pH என்ற எழுத்தின் அர்த்தம் என்ன? | What is the meaning of the pH? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

pH என்ற எழுத்தின் அர்த்தம் என்ன? | What is the meaning of the pH?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
வேதியியலில், ஒரு கரை பொருளைக் (Solute) கரைக்கும் கரைப் பானாக (Solvent) நீர் இருக்கும் திரவத்தினை (Aqueous Solution) மதிப்பிடும் ஒரு மதிப்பாகும். 

pH

இது 0வில் இருந்து 14 வரையில் மதிப்புகளைக் கொண்டிரு க்கும். இரு வேறு எல்லைகளில் இருக்கும் பண்பினைக் குறிக்கும் மதிப்புகள் இவை. 

அதாவது அமிலத் தன்மையையும் (Acidic) காரத் தன்மையையும் (basic or alkaline) குறிக்கி ன்றன. அமிலத் தன்மையும் காரத் தன்மையும் இல்லாது இருப்பது நடுநிலை (Neutral) எனப்படும்.


pH (potential of hydrogen) அளவை யில் 7 என்பது நடுநிலை. 7க்கு கீழே இருப்பவை அமிலத் தன்மையும், 7க்கு மேலே இருப்பவை காரத் தன்மையும் கொண்டி ருக்கும். 

7க்கு கீழே குறையும் ஒவ்வொரு மதிப்பும் அதன் முந்தைய மதிப்பை விட 10 மடங்கு அதிகமான அமிலத் தன்மையைக் கொண்டி ருக்கும். 

அதே போன்று 7க்கு மேலே கூடும் ஒவ்வொரு மதிப்பும் அதன் முந்தைய மதிப்பை விட 10 மடங்கு அதிகமான காரத் தன்மையைக் கொண்டி ருக்கும்.

சுத்தமான நீர் நடுநிலை. 

அதன் pH மதிப்பு 7 ஆகும். அதனுடன் வேதியியல் பொருட்கள் கலக்கப்படும் பொழுது, அப்பொருளைப் பொருத்து அது அமிலத்த ன்மையுடைய தாகவோ காரத் தன்மையுடைய தாகவோ மாறும்.

உதாரணம் கூறி விளங்க வைப்ப தானால், வெப்பமும் குளிரும் (Hot and Cold) இரு வேறு எல்லைகள். அவை களை அளக்கும் அளவை வெப்பநிலை (Temperature) என்கிறோம். 

சுடுநீரையும் குளிர் நீரையும் ஒன்றாகக் கலந்தால் அவைகள் ஒன்றின் தன்மையை ஒன்று போக்கிக் கொண்டு சமநிலைக்கு வரும். 

அதே போன்று அமிலமும், காரமும் இருவேறு எல்லைகள். அவற்றை அளக்கும் அளவை pH மதிப்பு என்கிறோம். 

அமில த்தையும், காரத்தை யும் ஒன்றாகக் கலந்தால், அவைகள் ஒன்றை ஒன்று போக்கிக் கொண்டு தண்ணீராக மாறி விடும்.

அதி அமிலத் தன்மையும், அதி காரத் தன்மையும் வினை புரிபவைகள் (Reactives).

pH கண்டு பிடித்தவர் யார்? pHன் விரிவாக்கம் என்ன?

டென்மார்க் நாட்டு விஞ்ஞானி யான, Søren Peder Lauritz Sørensen (SPL Sørensen) என்பார் Carlsberg Laboratoryல் 1909ம் ஆண்டு இதனை அறிமுகப் படுத்தினார். 

அப்பொழுது அவர் p↓H என்றுதான் குறிப்பிட்டி ருந்தார். அதாவது p என்ற சிறிய எழுத்திற்கு அடுத்து Subscriptஆக H என்ற பெரிய எழுத்து வரும். அதாவது Power of Hydrogen என்பதைக் குறிக்குமாம். 

ஆனால், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன் மொழி களிலும் இதனைக் குறிப்பிடு கின்றனர். எதுவாக இருந்தாலும் ஒரே பொருளைத் தான் தருகின்றன.

pH எப்படி மதிப்பிடப் படுகின்றது?

ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் அயனிகளின் மோல் மதிப்புச் செறிவினைக் (Molar Concentration) கொண்டு pH மதிப்பு மதிப்பிடப் படுகின்றது. 

கணித ரீதியாக, இதனை ஹைட்ரஜன் அயனிகளின் மோல் மதிப்புச் செறிவின் பத்தினடி மான மடக்கையின் எதிர் மதிப்பாகச் சொல்வார்கள்.

pH = -log↓10 [H↑+]

ஹைட்ரஜன் அயனி களுக்குப் பதிலாக ஹைட்ராக் ஸானியம் (H↓3O) அயனி களைக் கொண்டும் குறிப்பிடு வார்கள்.

ஹைட்ரஜன் அயனிகள் கூடக் கூட அமிலத் தன்மை அதிகரிக்கும்; குறையக் குறைய காரத் தன்மை அதிகரிக்கும். அல்லது,

pH என்ற எழுத்தின் அர்த்தம்


ஹைட்ராக் ஸானிய அயனிகள் குறையக் குறைய அமிலத் தன்மை அதிகரிக்கும்; கூடக் கூட காரத் தன்மை அதிகரிக்கும்.

அதனால் தான், நம் உடலில் அமிலம் பட்டு விட்டால் தண்ணீரை ஊற்று கிறோம். 

அது அமிலத்துடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனி களைக் குறைத்து விடும். அதைவிட காரத்தன்மை உடையவை களைச் சேர்த்தால் இன்னும் விரைவாக அமிலத் தன்மை மட்டுப் பட்டு விடும். 

(இங்கே காரம் என்று குறிப்பிடுவது மிளகாய் காரம் அல்ல. அயனி உப்பு என்று பொருள் கொள்க.)

உதாரணம்

அமிலம் = வினிகர், எலுமிச்சை சாறு, மின்கல அமிலம், வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலம், ஆரஞ்சு சாறு, கடுங்காப்பி, சிறுநீர், எச்சில்

காரம் = சலவைத் தூள், அம்மோனியா, கடல் நீர், சமையல் சோடா, சவர்க் காரம், ப்ளீச்சிங் தூள்

உதவித்தளங்கள் : http://en.wikipedia.org/wiki/PH, http://www.epa.gov/acidrain/measure/ph.html, http://www.engineeringtoolbox.com/ph-d_483.html, http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/chemical/ph.html
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause