தாவரங்கள் எப்படி நீரை உறிஞ்சுகிறது?

தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு? தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு மூன்று இயற் பியல் நிகழ் வுகள் குறித்துப் பார்த்து விடுவோம்.



நீராவிப் போக்கு (Transpiration)

இதனைத் தாவரங் களுக்கு வியர்க் கின்றது என்று சொல்ல லாமா? தாவரங் களின் தண்டு, மலர், வேர் குறிப்பாக இலைகள், இவற்றி லிருந்து வெளி யேற்றப் படும் 

அல்லது இழக்கப் படும் நீரின் போக்கி னையே நீராவிப் போக்கு என்கி றோம். இலை களின் மேல் மற்றும் கீழ்பகுதி களில் காணப் படும் 

நுண் துளைகள் (Stomata) (நமது வியர்வைத் துளைகள் போன்றதே) வழியா கவே நீர் வெளி யேற்றப்ப டுகின்றது. 

அச்சமய த்திலே தான் காற்றி லுள்ள கரியமில வாயு வினையும் (Carbon di-oxide) ஒளிச் சேர்க்கைக் காக (Photosynthesis) அத்துளை வழியாக உட்கொள் கின்றது. 


இந்நீராவிப் போக் கானது, தாவரங் களைக் குளுமை யாக வைத்துக் கொள் ளவும்,

அடியி லிருந்து நுனி வரைக்கும் நீர் மற்றும் சத்துமிக்க தாதுக் களைக் கடத்து வதற்கும் உறுதுணை யாக உள்ளது.

சவ்வூடு பரவல் (Osmosis)

சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப் படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரைய த்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றி லிருந்து, 

நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரைய த்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புக விடும்

மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக் கூறுகள் பரவல் ஆகும். 

இது கரையம் அல்லது கரை பொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப் பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென் சவ்வினூடாக, கரைப் பானானது, 

ஆற்றல் இழப்பின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற் பாடாகும். 

இந்த சவ்வூடு பரவலின் போது வெளி யேறும் ஆற்ற லானது வேறு தொழிற் பாடுக ளில்

அல்லது உயிரணு வின் மற்ற நிகழ்வு களில் பயன் படுத்தப் படலாம்.


சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறி வுடைய கரைசல் களின் (solution) இடையே கரைப் பான் மூலக் கூறுகள் பரவுவ தால், 

இரு கரைசல் களின் செறிவும் சம நிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய 

இவ்வகை கரைப் பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்படும்.

தந்துகிப் பெயர்ச்சி (Capillary Action)

பொது வாக நீரானது புவி யீர்ப்பின் காரண மாக மேலி ருந்து கீழ் நோக்கியே பயணி க்கும் என்பதை நாமறி வோம். 

நீர்மங் களின் ஒரு பண்பான இத்தந் துகிப் பெயர்ச்சி, நுண் துளைக் குழாய் களில் புவியீர்ப் பிற்கு எதிராக மேல்நோக்கிச் சற்று பயணிக்க முயலும்.

தெரிந்து கொண்டா யிற்றா? ஆக, நீரானது, மண்ணில் இருந்து சவ்வூடு பரவல் முறையில் தாவரங் களின் வேர்களின் மூலம் உட்பெறப் பட்டு, 

அங்கி ருந்து தொடங்கும் நுண்ணிய குழாய் களில் தந்துகிப் பெயர்ச்சி முறை யில் மேல் நோக்கிப் பயணித்து தாவர ங்களின் பல்வேறு பகுதி களுக்கும் செல்கி ன்றது. 


நீராவிப் போக்கும் இப்பயண த்தை எளிதாக்கு கின்றது. நீராவிப் போக்கி னால் ஏற்படும் வெற்றி டத்தை நிரப்ப நீரை இழந்த செல்க ளுக்கு 

அதன் அடுத்து உள்ள செல்களில் இருந்து நீர் தந்துகிப் பெயர்ச்சி முறையால் கடத்தப் படுகின் றது.
Tags: