நடு ராத்திரியில் சாப்பிடுவது நல்லதா?





நடு ராத்திரியில் சாப்பிடுவது நல்லதா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பொதுவாக நடு ராத்திரி யில் சாப்பிடுவது கெட்ட பழக்க மாகும். அப்பழக்கம் இருந்தால், உடனே அதைத் நிறுத்து ங்கள். 

நடு ராத்திரியில் சாப்பிடுவது நல்லதா?


இருப்பினும் நடுராத்திரி யில் பசிக்கும் போது என்ன செய்வது? வெறும் வயிற்றில் தான் தூங்க வேண்டுமா?

நடு ராத்திரி யில் பசிக்கும் போது, பசியைத் தணிக்கும் வகையிலான உணவு களைத் தான் உட்கொள்ள வேண்டும். 

குறிப்பாக அப்படி உட் கொள்ளும் உணவுகள் தூக்கம் மற்றும் செரிமான மண்டல த்திற்கு இடையூறு விளை விக்காது இருக்க வேண்டும்.

1. தயிர்

கொழுப்பு இல்லாத தயிரை நடுராத்திரி யில் உட்கொள்வது நல்லது. மேலும் இதில் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச் சத்துக்கள் உள்ளது. 

இதனை உட்கொண் டால், அதில் உள்ள புரோட்டீனால் பசி விரைவில் அடங்கி விடும். ஆனால் தயிரில் சர்க்கரை சேர்க்கக் கூடாது.


2. வெள்ளரிக்காய்

வீட்டில் வெள்ளரிக் காய் இருந்தால், அதனை சாப்பிட லாம். இதனால் அதில் உள்ள நீர்ச்சத்தால், விரைவில் வயிறு நிறைந்து விடும்.

3. பாதாம்

பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து மக்கும் மக்னீசியம் போன்றவை உள்ள தால், இவற்றை ஒரு கையளவு சாப்பிட்டு தூங்கி னால், பசி தணிவ தோடு, தூக்கமும் நன்கு வரும்.

4. கேரட்

கேரட்டில் எண்ணற்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளதால், இவற்றை நடு ராத்திரி யில் உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப் பதோடு, 


பசியும் தணியும். முக்கிய மாக இதில் கலோரிகள் இல்லாத தால், இவை உடல் எடை அதிகரிப் பதைத் தடுக்கவும் செய்யும்.

5. வாழைப்பழம்

நடு ராத்திரி யில் வாழைப்பழம் சாப்பிடு வதும் சிறந்தது. இவை எளிதில் செரிமான மாவதோடு, தூக்கத் திற்கும் இடையூறு ஏற்படுத் தாது.

Please Note : உங்களுக்கு நடு ராத்திரி யில் சாப்பிட வேறு ஏதேனும் ஆரோக்கிய மான உணவுகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்.
Tags: