ஜெயலலிதா அறையில் சோதனையா? வருமான வரித்துறை !

0
ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப் பட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. 
இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சிக்கு வருமான வரித்துறை அதிகாரி அளித்த தகவல்:

சசிகலா வின் உறவி னர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக பொருளாதார நுண்ணறிவு பிரிவு அளித்த தகவல், ஆவணங்கள் அடிப்படையில் பல மாதங் களாக கண் காணித்து தான் இந்த சோதனையை நடத்தினோம். 

இந்த சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவன ங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ரூ.1430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவண ங்கள், 5 கிலோ தங்கம், ரூ.7 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப் பட்டது. 

சோதனை யின் அடிப்படை யில் 15 வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப் பட்டுள்ளன. தேவைப் பட்டால் சீல் வைக்கப் பட்ட இடங் களில் மீண்டும் திறந்து விசாரணை நடத்துவோம். 

கைப்பற்ற பட்ட எலக்ட்ரானிக் சாதனம் மூலம் ,போலி நிறுவன த்தை கண்டு பிடித்துள் ளோம். போலி நிறுவனங் களின் பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
போயஸ் தோட்டத்தில் சசிகலா, பூங்குன்றன் அறைகளில் ஆவணங்கள் பதுக்கி வைத்துள்ள தாக கிடைத்த தகவல் அடிப்படை யில், நீதிமன்ற அனுமதி யுடன் 5 அறைகளில் சோதனை நடத்தினோம். 

அதில் சசிகலாவு க்கு சொந்தமான நான்கு அறை களும், பூங்குன்ற னுக்கு சொந்தமான ஒரு அறையும் அடங்கும். ஜெயலலிதா வின் அறையில் சோதனை நடத்த வில்லை.

ஐந்து அறைகளில் நடந்த சோதனை யில் 1 லேப்டாப், 2 டேப்லட், ஏராளமான பென் ட்ரைவ்கள் கைப்பறப் பட்டன. அதை ஆய்வு செய்யும் பணியும், அதில் உள்ள தகவல்களை சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. 

இந்த சோதனைக் காக ஐந்து அறைகளின் சாவியை, இளவரசி மகள் ஷகிலா கணவர் ராஜ ராஜனிடம் இருந்து வாங்கி சோதனை நடத்தினோம்.
கைப்பற்றப் பட்ட ஆவணங்கள், மற்றவர் களிடம் நடத்தப் பட்ட விசாரணை அடிப்படையில் தேவைப் பட்டால் நீதிமன்ற அனுமதி யுடன் சசிகலா மற்றும் இளவரசியிடம் சிறைக்குச் சென்று விசாரணை நடத்துவோம். 

சோதனையின் போது தமிழக போலீஸார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த தால் துணை ராணுவத்தை அழைக்கும் அவசியம் ஏற்பட வில்லை.

சோதனை யில் கிடைத்த தகவல்கள், மற்றவர்களிடம் நடத்திய விசாரணை கள் அடிப்படை யில் சசிகலா குடும்பத்தினர் வெளி நாடுகளில் முதலீடு செய்திருந்தால் 

அந்த முதலீடுகள் குறித்தும் விசாரணை நடத்துவோம், பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற் கான முகாந்திரம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம்.
முன்பெல்லாம் டிரைவர்களோ, வேலை யாட்களோ தான் பினாமி களாக இருப்பார்கள். ஆனால் தற்போது இவர்களே பினாமி களாக இருப்பது இல்லை. 

பினாமிகள் வெளியாட் களாகத் தான் இருக்கி றார்கள். அவர்களை கண்டறிவது என்பது தற்போதைய காலத்தில் சிரமம். 

அதனை உறுதிப் படுத்த விரிவான விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.'' இவ்வாறு வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)