ஜியோ ப்ரைம் என்பது என்ன? | What is Jio Prim? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஜியோ ப்ரைம் என்பது என்ன? | What is Jio Prim?

Subscribe Via Email

இந்திய தொலை த்தொடர்பு துறையில் புயலை கிளப்பி கொண் டிருக்கும் ஜியோ கடந்த 5 மாதங் களாக தன்னுடைய 4G சேவையை இலவச மாக வழங்கி வருகிறது, 


இந்த சலுகைகள் அனைத்தும் வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இந்நிலை யில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ தனது 4G சேவையில் இது வரை 100 மில்லியன் வாடிக்கை யாளர்கள் 

இணைந் துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித் ததோடு, ஜியோ வாடிக்கை யாளர்க ளுக்கு என ஜியோ ப்ரைம் எனும் புதிய திட்டத்தை அறிவி த்தார்.

ஜியோ ப்ரைம் ஒரு பார்வை:

ஜியோ ப்ரைம் திட்டம் என்பது தற்போது ஜியோ நெட் ஒர்க்கில் இணைந் துள்ள 100 மில்லியன் வாடிக்கை யாளர்களு க்கு மட்டுமே பொருந்தும் வகை யில் அறிவிக்கப் பட்டுள்ளது.

1) தற்போது உள்ள வாடிக்கை யாளர்கள் ஜியோ ஹாப்பி நியூயர் திட்ட த்தில் பெற்று வரும் அனைத்து சலுகை களையும் இந்த புதிய திட்டத்தின் மூலமும் பெறு வார்கள்.

2) ஜியோ ப்ரைம் என்பது ஹாப்பி நியூயர் சலுகை யின் வேலிடிட்டி நீட்டிப்பு திட்ட மாகும் அதாவது 99 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்து கொள்வதன் மூலம் ஹாப்பி நியூயர் சலுகை யின் 

வேலி டிட்டியை 1 ஆண்டு காலம் நீட்டிப்பு செய்து கொள்ள முடியும் அதாவது வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இதற் கான வேலிடிட்டி நீட்டிப்பு செய்யப் படும்.

3)இந்த ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய வரும் மார்ச் 1 ஆம் தேதியி லிருந்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.மார்ச் 31 ஆம் தேதிக்கு பின் இந்த திட்டத்தில் இணைய முடியாது.

4) ஜியோ ப்ரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கை யாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பின் ஜியோவின் வழக்க மான ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங் களை மட்டுமே பயன் படுத்த முடியும்.

5) தற்போது வாடிக்கை யாளர்கள் பெற்று வரும் இலவச சேவை களை தொடர்ந்து பெற வேண்டும் எனில் அதாவது 1ஜிபி / ஒரு நாளைக்கு 

மற்றும் இலவச அழைப் புகள் , குறுந்தக வல்கள், ஜியோ ஆப் சேவை களை தொடர்ந்து பெற மாதத் திற்கு 303 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.

6) எளிமை யாக சொல்ல வேண்டும் எனில் தற்போது பெற்றுவரும் இலவச  சலுகைகளு க்கு வேலிடிட்டி நீட்டிப்பு செய்ய ( ஒரு வருடத் திற்கு மார்ச் 31, 2017 இல் இருந்து மார்ச் 31,2018 வரை) 

ஒரே ஒரு முறை 99 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதை தவிர்த்து இலவச பலன்க ளை தொடர்ந்து பெற மாதம் தோறும் 303 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.

7) தற்போது வழங்கப் படும் இலவச சேவைகள் கட்டண மாக மாற்றப் படுவதால் அணைத்து வாடிக் கையாளர் களும் சீரான மற்றும் அதிவேக 4G சேசேவை கிடைக் கும் என்பது குறிப்பிடத் தக்கது.


ஜியோ ப்ரைம் சேவை பயன்படுத்த விரும்பா தவர்களுக் கான வழக்க மான ஜியோ 4G மாதாந்திர திட்டங்கள்

8) வழக்க மாக பிற நிறுவனங் களின் சேவையை பெற மாதம் தோறும் அதிக கட்டணம் செலுத்தி வரும் வாடிக்கை யாளர்கள் இதன் மூலம் அதிக பலன் பெறு வார்கள் 303ரூபாய் என்ற ஒரு நியாய மான கட்டண த்தில் உள்ளூர் 

மற்றும் வெளியூர் குரல் அழைப்புகள் மற்றும் மாதத்தி ற்க்கு 30 ஜிபி டேட்டா( 1 ஜிபி/ ஒரு நாளை க்கு) மற்றும் குறுந்தகவ ல்கள், ஜியோ ஆப் சேவை களை பயன் படுத்த முடியும்.

அவ்வாறு ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பாத வாடிக்கை யாளர்கள் ஜியோ வழங்க இருக்கும் பிற வழக்க மான மாதாந்திர திட்டங் களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இது மட்டும் அல்லாமல் ஜியோ வரும் 2017 ஆம் ஆண்டு இறுதி க்குள் தனது 4G கவரேஜை 99 சதவீதம் இந்தியா முழுமை க்கும் விரி வாக்கம் செய்ய உள்ளதா கவும், 

மேலும் தனது டேட்டா கையாளும் திறனான “3.3 கோடி GB /ஒரு நாளை க்கு” என்பதை இரண்டு மடங்காக உயர்த்த உள்ளதாக அறிவித் துள்ளது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close