அதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி | Dominated Woman.. Indira Gandhi ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

அதிகாரம் நிறைந்த பெண்மணி இந்திரா காந்தி | Dominated Woman.. Indira Gandhi !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
ஒரு அமைதி யான பெண்மணி யாக அரசியலில் வாழ்வைத் துவங்கி, நாட்டின் அசைக்க முடியாத தலைவ ராக உயர்ந்து தானே அதை தகர்த்துக் கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திரா வுடையது.


விடுதலை போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில் தான் இந்திரா பிறந்தார். அப்பாவும், தாத் தாவும் அடிக்கடி சிறைக்கு போவ தையும் விடு தலைப் போரில் ஈடுபடும் எண்ண ற்றோர் 

வந்து போவ தையும் பார்த்தே அவரின் இளமைக் காலம் நகர்ந்தது. கூடவே, அவரே வானர சேனை என்கிற அமைப்பை அமைத்து சிறுவர் களை கொண்டு விடுத லைப் போருக்கு உதவவும் செய்தார்.

சாந்தி நிகேத னில் பெற்ற கல்வி, நேருவின் கடிதங்கள் அவரை செதுக்கின. இந்திரா வுக்கு ஜோன் ஆப் ஆர்க் மிகப்பெரிய ஆதர்சம் .

இந்திரா தன் அன்னை உடல் நலம் இல்லாத பொழுது அவரை கவனிக்க வந்த பெரோஸ் காந்தியுடன் காதல் பூண்டார். 

சில போராட்ட ங்களுக்கு பிறகு அவரையே திருமணம் செய்து கொண் டார். விடுதலை பெற்ற பின் நேரு இந்தியா வின் பிரதமர் ஆனதும் அவரின் பி.ஏ போலவே இந்திரா பங்காற் றினார். 

பெரோஸ் காந்தி காங்கிரஸ் எம்.பி யாக இருந் தாலும் முந்த்ரா ஊழல், காப்பீட்டு ஊழல் என்று ஊழல் களை வெளியே கொண்டு வந்து காங்கி ரசுக்கு சிக்கலை உண்டு செய்தார்.

நேருவும் முறை யான விசாரனை க்கு உத்தர விட்டு நடவடி க்கைகள் எடுத்தார். இந்திரா வுக்கும்,

பெரோஸ் காந்தி க்கும் இடையே இருந்த விரிசல் ஒட்டுப் படுவ தற்கு முன் னமே பெரோஸ் இறந்து போனார். கையில் இரண்டு குழந்தை கள் இரு ந்தார்கள்.

நேருவுடன் இந்திரா தொடர்ந்து செயலா ற்றினார். ஒரு முறை அவரை காங் கிரஸ் கட்சி தலைவர் ஆக்கினார் நேரு.

அப்பொழுது ஜனநாயக ரீதியாக தேர்ந் தெடுக்க ப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை கலை க்கச் சொல்லி நேருவை கட்டாயப் படுத்தி அதை சாதிக் கவும் செய்தார். 

நேரு இவரை தனக்கு அடுத்து வாரிசாக ஆக்க எண்ண வில்லை. தன்னுடைய நெரு ங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் சீக்கிரம் அமெரிக் காவில் வந்து செட்டில் ஆக லாம் என்று எண்ணம் என்று குறிப் பிட்டு இருந்தார்.

நேருவின் மறை வுக்கு பின்னர் சாஸ்திரி பிரதமர் ஆனதும் இந்திரா வை மொத்த மாக லண்ட னுக்கு தூது வராக அனுப்பி மொத்த மாக அரசியல் வாழ்வை அஸ்த மித்து விடலாம் என்று எண் ணினார். 

அவர் தாஷ் கண்ட்டில் இறந்து போக, சொன்ன பேச்சை கேட்பார் என்று நம்பி சிண்டி கேட்டின் காமராஜர், நிஜலிங் கப்பா முதலி யோர் இந்தி ராவை பிரதமர் ஆக்கி னார்கள்

நாடாளு மன்ற த்தில் குங்கி குடியா (ஊமை பொம்மை ) என்று லோகியா குறிக்கிற அளவுக்கு ஆரம்ப கால ங்களில் திணறிக் கொண்டு தான் இருந்தார் இந்திரா.

சிண்டி கேட்டின் ஆதிக்கம் அவரை வெறுப் பேற்றியது. அவர் களை மீறி ரூபாயின் மதிப்பை குறை த்தார் ; 

மொரார்ஜி தேசாயை பதவி இறக்கம் செய்தார். ஜனாதிபதி தேர்த லில் ஜகஜீவன் ராமை இவர் ஆதரிக்க போக சிண்டி கேட்டோ இவ ருக்கு தொல்லை தரக் கூடிய சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. 

இவரின் ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியை மன சாட்சிப்படி வாக்களி யுங்கள் என்று சொல்லி வெல்ல வைத்தார் இவர். கட்சி உடை ந்தது.

பிற கட்சி களின் உதவி யோடு ஆட்சி செய்து வந்த இந்திரா பின்னர் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். நேருவின் கால த்தில் இருந்த உட்கட்சி ஜனநாய கத்தை குழி தோண்டி புதை த்தார். 

அவ ருக்கு ஆமாம் சாமி போடுகி றவர்கள் மட்டுமே முதல்வ ராக தொடர முடியும் என்கிற நிலை உண் டானது.

நகர்வாலா ஊழல் தொடங்கி மாருதி திட்டம் வரை ஊழலின் உருவம் பெருத்துக் கொண்டே போனது.

பொக்ரான் அணு குண்டு வெடிப்பு, பசுமைப் புரட்சி, வங்கதேச உரு வாக்கம், வங்கி கள் தேசிய மய மாக்கம் என்று சாதனை களும் இந்திரா செய்தார்.

மாநில அரசு களை ஒரு வகை யான இறுக்க மான சூழலி லேயே இந்திரா தன் கால த்தில் வைத்தி ருந்தார்.

மொத்த மாக ஒன்பது, பத்து அரசுகள் கலைக்கப் பட்டு தேர்தல் நடத் துகிற அளவு க்கு ஜன நாயக த்தை மறந்த வராக போனார் அவர். உச்சபட்ச சோகம் ராஜ் நாராயண் வழக் கால் வந்தது


எம்.பி தேர்த லில் வெற்றி பெற்ற இந்திரா, அரசாங்க சம்பளம் பெற்ற அவரின் செயலா ளரை தேர்தல் பணிக்கு பயன் படுத்தி னார்,அனு மதிக்கப் பட்ட உயரத்தை விட அதிக மான உயர த்தில் கூட்ட த்தில் பேசினார்,

அரசாங்க நிலத் தில் அமைந்த மேடையை பயன் படுத்தி னார் என்று குற்றச் சாட்டுகள் நிரூ பிக்கப் பட்டு அவரின் தேர்தல் வெற்றி செல்லு படியாகா மல் போனது என்று அலகாபாத் கோர்ட் அறிவி த்தது.

ஏற்க னவே கேசவனந்தா பாரதி வழக்கில் அரசு எண்ணிய மாதிரி அரசிய லமைப்பு சட்டத்தை திருத்த முடி யாது என்று தீர்ப்பு வாசித்து இருந் தார்கள். 

அதனால் மூன்று நீதிப திகள் முன்ன ணியில் இருந்தும் தனக்கு சாதக மாக தீர்ப்பு சொன்ன வரை தலைமை நீதிபதி ஆக்கி நீதித் துறைக்குள் அரசியலை கலந்தார் இந்திரா.

ஊழல் மலிந்து போயி ருந்த குஜராத் மற்றும் பீகார் அரசுக ளுக்கு எதிராக மாண வர்கள் மற்றும் ஜெபி போரா ட்டங்கள் ஆரம்பித்து அசை த்துக் கொண்டு இருந் தார்கள்.

இப்பொழுது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் உள் நாட்டு கலகம் என்கிற வார்த்தை யின் படி அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

எல்லா வகை யான சுதந்திர ங்களும் பிடுங்கப் பட்டன, ஒரே நாளில் அரசியல் தலைவ ர்கள் கைது செய்யப் பட்டார் கள்.

நாடாளு மன்றம், உச்ச நீதிமன்றம் எல்லா மும் செயலி ழந்தது. எழுத்து, பேச்சு சுதந்தி ரங்கள் பறி போயின. சஞ்சய் காந்தி வந்தார் ;

பல லட்சம் முஸ் லீம்கள், தலித் துகள் உட் பட்ட எண் ணற்ற எளிய ஏழை மக்களு க்கு கட்டாய குடும்ப கட்டுப் பாடு செய்தார்.

ஊரை அழகாக் குதல் என்று டெல்லி யில் பல லட்சம் மக் களை வெளி யேற்றி துப்பாக்கி சூட்டில் பல மக்கள் இறக்க நேர்ந்தது.

சட்டத் தின் சரத் துகள் திருத்தப் பட்டு இந்திரா வின் வெற்றி செல்லு படியா க்கப் பட்டது. பிரதமர் முதலி யோரின் தேர்வை கோர்ட் விசா ரிக்க முடியாது என்று மாற்றப் பட்டது. 

இந்த கால த்தில் பேருந் துகள் முதலிய எல்லா சேவை களும் ஒழுங் காக நடந்தது. விலை வாசி குறை ந்தது ; மக்கள் விதிகளை பின் பற்றினா ர்கள். என்ன சுத ந்திரம் தான் இல் லவே இல்லை.

தேர்தல் களை வென்று விடலாம் என்று நம்பி இந்திரா அறிவி த்தார். அமைதி யாக காத்தி ருந்த மக்கள் மவுனப் புரட்சி செய் தார்கள். ஜெபியின் ஒருங்கி ணைப் பால் இணைந்த ஜனதா கட்சி இவரை,

இவர் கட்சியை தோற் கடித்தது. வனவாசம் போனார். ஷா கமிஷன் அமைக்கப் பட்டு விசார ணை நடந்த பொழுது ரகசிய காப்பு பிரமாண த்தை காரணம் சொல்லி பதில் சொல்ல மறுத்தார்.

ஸ்டாம்பை ஒட்டா மல்,போலீஸ் காவல் கேட் காமல் இவர் மீதான வழக்கு களில் கோட்டை விட்  டார்கள்.

காந்தி தேசாயை இந்திரா காத்த தற்கு நன்றிக் கடன் போல மொரார்ஜி தேசாய் இவரை விசா ரிக்க தனி நீதி மன்ற ங்கள் அமைக்க வில்லை. சட்ட திருத்த ங்களை திரும்ப பெற்றா ர்கள். 

உள்நாட்டு கலக த்தின் போது அவசர நிலை என்பதை ஆயுத புரட்சி யின் பொழுது என்று மாற்றி னார்கள்.

இவர் களும் மாநில அரசை கலைத் தார்கள். பதவிக் காக அடித்து கொண் டார்கள். மக்கள் நொந்து போனா ர்கள்.

மூன்றே வருட இடை வெளி யில் மீண்டும் இந்திரா வந்தார். பஞ்சாபில் சிரோன் மணி அகாலி தளத்தை சமாளிக்க ஆதர வளித்த பிந்தரன் வாலே குழு பஞ்சாபை வன் முறை பூமியாக்கி கொண்டி ருந்ததது. 

பொற் கோயில் உள்ளே எக்கச் சக்க ஆயுத ங்கள், பஞ்சாபில் பெருங் கொலை கள் என்றி ருக்க இந்திரா பல்வேறு அமைதி முயற்சி களுக்கு பிறகு ராணுவ த்தை அனுப் பினார். 

போர்க்கள பூமி யானது பஞ்சாப். அந்த வன் மத்தோடு அவரின் உயிரை அவரின் காவலா ளிகள் பறித் தார்கள். இந்தியா வை கட்டி ஆண்ட ஒரு வரலாறு முடிவு க்கு வந்தது.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close