பெண்களுக்கு இத்தா ஏன்? யூத விஞ்ஞானி !





பெண்களுக்கு இத்தா ஏன்? யூத விஞ்ஞானி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறு மணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
பெண்களுக்கு இத்தா ஏன்? யூத விஞ்ஞானி !
ராபர்ட் கில்ஹாம் என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற் கொண்டார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார். 

அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் களஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண் களிடம் அவர்களின் கணவர் களது ரேகைகள் மட்டுமே பதிவாகி யிருந்தன.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்ட போது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகி யிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.

அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
கணவன் இறந்த ஓரிரு மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது குழந்தை 

இரண்டாம் கணவனின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்திய முண்டு. முதல் கணவனின் டி.என்.ஏ, யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகிறது. நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்து கொண்டால், டி.என்.ஏ. பரிசோதனை யில் குழப்பம் இராது.

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்று அறிந்து ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றதற்கு இத்தா எனும் சட்டம் காரணமாக அமைந்தது.

இத்தா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
சில முஸ்லிம்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்து கின்றனர். 

இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமண த்தைத் தூண்டும் அலங்காரங் களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
Tags: