ஒளி ஆண்டு என்றால் என்ன?

ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது? கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு.
ஒளி ஆண்டு என்றால்


ஒளியின் வேகமானது வெற்றிட த்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோ மீட்டர்கள். தோராய மாக நொடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர்கள் என்று சொல்லலாம்.

அப்படிப் பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித் திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும்.

1 நொடிக்கு = 299,792.458 கிலோ மீட்டர்கள்

1 நிமிடத்திற்கு = 299,792.458 x 60 = 17,987,547.48 கிலோ மீட்டர்கள்

1 மணிக்கு = 17,987,547.48 x 60 = 1,079,252,848.80 கிலோ மீட்டர்கள்

1 நாளைக்கு = 1,079,252,848.80 x 24 = 25,902,068,371.20 கிலோ மீட்டர்கள்

1 வருடத்திற்கு = 25,902,068,371.20 x 365.242 = 9,460,523,256,033.83 கிலோ மீட்டர்கள்

அதாவது, ஒன்பது ட்ரில்லியன் நானூற்றி அறுபது பில்லியன் ஐநூற்றி இருபத்தி மூன்று மில்லியன் இருநூற்றி ஐம்பத்தாறு ஆயிரத்து முப்பத்து மூன்று 

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

( nine trillion four hundred sixty billion five hundred twenty-three million two hundred fifty-six thousand thirty-third) கிலோமீட்டர்கள்.

சுருக்க மாக = 9.4605284 × 10^12 கிலோ மீட்டர்கள்


தோராய மாக 9.46 ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் என்பதே ஒரு ஒளியாண்டு தூரமாகும்.

வானவியல் அலகு (Astronomical Unit-AU)

1 வானவியல் அலகு = 149,597,871 கிலோ மீட்டர்கள்

அதாவது, பூமியின் மையப் பகுதிக்கும் சூரியனின் மையப் பகுதிக்கும் இடைப் பட்ட தொலைவே ஒரு வானவியல் அலகு எனப்படும். 

பூமியானது சூரியனை ஒரு ஒழுங்கான வட்டத்தில் சுற்றி வராது நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்தாலும், தோராய மான ஒரு மதிப்பை நாம் வானவியல் அலகாகக் கொள்கிறோம்.

ஒளி ஆண்டு


பூமியானது தன் நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகே வரும் அண்மை நிலையின் (perehelion) போது இருக்கும் தொலை வையும், 

சூரியனு க்குத் தொலைவே இருக்கும் சேய்மை நிலையில் (aphelion) போது இருக்கும் தொலை வையும் கூட்டி அதனை இரண்டால் வகுத்து வரும் மதிப்பே இந்த வானவியல் அலகு.

சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி?

சூரிய ஒளியானது பூமிக்கு வந்து சேர 8.3 நிமிடங்கள் ஆகும். எனவே,

1 வானவியல் அலகு = 8.3 ஒளி நிமிடங்கள் எனவும் சொல்லலாம்.

1 ஒளியாண்டு = 9,460,523,256,033.83 / 149,597,871 = 63,239.69 வானவியல் அலகுகள்
Tags: