ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியளரிஞர் !

அணு இயலின் தந்தை என அறிவியல் அறிஞர்களால் போற்றப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியளரிஞர் !
கடந்த 1879ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி யூத குடும்பத்தில் ஹெர்மன் ஐன்ஸ்டீன், மற்றும் பாலைன் ஐன்ஸ்டீன் என்ற தம்பதி யருக்கு ஜெர்மனி யின் ஊலம் என்ற சிற்றூரில் பிறந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அநேகமாய் அனைத்து காலத்திலும் மிகவும் பிரபலமான விஞ்ஞானி ஆவார். 

அவருடைய பிரதிநிதித்துவம் மற்றும் அவர் வெளிக் கொணர்ந்த அந்த அற்புதமான இயற்பியல் கோட்பாட்டு இன்றைய இளம் விஞ்ஞானி களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.

சிறு வயதிலேயே கணிதத்திலும், அறிவியலிலும் இவர் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவற்றின் மீது அவருக்கு ஆர்வமும், பகுத்தறியக் கூடிய திறனும் இவருக்கு இயற்கை யாகவே அமைந்திருந்தன.
பட்டப் படிப்பை முடித்த பின்னர் அவர் காப்புரிமை வழங்கும் அலுவல கத்தில் மின் காந்த சாதனங்களுக்கு காப்புரிமைகள் மதிப்பீடு செய்யும் வேலையை செய்து வந்தார்.

அவர் மிக பிரபல மான சமன் பாடான :

E = MC²

E = MC² (ஆற்றல் = நிறை ஒளியின் வேகத்தின் இரு மடங்கு). உருவாக் கினார்.
which E - represents units of energy,

m - represents units of mass,and

C² - is the speed of light squared, or multiplied by itself.
குழந்தை பருவத்தில் இருந்தே மந்தபுத்தி உடையவராக விளங்கிய ஐன்ஸ்டீன், மற்ற குழந்தைகளை போன்று ஓடியாடி விளையாட விரும்ப மாட்டார். 

சிறு வயதிலேயே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இவரது பேச்சுக்கள் குளறலாகவே வெளிப்படும். பள்ளியில் சேர்க்கப் பட்டாலும், ஒரு சிறைச் சாலை போன்றே வகுப்பறை இருந்தது. 

மற்ற பாடங்களை வெறுத்தாலும் கணிதம், பௌதி கத்தில் அளப்பரிய ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்று கொண்டார் ஐன்ஸ்டீன். 

பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்த தாகவும் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என அஞ்சிய தாகவும் ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது. 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியளரிஞர் !
சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப் பதைக் காட்டிலும் படங்களாகவும் காட்சி களாகவும் சிந்திப் பார் ஐன்ஸ்டைன். 

அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசை மேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

ஐன்ஸ்டீ னுக்கு 15 வயதான போது இத்தாலி யில் மிலான் நகருக்கு குடியே றினர். அங்கு அவரது தந்தை வர்த்த கத்தில் நொடித்து போனதும் சுவிட்சர் லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். 

புகழ் பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத் தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்து கொண்டது அந்த பலதுறை தொழிற் கல்லூரி. 

அதிலிருந்து தேர்ச்சி பெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானி களின் கண்டு பிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது.

அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்
அப்போது சோதனைச் சாவடிகளிலும், நூல்கலை படிப்பதிலுமே பெரும் பாலான நேரத்தை செலவிட்டார். தனது நண்பர் மார்ஷல் என்பவரின் உதவியுடனேயே அனைத்து பாடங்களிலும் கற்றுத் தேர்ந்தார்.

புது வீடு கட்டும் போது கரையான் வருவதை‌ தடுப்பது எப்படி?

படிப்பு முடிந்து வெளியே வந்ததும், பெர்ன் நகரில் இருந்த அலுவலகம் ஒன்றில் குமாஸ்தா வேலை கிடைத்தது. ஐன்ஸ்டீனுக்கு இந்த வேலை மிகவும் பிடித்துப் போனது. 

இதற்கு காரணம் விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது தான். தொடர்ந்து 1905ம் ஆண்டுகளில் இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளியாகி புகழை தேடித்தந்தன. 

இயங்கும் பொருட்களில் மின்னியக்க ஆற்றல் பிரவுகளின் இயக்கம் பற்றிய விதி முறை ஒளியின் தோற்ற மூலங்களும் மாறு பாடுகளும் அணுத் திரள் களின் பருமனான அளவை களை நிர்ண யித்தல் 

இவரது திறமைகளை கண்டஸனரிக் பல்கலைகழகம் தத்துவ பேராசிரியர் என்ற பட்டத்தை கொடுத்தது.

இவை எல்லா வற்றிற்கும் மேலாக ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை என்ற ஆராய்ச்சி விளக்க மும் வெளிப் பட்டது. 

இடம், காலம், பிரபஞ்சம் பற்றிய அவரது ஆராய்ச்சிக் கொள்கை களே சார்புக் கொள்கை எனப்படும். 

இதுவே உலகையை பயமுறுத்தும் அணு குண்டு பிறக்க காரணமாக இருந்தது என்று சொல்லலாம். 

இக்கொள்கை வெளியாக பின்னர் உலகமே ஐன்ஸ்டீனை திரும்பி பார்த்தது, ஆராய்ச்சியில் முழு மூச்சாக ஈடுபட தொடங்கினார். 
1921ம் ஆண்டு தனது மனைவி யுடன் ஐன்ஸ்டீன் அமெரிக்கா வுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட போது, அமெரிக்கா திரண்டு வரவேற்பு அளித்தது.லண்டனிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப் பட்டது. 

பல்வேறு சொற் பொழிவு களையும் ஆற்றினார். இந்நிலை யில் 1922ம் ஆண்டு “ஒளி மின் விளைவு” என்ற ஆராய்ச்சிக்காக ஐன்ஸ்டீ னுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இக்கால கட்டத்தில் முதல் உலகப்போர் தீவிர மாக நடந்த தால், ஜேர்மனியை விட்டு அமெரிக்காவில் குடியேறினார். 

1941ம் ஆண்டு அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது, பின் சார்பு நிலை கொள்கை யை அடிப்படை யாக கொண்டு அணு குண்டு தயாரி க்கும் முறையை கண்ட றிந்தார்.

அதாவது, அணுவி லிருந்து மிக அதிக அளவில் சக்தியை வெளிப் படுத்த முடியுமென அவர் தெரிந்து கொண்டார். 

E = mc2, E = சக்தி, M = பொருட் திணிவு C = ஒளியின் வேகம் இதன் மூலம் அணு குண்டுகள் தயாராகின.

ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்கலாமா?

1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர் களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ் வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். 

அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணு குண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்க கூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன்.
ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணு குண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். 

ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

அதன் விளைவு தான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒரு கனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம் தான் அணு குண்டின் அடிப்படையாக அமைந்தது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். 

அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணு குண்டு வீச சின்னா பின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணு குண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி.
ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்தி கேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். 

காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடு தான் அணு குண்டு உற்பத்தி யாவதற்கு அடிப்படையாக இருந்தது.

அப்போது தான் கண்டு பிடித்த ஒரு விடயம் மக்களை அழிக்க பயன் படுவதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார். 

எனினும் ஆக்க வேலை களுக்கும் பயன்படும் என கண்டறிந்த பின்னரே, அவரது மனம் சமாதானம் அடைந்தது. 

ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். 

உண்மை யில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டு பிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட் பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.

வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தவர், 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி காலமானார். 
உயில் மூலமாக தனது மூளையையும், உடலின் சில பகுதிகளையும் ஆய்வுக் காக தானமாக வழங் கினார். 

மேலும் ஐன்ஸ் டீனுக்கு அவரது இயற்பியல் கோட்பாடு கண்டு பிடிப்புக்கு 1921-ல் நோபல் பரிசினை வென்றார். அவரது புகழ் பெற்ற பிற கோட் பாடுகள்:

புவியீர்ப்பு மூலம் ஒளி விலகல். திட அணு இயக்க குவாண்டம் கோட்பாடு, பிரௌனி இயக்கம், நுண்புழை விளைவு பற்றிய விளக்கம் ஆகும்.
Tags: