உயரமான சைக்கிள்... கியூபர் பெலிக்ஸ் !

ஒருவர் அந்த சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் பெலிக்ஸ் ரமோன் குய்ரொலா செபிரோ.
உயரமான சைக்கிள்... கியூபர் பெலிக்ஸ் !
ஒவ்வொரு படியாக ஏற, ஏற நாமும் நம் பார்வையை ஏற்றிக் கொண்டே போனால் 19 அடியில் போய்  நிற்கிறது. கீழே இருப்பவர் சைக்கிளை விட்டு விட, அதன் பெடல்களை மிதித்து ஓட்டத் தொடங்குகிறார் பெலிக்ஸ்.

கியூபாவின் கடற்கரைப் பகுதிகளில் பெலிக்ஸ் அந்த சைக்கிளை ஓட்டி வரும் போது ஊரே வேடிக்கைப் பார்க்கிறது. காரில் போவ ரெல்லாம் நிறுத்தி போட்டோ எடுக்கிறார்கள். கியூபாவின் ஒரு மினி செலிபிரிட்டி பெலிக்ஸும் அவரது சைக்கிளும்.

உயரமான சைக்கிள்

சமீபத்தில் இவரைப் பற்றி செய்தித் தாள்களில் படித்த அமெரிக்க ரான ரிச்சி ட்ரெம்பிள், உடனடி யாக ஃபிளைட் பிடித்து பெலிக்ஸைப் பார்க்க கியூபா வந்து விட்டார்.

காரணம்… ரிச்சியும் ஒரு “பெரிய சைக்கிள்” காதலர். 20 அடி உயரத்து க்கு ஒரு சைக்கிளை செய்து ஓட்டி, கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்திருக்கிறார். 

யாருடா இது தனக்குப் போட்டியா? என்ற ஆவலோடு வந்தவர், பெலிக்ஸைப் பார்த்ததும் பாராட்டித் தள்ளி விட்டார். ரிச்சி ஒரு அமெரிக்கப் பணக்காரர். 

பெலிக்ஸ் ஒரு கியூப ஏழை. தனக்குக் கிடைத்த பழைய டின்கள், பிளாஸ்டிக் பைப்புகள்,  இரும்புக் கம்பிகள் என எல்லா வற்றையும் கொண்டு தான் பெலிக்ஸ் இந்த சைக்கிளை உருவாக்கி யுள்ளார்.
மேலும், பெலிக்ஸிற்கு மட்டும் சரியான பொருளாதார வசதிகள் இருந்தி ருந்தால் ரிச்சியின் ரெக்கார்டை என்னைக்கோ உடைத்தி ருப்பார்.

தற்போது அவர் ஓட்டிக் கொண்டி ருக்கும் சைக்கிளே 19 அடி, அதாவது ரிச்சியின் கின்னஸ் ரெக்கார்ட் சைக்கிளு க்கு ஒரு அடிதான் குறைவு.

ஆனால், அடுத்து பெலிக்ஸ் தயார் செய்துக் கொண்டி ருக்கும் சைக்கிளின் உயரம் 30 அடிக்கும் மேல்.

அதை கிட்டத் தட்ட தயார் செய்து விட்டார். கொஞ்சம் ஓட்டி மட்டும் பழக வேண்டும். பெரிய சைக்கிளை 100 மீட்டர் தூரத்திற்கு சரியாக ஓட்டினால் தான், கின்னஸில் அதை சாதனையாகப் பதிவார்கள்.

பெலிக்ஸிற்கு இப்போது 53 வயதாகிறது. தன்னுடைய 17வது வயதில், அவர் வீட்டருகில் இருந்த ஒரு வயசான மெக்கானிக், மூன்று பேர் ஒருசேர ஓட்டும் ஒரு சைக்கிளை உருவாக் கினார்.

அதைப் பார்த்ததும், தான் இந்த உலகிலேயே ஒரு பெரிய சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அந்தக் கனவை மிக விரைவில் நிறை வேற்றியும் விடுவார்.

ஆனால், இந்த உயரத்தை எட்டிப் பிடிக்க பல தடை களைத் தாண்டி தான் வந்துள்ளார் பெலிக்ஸ். கியூபாவி லிருந்து பிழைப்புத் தேடி அமெரிக்கா விற்குள் சட்ட விரோத மாக இது வரை நான்கு முறை முயற்சி த்துள்ளார்.
அதில் கடைசி முரை முயற்சி க்கும் போது, மாட்டிக் கொண்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார். 

சிறையில் இருந்தும் கூட, வார்டனிடம் அனுமதி வாங்கி சைக்கிள் தயாரி க்கும் மற்றும் ஓட்டும் பயிற்சி களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

பெலிக்ஸ் தன்னுடைய மனை வியோடு சேர்ந்து வீட்டிலேயே சிறு மளிகைக் கடை யொன்றை நடத்தி வருகிறார்.

இவருக்குப் பல ரசிகர்கள் இருப்பதை உணர்ந்து, கியூபாவின் பிரபல கூல்டிரிங்க்ஸ் நிறுவனம் டைம் ஃப்ளைஸ், தங்களின் பேனரை இவரின் சைக்கிளில் கட்டி விளம்பரம் செய்கின்றனர்.

இது போன்ற சைக்கிள் களைத் தயாரிப்பதை விட, ஓட்டுவது ரொம்பவே கஷ்டம்.

எடை குறைவாக இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு எளிதாக ஓட்ட முடியும். ஆனால், பெலிக்ஸோ தனக்குக் கிடைக்கும் பழையப் பொருட் களைக் கொண்டு தான் இதை உருவாக்குகிறார்.
உயரமான சைக்கிள்... கியூபர் பெலிக்ஸ் !
இதனால், இதன் எடை கூடுதலாக இருக்கும். உலகின் மிகப் பிரபலமான சைக்கிளி ஸ்டுகள் கூட இந்த சைக்கிளை ஓட்ட முடியாது, மிகவும் கஷ்டம் என்று சொல்லி யிருக்கி றார்கள்.

இருந்தும், அடிப்படையில் குத்துச் சண்டை வீரரான பெலிக்ஸ் இது போன்ற சைக்கிளை ஓட்டுவது தனக்கு கஷ்ட மாக இல்லை என்று சொல்கிறார்.

சரி… இது போன்ற உயரமான சைக்கிள் களை உருவாக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, “எனக்கு உயரம் என்றால் ரொம்ப பிடிக்கும்… அதான்” என்று சொல்லி சிரிக்கிறார் பெலிக்ஸ்.
Tags: