கோமாவில் இருந்து மீண்ட சங்கரியின் கதை !

ஒரு விபத்து ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி விடும் என்பதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம், நிஜ வாழ்க்கையில் அல்ல.
கோமாவில் இருந்து மீண்ட சங்கரியின் கதை !
என நினைப்பவரா நீங்கள்? சங்கரியின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படித்தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். ஒரு சின்ன அதிர்ச்சி, துயரத்தில் இருந்து வெளிவரவே பலருக்கும் பல நாள்கள் ஆகும். 

ஆனால், பெரும் விபத்தினால் கோமாவுக்குச் சென்று, இரண்டு மாதங்களாகச் சுய நின வின்றி இருந்தவர் சங்கரி. 

மீண்டு வீடு திரும் பியதுமே கிராஃப்ட் வகுப்பு, ஆங்கில பயிற்சி என்று தன்னை பரபரப் பாக்கிக் கொண்டி ருக்கிறார் இந்தத் தன்னம் பிக்கைப் பெண் மணி.

திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கிற ஸ்ரீ வைகுண்டம் தான் என்னுடைய சொந்த ஊர். கோயம் புத்தூரில் பங்குச் சந்தை புரோகிராமர் வேலை. 

அதையடுத்து சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை எனச் சந்தோஷமாக நாள்கள் நகர்ந்தன. திருமணத்துக்குப் பிறகு கரூரில் வசித்தேன். 

அங்கே, பதினைந் துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில மொழிப்பயிற்சி வகுப்புகள் எடுத்தேன். என் கணவ ருக்கு பணி மாற்றம் ஏற் பட்டதை யடுத்து, மறு படியும் குடும்பத் துடன் கோவை யில் செட்டில் ஆனோம். 
அப்போது, சின்ன வயசிலி ருந்தே எனக்கு ஆர் வமான கிராஃப்ட் வொர் க்கில் என்னை ஈடு படுத்திக் கிட்டேன். பெண் களைப் பொருத்த வரை என்ன தான் பிஸியாக செயல் பட்டாலும், குழந்தைப் பிறந் ததும் ஒரு பிரேக் வரும். 

அந்த பிரேக் எனக்கும் வந்துச்சு. என் மகளைப் பார்த்துக் கிறதுக் காக கிராஃப்ட் வேலை களுக்கு பிரேக் விட் டுட்டேன். குழந்தை கொஞ்சம் வளர்ந் ததும், வாஸ்து மிரர்கள் செய்து கொடுக்க ஆரம் பிச்சேன். 

அந்தச் சமயத்தில் எதிர்பாராத ஒரு விபத்துக்கு ஆளானேன் என்கிற சங்கரி, எட்டு வருடங் களுக்கு முன்பு எதிர் கொண்ட விபத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொண் டார்.

சங்கரி

அன்று குடும்பத்துடன் கார்ல போயிட்டிருந்தோம். திடீர்னு கண் இமை க்கும் நேரத்தில் நடந்த விபத்தில், நான் மட்டும் காரி லிருந்து கீழே தூக்கி வீசப்பட்டேன். உடம்பில் எந்தக் காயமும் இல்லை. 

ஆனால், தலை பலமாக மோதியதில் மூளையில் அடிபட்டு, கோமா நிலைக்குப் போயி ட்டிருக்கேன். 
கண் விழிச்சுப் பார்த்த ப்போ 52 நாள்கள் ஓடிப் போயிருந்துச்சு. 53-வது நாள், மறுபடியும் புதிய ஜென்மம் எடுத்து பிறந்த மாதிரி இருந்துச்சு. 

அந்த நாள் களில் கணவர், உடன் பிறந்த வர்கள், மகள், மாமியார், மாமனார் என எல் லோரும் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கிட்டிருக் காங்க. அதுவே எனக்கு வருத்த மாக இருந்துச்சு. 

தொடர்ந்து என்னைப் பரிதாபமா பார்க்கிறதும் பச்சாதாபம் காட்டறதும் சுத்த மாப் பிடிக்கலை. நான் நல்லா இருக்கேன். முன்னை விட சிறப்பா இயங்குவேன் எனக்கு நானே பூஸ்ட் பண்ணிக் கிட்டேன். 

அது தான் மருந்து, மாத்திரைகள், பிரெய்ன் எக்ஸர் சைஸ்களை விட விரைவா என்னை குணமாக்கிச்சு. என்னை பழைய படி பரபரப் பாக்கிக்க முடி வெடுத்தேன். 

கோமா விலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்த பதினெட்டாவது நாளில், என் கிராஃப்ட் வகுப்புகளை யும், ஆங்கிலப் பயிற்சி வகுப்பு களையும் ஆரம்பிச் சுட்டேன் என்று வியக்க வைக்கிறார் சங்கரி. 
கோமாவில் இருந்து மீண்ட சங்கரியின் கதை !
அய்யோ... எனக்கு சுகர் வந்திருச்சே, கால்மூட்டு தேய்ஞ்சு போச்சே எனப் பலரும் கவலையில் மூழ்கு வதைப் பார்த்திருக்கேன். 

ஆனால், எங்கிட்ட யாராச்சும், 'நீங்க கோமாவில் இருந்தீங் களாமே?’னு பரிதா பமாகக் கேட்டாலே பிடிக்காது. 'ரெண்டு மாசம் நல்லா ரெஸ்ட் எடுத்தேன்’னு சிரிச்சுக் கிட்டே அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வெச்சுடுவேன். 

உடம்பு சுமக்கும் நோயை, மனசி லும் சுமந் துட்டே இருந் தோம்னா, குணம் கிடை க்காது. 'இதெல் லாம் ஒரு நோயா? 

எல்லாம் கடந்து ஜம்முனு வந்துட லாம்' னு மனசுக் குள்ள சொல் லிட்டே இருங்க, சீக்கிரமே குண மாயிடு வீங்க!'' என்கிறார் இந்த புது மனுஷி சங்கரி.
Tags: