இடுப்பு சதையை குறைக்க பயிற்சி !

இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக் கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, 
இடுப்பு சதையை குறைக்க பயிற்சி !
இந்தக் கொழுப் பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவத ற்குக் காரண மாகி விடுகிறது.

இதைத் தவிர, மரபு ரீதி யாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்து க்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் 

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்…
இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டி விடலாம்...  ஒரு சேரில் அமர்ந்தி ருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக் கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டிய படி, எழுந்து எழுந்து உட்காரவும். 

இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்ட த்தை சீராக்க உதவும். தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, 
இடுப்பு சதையை குறைக்க பயிற்சி !
இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.

இப்படி 15 தடவை செய்த பிறகு, இரண்டு கால் களையும் மடக்கிய படியே இடது பக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலை யும் மாற்றி மாற்றி மடக்கவும். 

இதையும் 15 தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வ தால், இடுப்பின் அமைப்பு கட்டுக் கோப்பாக இருக்கும்..
Tags: