பல ஆண்டுக்குப் பின் மீண்டும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் !

இந்த வருட ஹஜ் பயணத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள, நாடு முழுவதிலிருந்து கலந்து கொண்ட சுமார் 500க்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்களுக்கு,

புனித ஹஜ்ஜின் போது செய்து தர வேண்டிய போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தருதல், 


சவுதி அரேபியாவின் சட்ட திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு என பலவகையான வருடந்திர 3 நாள் பயிற்சி முகாம் மும்பையில் ஆரம்பமாயின.

இதில் பயிற்சி பெறுவோருடன் கூடுதலாக இந்திய ஹஜ் கமிட்டி அதிகாரிகள், சவுதி தூதரக அதிகாரிகள், மும்பை முனிசிபல் கவுன்சில் அதிகாரிகள்,

சவுதி ஏர்லைன்ஸ் அதிகாரிகள், ஏர் இந்தியா அதிகாரிகள், சுங்கத் துறையினர், இமிக்கிரேசன் துறையினர், டாக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் கலந்து கொண்டு உரை யாற்றிய மத்திய சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி என்பவர் 2012 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க 


ஹஜ் பயணி களுக்காக மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து மும்பை ஜித்தா இடையே கப்பல் போக்குவரத்தை துவங்கு வதற்காக கப்பல் போக்குவரத்து அமைச் சகத்துடன் இணைந்து 

நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் இதனால் ஹஜ் பயணக் கட்டணங்கள் கணிசமாக குறைய வாய்ப்புள்ள தாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், மும்பை ஜித்தா இடையே யுள்ள சுமார் 2300 நாட்டிகல் மைல் தூரத்தை கடக்க முன்பு 12 முதல் 15 நாட்கள் வரை ஆனதாகவும் தற்போ துள்ள நவீன கப்பல்கள் 

இதே தூரத்தை 2 முதல் 3 நாட்களில் கடந்து விடும் என்றும் இந்த சொகுசுக் கப்பல் களில் சுமார் 4,000 முதல் 5,000 பயணிகள் வரை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவின் 21 சர்வதேச விமான நிலையங் களிலிருந்து புனித ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


2016 ஆம் ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 99,903 பேரும், தனியார் நிறுவ னங்கள் மூலம் சுமார் 36,000 பேரும் ஹஜ் பயணம் மேற்கொண் டுள்ளனர்.

நடப்பு 2017 ஆம் வருடம் ஹஜ் கமிட்டி மூலம் சுமார் 125,025 பேரும், தனியார் நிறுவனங்கள் மூலம் சுமார் 45,000 பேர்களும் என மொத்தம் 1,70,025 பேர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வுள்ளனர். 

இது கடந்த ஆண்டை வீட சுமார் 34,005 பேர் அதிகம். இதுவரை 129,196 ஆன்லைன் விண்ணப் பங்கள் பெறப் பட்டுள்ளது.

Tags: