆலோசகர் ஜெயசுதா கூறுவது ஆழ்ந்த சிந்தனைக் குரியது.
அமேசானையே விழுங்கும் தீ - பதை பதைக்க வைக்கும் ஆதாரம் !
குழந்தை களின் அறிவு, திறமை ஆகிய வற்றை அவசர அவசரமாக வளர்க்க முனைவதில் அர்த்த மில்லை. 

மாபெரும் அறிவியலாளர்களும் சாதனையாளர்களும் இரண்டு வயதில் பிளே ஸ்கூலுக்குப் போய் மூன்று வயதில் 

இரண்டு கிலோ புத்தக மூட்டையைச் சுமக்கவில்லை என்பதை மறந்து விடக்கூடாது. திறமை, அறிவு எல்லாம் இயல்பாக வளரும். 
திறமை, அறிவு எல்லாம் இயல்பாக வளரும்
நமது அன்பும் அரவ ணைப்பும் நெருக்கமும் அவர்களுக்குத் தரும் ஆழமான நன்மைகளை எந்த நூலும் எந்தப் பள்ளியும் எந்த அளவு பணமும் கொடுத்து விட முடியாது.

நீங்கள் குழந்தை களைப் போலா னாலன்றி மோட்ச ராஜ்ஜியத்தை எய்த முடியாது” என்றார் இயேசு பிரான். 
உலகை வியக்க வைத்த ஆதிவாசி பெண் - தீயாய் பரவும் புகைப்படம் !
குழந்தை களைப் போலத் தூய மனம் நமக்கு வேண்டும் என்று அவர் சொல்கிறார். 

நம்மால் அப்படி இருக்க முடியா விட்டாலும் குழந்தை களையாவது குழந்தை களாக இருக்க விடுவோம். இதையே குழந்தைகள் தினச் சபதமாக மேற் கொள்வோம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)