சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள் !

பிறப்பு என்றால் நிச்சயம் இறப்பும் இருக்கும். ஆனால் சில விலங்குகள் தன் துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும் போது உயிரைத் துறக்கும் என்பது தெரியுமா?
சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள் !
ஆம், கீழே கொடுக்கப் பட்டுள்ள விலங்குகள், இனச்சேர்க்கையில் ஈடுபடும் போதே, உயிரை விடுபவைகளாகும். சரி, இப்போது இனச்சேர்க்கையின் போதே உயிரை விடும் அந்த விலங்குகள் எவையென்று பார்ப்போம்.

பச்சோந்தி வகைகள் (Furcifer Labordi Chameleons)

இந்த வகையான பச்சோந்திகள் இனச் சேர்க்கையின் போது இறந்து விடுமாம். ஆராய்ச்சி யாளர்களின் படி, இந்த பச்சோந்திகள் இனச் சேர்க்கைக்கு முயற்சிக்கும் போது ஒன்றை ஒன்று அழித்துக் கொள்ளாது. 

மாறாக இனச்சேர்க்கையின் போது, அதன் உடலினுள் சுரக்கப்படும் அதிகப் படியான ஹார்மோன்களால் இறந்து விடுமாம்.

ஆண் ஆன்டிசினஸ் (The Male Antechinus)
சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள் !
இந்த விலங்கு இடைவேளை இல்லா 14 மணிநேர உடலுறவு காலத்தில் இறந்து விடுகின்றன. இனப்பெருக்க காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால், அதன் நோயெதிர்ப்பு மண்டலம் அழிக்கப் படுகிறது. 

இதனால் கல்லீரலில தொற்றுக்கள், இரத்தத்தில் மற்றும் குடலில் கிருமிகளின் பெருக்கத்தால், ஆண் ஆன்டிசினஸ் இனம் இறப்பை சந்திக்கிறது.

ஆண் ஆஸ்திரேலிய ரெட்பேக் சிலந்திகள் (Male Australian Redback Spiders)
சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள் !
இந்த வகை சிலந்திகள் உறவு கொண்ட பின் தன் உயிரை விடும். அதுவும் அவைகள் தெளிவாக பாலியல் தற்கொலை செய்து கொள்ளும். 

ஆண் லிட்டில் ரெட் கலூட்டா
சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள் !
பழமையான புல்வெளியில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்த இந்த ஆண் லிட்டில் ரெட் கலூட்டாவும், உறவு கொள்ளும் போது உயிரை விடும். 

வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகையைச் சார்ந்த இதன் ஆண் இனம், உறவு கொண்ட பின் இறந்து விடும்.

ஆண் பிரேசிலிய ஸ்லெண்டர் ஆப்போசம்ஸ் 
சேர்க்கையின் போது உயிரை விடும் விலங்குகள் !

ஆராய்ச்சி யாளர்களின் படி, இந்த வகை விலங்கின் ஆண் இனம் உறவு கொண்ட பின்னும், பெண் இனம் பிரசவத்திற்கு பின்னும் இறந்து விடுமாம்.
Tags: