எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் குழப்பம் !





எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் குழப்பம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் கூச்சல் போட்ட தால் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் குழப்பம் !

தமிழக அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் பழனி சாமி தலைமையில் இந்த விழா நடைபெற்று வருகிறது. 


தமிழக வருவாய்த்துறை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். விழாவில், முதல்வர் பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, விழாவில் பங்கேற்றிருந்த கிராம உதவியாளர்கள், திடீரென ஊதிய உயர்வு வழங்கக் கோரி முழக்கம் எழுப்பினர். அதைப் பார்த்து முதல்வர் பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக, அமைச்சர் உதயகுமார் எழுந்து, அமைதி காக்குமாறு கிராம உதவி யாளர்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். 


தொடர்ந்து கிராம உதவி யாளர்கள் முழக்க மிட்டதால், முதல்வர் பழனி சாமி விழா மேடையிலிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார். 

மேலும், விழா நிறை வடைவதற்கு முன்ன தாகவே கிராம உதவியாளர்கள் சிலர் பாதியில் வெளியேறினர்.
Tags: