லைவ் வீடியோ செய்யும் கண்ணாடி !

ஸ்னாப்சாட்... ஃபேஸ் புக்கிற்கு எதிர் காலத்தில் செம டஃப் பைட் கொடுக்க போகும், கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான சோஷியல் மீடியா.
லைவ் வீடியோ செய்யும் கண்ணாடி !
இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னாப்சாட்டில் இரண்டு பில்லியன் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் ஒரு கோடி பயன் பாட்டாளர் களை பெற்றது. 

தனது குறுகியகால வளர்ச்சி யால் 2013-ம் ஆண்டின் சிறந்த மொபைல் அப்ளிகேஷனுக் கான கிரான்சீஸ் விருது உட்பட ஸ்னாப்சாட் பல விருது களைத் தட்டிச் சென்றுள்ளது.

2016 செப்டம்பர் மாதம் ஸ்னாப்சாட் இங்க் ஸ்னாப் இங்க் எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. 

குழந்தைகளைக் கவர 2013-ம் ஆண்டு ஸ்னாப்கிட்ஸ் என்னும் குழந்தை களின் டிஜிட்டல் புகைப் படங்களை ஓவிய மாக வரையும் அப்ளிகேஷனை உரு வாக்கினர். 

தற்போது தங்கள் நிறுவன த்தை வளர்க்கவும் பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் உள்ளிட்ட போட்டி நிறுவனங் களின் தொழில் போட்டியை சமாளி க்கவும் 

தங்கள் சாஃப்ட்வேர் சர்விஸ் களுக்கு இணையாக ஹார்டுவேர் தயாரிப்பிலும் மும்முரம் காட்டி வருகிறது ஸ்னாப்சாட்.
சமீபத்தில் ஃபேஸ்புக், பேஸ்புக் லைவ் சேவையை அறிமுகப் படுத்தி, அதன் பயனாளர் களை நேரலையில் பேச வைத்து மகிழ்வித்தது. 

தற்போது போட்டி நிறுவனமான ஸ்னாப்சாட், அதற்கு இணை யாகக் களமிறக்கி யுள்ள வீடியோ சேவை 'ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ்'. பேஸ்புக் லைவ் வீடியோ போலவே இருக்கும் 

இந்த வீடியோ சேவையில், ஸ்னாப்சாட் பயனா ளர்கள், வீடியோ பதிவுசெய்ய தங்களது ஸ்மார்ட்போன் ஃபிரண்ட் கேமராவைப் பயன் படுத்த வேண்டிய தில்லை. 

வீடியோ எடுப்பதற்கென பிரத்தேயேகமாக ஒரு ஹார்டுவேர் டிவைஸைக் கண்டு பிடித்துள்ளது ஸ்னாப்சாட். ஸ்னாப்சாட் சமூக வலைத் தளம், 

தங்களது வாடிக்கை யாளர் களுக்கு ஹார்டுவேர் டிவைஸ் களை அறிமுகப் படுத்தப் போவதாக நீண்ட நாட்களாக பேச்சு அடிபட்டுக் கொண்டி ருந்தது.

'ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ்' என்பது செல்பி வீடியோ பதிவு செய்யும் கூலர்ஸ் கண்ணாடி. இந்தக் கண்ணாடி, மூன்று நிற ஃபிரேம்களில் கிடைக் கிறது. ஸ்னாப்சாட் ஆன்லைன் சந்தை யில் விற்கப் படுகிறது. 

இந்தக் கண்ணா டியை சாதாரண கூலர்ஸ் அணிவது போல அணிந்து கொள்ள லாம். இதன் இருபுறமும் வட்ட வடிவான மினிகேமரா பொருத்தப் பட்டிரு க்கும். 
இந்த வசதி மூலமாக, 360 டிகிரியில் எந்த கோணத்தில் வேண்டு மானாலும் வீடியோ பதிவு செய்ய லாம். கண்ணாடி க்குள் உள்ள இந்தக் கேமராவை இயக்க, ஆன், ஆஃப் பட்டன்கள் அமைந் திருக்கும். 

கேமராவை ஆன் செய்ததும் இந்தக் கண்ணாடி வழியாகப் பார்க்கும் காட்சிகள், அதே கோணத்தில் கேமராவில் பதிவாகத் தொடங்கும். 

இந்த வீடியோ பதிவு செய்யப் படும் போது, ஸ்மார்ட் போன் மொபைல்டேட்டா ஆன் செய்யப் பட்டு, அதில் ஸ்னாப்சாட் அப்ளிகேஷன் ஓபன் செய்யப் பட்டிருக்க வேண்டும். 

கண்ணாடி மற்றும் ஸ்மார்ட்போனை, வைஃபை தொடர்ப்பு எல்லைக் குட்பட்ட தூரத்துக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
லைவ் வீடியோ செய்யும் கண்ணாடி !
கண்ணாடி யின் கேமரா வழியாகப் பதிவேற்றப் படும் காட்சிகள், வீடியோ நிறைவு பெற்ற வுடன் ஸ்னாப்சாட்டில் தானாகப் பதிவேற்றம் செய்யப்படும். 

அதிகபட்சமாக 30 வினாடிகள் வரை ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் மூலமாக வீடியோ பதிவு செய்யலாம். 

வீடியோ பதிவு நிறை வடைந்ததை, பயனா ளருக்குத் தெரிவிக்க, கண்ணாடி யின் உள்ளே பொருத்தப் பட்டிரு க்கும் எல்ஈடி, வெள்ளை வெளிச்சப் புள்ளியை உண்டாக்கும். 

அதற்கு இடையில், விடியோவை பதிவாவதை எந்நேரமும் நிறுத்த, ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸில் உள்ள ஆஃப் பட்டனை அழுத்த வேண்டும். அந்த வீடியோ பதிவு, வீடியோ பைலாக ஸ்மார் போனில் சேவ் ஆகிவிடும். 

ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் கேமரா, வட்ட வடிவில் இருப்ப தால் ஸ்மார்ட் போனில் 
இந்த வீடியோவை பிளே செய்யும் போது லாண்ட்ஸ்கேப், போர்ட்ரைட் ஆகிய இரு கோணங் களில் எப்படிப் பார்த்தாலும் ஒரே போல் தான் காட்சி யளிக்கும். 

ஸ்மார்ட் போன் ஸ்க்ரீன் திருப்பப் படும் கோணத்துக் கேற்ப, வீடியோ தானாக ஆட்டோரொட்டேட் செய்து கொள்வது இந்த விடீயோக் களின் பிரத்யேக அம்சம்.

ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் வீடியோ கேமராவை எளிதில் ரீசார்ஜ் செய்து கொள்ள லாம். 

இந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸுடன் கொடுக்கப் படும் ஸ்பெக்டகிள்ஸ் கேசில், இந்த ஸ்பெக்டகிள்ஸ் மடக்கி வைத்ததும் அதன் உட்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் பின்னில் இணைந்து சார்ஜ் ஏறத் தொடங்கி விடும். 

செல்ஃபி விடியோக் களின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி யாக ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் வீடியோக்கள் கருதப் படுகிறன. 
இந்த விடியோக் களது கோணம், திரைப் படங்களில் பயன் படுத்தப்படும் ஸ்டடிகேம்கள் புட்டேஜ்கள் போலவே இருக்கும். 

ஸ்டடிகேம்கள் 'வியூவர்ஸ் பாய்ண்ட் ஆப் வியூ' எனப்படும் கதாப் பாத்திரத் தின் கோணத்தில் காட்சியை நகர்த்த திரைப் படங்களில் பயன் படுத்தப் படுகின்றனது. 

அந்த அம்சம் இந்த விடீயோக்களில் உள்ளது. இதுவே ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் விடியோக்கள், பிறசெல்பி விடீயோக் களிலிருந்து தனித் தன்மை பெறக் காரண மாகிறது.

இனி ஸ்னாப்சாட் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றப்படும் விடியோக்கள், பெரும்பாலும் ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் விடீயோக் களாகத் தான் இருக்கும். 

தற்போது பேஸ்புக் பயனா ளர்கள் செல்பி விடீயோக் களில் கருத்துக் களை பதிவு செய்து, ஸ்மார்ட்போன் பேக்கேமரா வழியாக வாழ்க்கை சம்பவங் களைப் படம் பிடித்து, பதிவேற்றம் செய்து கொண்டி ருக்க, 
ஸ்னாப்சாட் பயனா ளர்கள் ஸ்பெக்டக்கிள்ஸ் வீடியோ உதவியுடன் வேறு தளத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக் கின்றனர்.

இதற்குப் போட்டியாக பேஸ்புக் அடுத்து என்ன ஹார்டுவேர் டிவைஸை வெளியிடும் என இணையப் பயனாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக் கின்றனர். நாமும் காத்திருப்போம்.
Tags: