ஜெயலலிதா கதையும் அ.தி.மு.க. நிலையும் !

ஆளையே காலி செய்து விடும் அக்னி நட்சத்திர வெயில் பொழுது ஒன்றில், அலுவல கத்துக்கு விடுமுறை யான ஒரு நாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் 
ஜெயலலிதா கதையும் அ.தி.மு.க. நிலையும் !
அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்து கொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. 

அமரர் களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. 

அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்தி களையும் படித்து விட்டு வெளியே வந்தார். 

இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்' என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

இன்றைய நிலைமை யில் அ.தி.மு.க.!

'வாழ்க்கை யில் ஏழு அதிசயங்கள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அவை, இரண்டு தான்' என்று ஒரு முறை சொன்னார் தீபம் பார்த்தசாரதி. 

பின், அதற்கான விளக்கத்தையும் இப்படிச் சொல்வார். 'வாழ்க்கை யில் யாரை, எப்போது சந்திக்கிறோம் என்பது ஓர் அதிசயம்; யாரை, எப்போது பிரிகிறோம் என்பது இரண்டாவது அதிசயம்.

சிலரைச் சந்தித்த பிறகு மேம்படுகிறோம்; சிலரைச் சந்தித்த பிறகு நாசமாகிப் போய் விடுகிறோம். சிலரின் பிரிந்த துயரத்தை வாழ் நாளின் இறுதி வரை சுமக்க வேண்டியிருக்கிறது. 
ஜெயலலிதா கதையும் அ.தி.மு.க. நிலையும் !
சிலரைப் பிரிந்த பிறகு தான் உருப் படுகிறது.' 'தீபம்' பார்த்த சாரதி சொல்வதைப் போல், சசிகலாவின் கதையும் ஓர் அதிசயம் தான்... 

ஆம், ஜெ-வைச் சந்தித்த பிறகு அவர் மேம்பட்டார்; ஆனால், இப்போது என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.  

அதே போல், இன்றைய அ.தி.மு.க- வின் ஆட்சியும் அப்படித் தான் இருக்கிறது. 

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு இடையே அந்தக் கட்சி பயணித்துக் கொண்டிரு ந்தாலும், எந்த நேரத்திலும் அது பள்ளத்தில் விழுந்து விடும் சூழ்நிலை யிலேயே இருக்கிறது' என்றார், அந்த நிர்வாகி.

சசிகலா

உண்மை யிலேயே, அவர் அ.தி.மு.க -வின் விசுவாசி தான். ஆனால், தற்போதைய ஆட்சி பிடிக்காமல் அவர் நம்மிடம் சொன்ன அத்தனை விஷயங்களும் அருமை. அப்போது தான் தெரிந்து கொண்டேன், 

அ.தி.மு.க- காரரான அவருக்கே இந்த ஆட்சி பிடிக்க வில்லை என்பதை. பிளவு பட்ட அ.தி.மு.க-வை; பிரயோஜன மில்லாத 

ஆளும் கட்சியை; பணம், பதவி பித்துப் பிடித்து அலையும் அந்தக் கட்சியின் ஆட்களை எல்லாம் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்தார்.

இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தவராய் ஜெயலலிதா சொன்ன ஒரு குட்டிக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். இப்போது அது எதற்கு'என்றேன். 

இன்றைய நாட்டு நடப்பே அந்தக் கதையில் தான் இருக்கிறது என்றார். சரி... சொல்லுங்கள் என்றேன். அவரும் ஆரம்பித்தார்...

ஜெ. சொன்ன குட்டிக்கதை!

அரசர் ஒருவர் தன் அமைச்சரிடம், 'இங்கு உண்டு... அங்கு இல்லை; இங்கு இல்லை... அங்கு உண்டு; இங்கும் இல்லை... அங்கும் இல்லை; இங்கும் உண்டு... அங்கும் உண்டு. 

இதற்குச் சரியான விளக்கத்தை என் கண்முன்னே காட்டுங்கள்' என்று கட்டளை யிட்டார். இதற்காகக் கொஞ்சம் காலஅவகாசம் கேட்ட அமைச்சர், வெளியே சென்று வரவும் அனுமதி பெற்றார்.
பின்பு, தன்னுடன் நான்கு பேரை அழைத்து வந்த அமைச்சர், அரசரைச் சென்று அந்த நால்வரைப் பற்றியும் சொல்லி... நீங்கள் கேட்ட தற்கான விடையும் இது தான்' என்றார். 

நான் கேட்ட தற்கும், இவர்களு க்கும் என்ன சம்பந்தம் என்று அரசர் கேட்க... விளக்கம் கொடுத்தார் அமைச்சர்.

நிர்வாகி சொன்ன கதைக்கு (குட்டிக் கதை) உரியவர்கள்...

தான் அழைத்து வந்த நான்கு பேரில் முதலாமவனை அழைத்து, 'இவன் ஒரு கொள்ளைக்காரன்; இவன் ஊர்ப் பணத்தை எல்லாம் கொள்ளையடித்து 

நல்ல வசதியோடு வாழ்கிறான்; இங்கு, மகிழ்ச்சி யோடு இருக்கிறான்; ஆனால், இவனுக்கு மேலுலகில் இடமில்லை. 

ஆக, நீங்கள் சொன்ன முதல் புதிருக்கு இவனே உதாரணம்' என்றவர்... இரண்டா மவனை அழைத்து, 'ஞானியான இவர், எப்போதும் ஆண்ட வனையே நினைத்துக் கொண்டு இருக்கிறார்;
ஜெயலலிதா கதையும் அ.தி.மு.க. நிலையும் !
ஆகையால், இந்த உலகத்தில் இவருக்கு எதுவும் தேவை யில்லை. இதனால், இந்த ஞானிக்கு மேலுலகில் இடமுண்டு' என்றார். 

பின்னர் மூன்றாமவனை அழைத்து, 'பிச்சைக் காரனான இவனுடைய வாழ்க்கை பரிதாப மானது; இவனுக்கு இந்த வாழ்க்கை ஒரு தண்டனை யாகவே இருக்கிறது; 

மேலும், இவன் எந்தவொரு நல்ல செயலையும் செய்ய வில்லை. எனவே, இவனுக்கு இங்கும் இட மில்லை... அங்கும் இடமில்லை' என்றார்.

பிறகு, நான்காமவனைப் பார்த்து, 'வள்ளலான இவன், தன்னிடம் இருப்பதைப் பிறரு க்கும் கொடுத்து வாழ்கிறான். அதனால், இவனுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கிறது.

மேலும், இவனை மக்கள் மதிக்கிறார்கள்... புகழ்கிறார்கள். ஆகவே, இவனுக்கு இரண்டு இடங் களிலும் இடம் உண்டு' என்றார். 

அருமையான விளக்கம் கொடுத்த அமைச் சருக்கு அரசர் பரிசை அள்ளி வழங்கினார் என்று ஜெ. சொன்ன அந்தக் கதையை நிறைவு செய்தார் அ.தி.மு.க  நிர்வாகி.

கொள்ளைக் கும்பல்!
இந்தக் கதைக்கும், இப்போதைய நாட்டு நடப்பு க்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே'' என்றேன். இருக்கிறதே என்றவர், பின் தொடர்ந்தார். தற்போது தமிழ்நாடு, கொள்ளை யடிக்கும் நாடாக மாறியிருக்கிறது. 

அம்மாவின் (ஜெ-வின்) சொத்துக் களையும், ஆளும் கட்சி என்ற பெயரில் தமிழ் நாட்டையும் மொத்த மாகக் கொள்ளை யடித்துக் கொண்டி ருக்கும் மன்னார்குடி கூட்டம் தான் இங்கே கொள்ளைக் கும்பல். 

இப்போது மமதையில் மிதக்கும் அவர்களுக்கு இனி வரும் காலங்களில் மகிழ்ச்சியே இருக்காது. 

இதைத் தான், 'இங்கு உண்டு... அங்கு இல்லை' என்ற புதிரை மாற்றி, 'இப்போது உண்டு... இனி வரும் காலங் களில் இருக்காது' என்று சொல்லலாம்...

மக்கள் ஆதரவு!

அதே போல், இரண்டாவ தாக நான் சொன்ன ஞானி என்று அ.தி.மு.க-வில் தற்போது யாரும் கிடையாது. ஆனால், அம்மாவின் உண்மை யான விசுவாசியாக மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ் அறியப் படுகிறார். 

அவருக்கும், அவரது அணியி னருக்கும் பொது மக்கள் ஆதரவு இருக்கிறது. இவர் களைப் பொறுத்த வரை அ.தி.மு.க -வை அம்மா வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான்.
ஜெயலலிதா கதையும் அ.தி.மு.க. நிலையும் !
தற்போது அவர்களிடம் அதிகாரம் செய்வ தற்கான பலம் இல்லை. ஆனால், விரை விலேயே அதற்கான தகுதியை அடைந்து விடுவர். 

இதைத் தான், 'இங்கு இல்லை... அங்கு உண்டு' என்ற புதிரை மாற்றி, 'இப்போது இல்லை... இனிவரும் காலங் களில் கிடைக்கும்' என்று சொல்லலாம்...

மன்னார்குடி ஆதரவாளர்கள்!

அதே போன்று, மூன்றாவ தாக நான் சொல்வது மன்னார்குடி கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு அடிமை களாக இருக்கும் எம்.எல்.ஏ - க்களும் அவர்களுடைய ஆதரவா ளர்களும் தான். 

அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பிச்சைக் காரர்களாக இருக்கும் இந்த மனிதர் களுக்குக் காலம் முழுவதும் இது தான் தண்டனை யாக இருக்கும். 
அத்துடன், இவர்கள் மக்களுக்கு எந்தவொரு நல்ல செயலையும் செய்ய வில்லை. 

ஆகவே, இவர்களுக்கு இனிவரும் காலங்களில் எங்கும் (எந்த அணியிலும்) இடமிருக்காது. 'இங்கும் இல்லை... அங்கும் இல்லை' என்ற புதிருக்கு இவர்கள் தான் சரியான உதாரணம்.

வாழும் வள்ளல்கள்!

இறுதியாக வள்ளல் என்று நான் சொல்வது, வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரையும், புரட்சித் தலைவி அம்மா வையும் தான். 

இவர்கள் இருவரும் மக்களுக் காக வாழ்ந் தவர்கள்; அதனால் தான் இன்றும் மக்கள் மனங்களில் குடி கொண்டிருக் கிறார்கள்; புகழுடன் போற்றப் படுகிறார்கள். 
ஜெயலலிதா கதையும் அ.தி.மு.க. நிலையும் !
இவர்களுடைய பெயர் களைச் சொன்னாலே மக்களின் ஆதரவு எங்கும், எப்போதும் உண்டு என்று 

இன்றைய நாட்டு நடப்பை ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதை மூலம் மிகவும் அருமை யாகவும், அழகாக வும், ஆழமா கவும் சொன்னார்.

இரண்டு மணி நேரத்து க்குப் பிறகு... அவரிட மிருந்து விடை பெற்ற நான், அவருடைய இரண்டு கைகளையும் பிடித்து, ''சூப்பர்'' என்றேன். 

புரியாதவர் களுக்குக் கூடப் புரியும் வகையில் இருக்கும் இந்தக் கதையை முதலில், மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
Tags: