கேபிள் டிவிக்கு செட் டாப் பாக்ஸ் இலவசம் !

0
யாரும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம்...  பொது மக்கள் யாரும் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்கு வதைத் தவிர்க்கு மாறு அறிவுறு த்தப்படு கிறது. 
கேபிள் டிவிக்கு செட் டாப் பாக்ஸ் இலவசம் !
மேலும், சில உள்ளூர் கேபிள் ஆபரேட்ட ர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன த்தின் செட்டாப் பாக்ஸ் தாங்கள் வழங்குவதாகவும், 

அதற்காக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றும் பொது மக்களிடம் கூறுவதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.

எனவே, பொது மக்கள் அனைவ ருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் உயர் தொழில் நுட்பத் துடன் கூடிய இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவச மாக வழங்கப் படும்.

உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட் டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமம் பெற்றுக் கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்தும், 

தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகவும், பொது மக்களை அச்சுறுத்தியும்,  கட்டாயப் படுத்தியும் தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்து வதாகவும் புகார்கள் வருகின்றன.
அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் அவர் களின் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும். 

இது தொடர் பான புகாரை 1800 425 2911 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக் கலாம் எனவும் கூறப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)