கழிவறையை காணோம் - புகார் செய்த பெண்கள் !

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் அருகேயுள்ள அமர்பூர் கிராமத்தில் வசிக்கும் 75 வயதான தாயும் அவரது மகளும், தங்களது கழிவறையைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர். 

கழிவறையை காணோம் - புகார் செய்த பெண்கள் !
பெலா பட்டேல் என்கிற அந்த மூதாட்டி, தன் வீட்டில் கழிவறை இல்லை என்பதால் 'ஸ்வச் பாரத்' திட்ட த்தின் கீழ் கட்டித் தரவேண்டி கிராம பஞ்சாய த்துக்கு மனு செய்தி ருக்கிறார். 

ஆனால், ஏற்கெனவே பஞ்சாயத்து சார்பில் கழிவறை கட்டிக் கொடுத்து ள்ளதாகப் பதில் வந்துள்ளது. 

இந்தப் பதிலைக் கண்டு ஆச்சர்ய மடைந்த பாட்டிக்கு பின்னர் தான் தன் பெயரை வைத்து அதிகாரிகள் ஏமாற்றி யிருப்பது தெரிய வந்தது.

'100 சதவிகிதம் கழிவறைகள் கொண்ட பகுதியாக, பெந்தரா பகுதி கடந்த நவம்பரில் 'ஸ்வச் பாரத்' திட்டத்தால் அறிவிக்கப் பட்டது. கிராம சபை என் வீட்டில் கழிவறை கட்டி யுள்ளதாக ஆவணங்கள் வைத் துள்ளது. 
அந்தக் கழிவறையைக் காண வில்லை. ஒரு வேளை யாராவது திருடிச் சென்றி ருக்கலாம்' என்று காவல் நிலைய த்தில் பெலா பட்டேலும் அவரது மகளும் தனித் தனியே புகார் அளித்துள்ளனர்.

'இப்படி தவறான ஆவணங் களை உருவாக்கி, மக்களின் பணத்தை அதிகாரி களும் அரசியல் வாதிகளும் திருடுவது தெரிந்தாலும், யாருமே இதை எதிர்த்துக் குரல் கொடுப்ப தில்லை. 

இந்த பாட்டி தான் முதல் முதலாக பூனைக்கு மணி கட்டியதைப் போல செயல் பட்டுள்ளார்' என பெயர் சொல்ல விரும்பாத செயல் பாட்டாளர் செய்தியா ளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமர்பூர் காவல் நிலைய அதிகாரி நிக்கோலஸ் இது குறித்து தெரிவிக் கையில், 'முதலில் புகாரைப் பார்த்த வுடன் இவர்கள் ஏதோ நக்கல் செய்கிறார்கள் என்று தான் நினைத்தோம். 

ஆனால், பெலா பட்டேலும் அவரது மகள் சந்திரா பட்டேலும் முறைப் படி தங்கள் வீட்டில் கழிவறைக் கட்டி யுள்ளதாகக் கூறும் அரசு ஆவணங் களின் நகல்களோடுதான் புகார் அளித்து ள்ளனர். 

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித் துள்ளார்.

இதனிடையே இந்தக் குற்றச் சாட்டை மறுத்து, அமர்பூர் பஞ்சாயத்துத் தலைவி சாவித்ரி தேவி, 'தனித்தனி யாக கழிவறை களைக் கட்டி 
அதற்கான பணத்தை ஒதுக்க முடியாது என்பதால், பத்து வீடுகளு க்கும் சேர்த்து ஒதுக்கி வருகிறோம். 

அதற்குள் இவர்கள் அவசரப் பட்டு விட்டார்கள். விரைவில், இரு வருக்கும் கழிவறைகள் அமைத்து தருவோம்' என்று தெரிவித் துள்ளார்.
Tags: