உங்கள் தொப்பையை குறைய உதவும் கொள்ளு !





உங்கள் தொப்பையை குறைய உதவும் கொள்ளு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். 
உங்கள் தொப்பையை குறைய உதவும் கொள்ளு !
அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியி ருக்கும். பழமொழி இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ள வர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். 
இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப் பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப் படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். 

மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத் தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப் பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகி ன்றனர்.

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. 

மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக் களைப் பலப்படுத்தும். 
வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்ற வற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். 

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டு வதுடன் தாதுவைப் பலப் படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக்கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன் னோர்கள் அளித்தனர். 

குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்று ள்ளது அனை வரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந் திருக்க மாட்டார்கள். 

கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப் பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தை களுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போயி விடும். 

அப்படி ஒரு அருமை யான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதான வர்கள் வரை அனைவரும் அருந்த லாமாம். குளிர் காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும். 

அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்த வுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். 
இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கி றார்கள். கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீ ர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவை யாக இருக்கும். 

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன் படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். 

இ‌ப்படி செ‌ய்ய முடியாத வ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப் போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
Tags: