ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பா.ஜ.க !





ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பா.ஜ.க !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பா.ஜ.க சார்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப் பட்டதை அடுத்து, எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடை பெற உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பா.ஜ.க !
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யின் பதவிக் காலம் ஜூலை மாதத் துடன் நிறை வடைகிறது. இதை யடுத்து ஜூலை 17ஆம் தேதி, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க அமைச்சர்கள் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர், சோனியா காந்தி, 

சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று பா.ஜ.க சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். 

இதையடுத்து, வரும் 22ஆம் தேதி அனைத்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 
இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க வேட் பாளரை ஆதரிப்பதா அல்லது வேறு பொது வேட் பாளரை நிறுத் துவதா என்பது குறித்து விவாதிக்கப் படுகிறது. 

இதனிடையே சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி ஆதரவு கேட்டுள்ளார்.
Tags: