சந்தேக பட வைக்கும் தனுஷ் சான்றிதழ்கள் !





சந்தேக பட வைக்கும் தனுஷ் சான்றிதழ்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று ஒரு தம்பதியரால் தொடரப்பட்ட வழக்கு, ஆவணங்கள் குளறுபடியால் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
சந்தேக பட வைக்கும் தனுஷ் சான்றிதழ்கள் !
சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச் செல்வன் தான் நடிகர் தனுஷ்’ என்று மதுரை மாவட்டம், மேலூர் மலம் பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர், சொல்லி வந்தனர். 

வயதான காலத்தில், தங்களைக் கவனிக்க ஆள் இல்லா ததால் கஷ்டப் படுகிறோம். 

கஸ்தூரி ராஜா வீட்டில் தனுஷ் என்ற பெயரில் வசிக்கும் எங்கள் மகன், எங்கள் பராமரிப்புச் செலவுக்கு மாதம் தோறும் 65 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தர விட வேண்டும் எனக் கோரி மேலூர் நீதிமன்ற த்தில் வழக்குத் தொடர் ந்தனர். 
பணம் பறிக்கும் எண்ணத் துடன் போடப் பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. 
கலைச்செல்வனின் அங்க அடை யாளங்கள் குறிப்பிடப் பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழை, அந்தத் தம்பதியர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். 

வழக்கில் முகாந்திரம் இருப்பதாகச் சொன்ன நீதிபதி, தனுஷை நீதிமன்ற த்தில் ஆஜராக உத்தர விட்டார். 

பிப்ரவரி 28-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தனுஷ் ஆஜரானார். அவருடன் இயக்குநர் கஸ்தூரி ராஜா, அவருடைய மனைவி விஜயலட்சுமி வந்தனர்.

இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றிய தாகவும் தனுஷ் தரப்பில் தெரிவித்தனர். 

ஆனால், அவருடைய பள்ளி மாற்றுச் சான்றி தழில் அங்க அடை யாளங்கள் குறிப்பிடப் படவில்லை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி தரப்பில் சந்தேகம் கிளப்பப் பட்டது. 
இவர்கள் அளித்த சான்றி தழில் உள்ள அங்க அடை யாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின் றனவா என்பதைச் சரி பார்த்தார்கள். 

இதற்காக நீதி மன்றத்தில் மருத்துவச் சோதனை நடத்தப் பட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், 

பெயர் மாற்றம் செய்ததற் கான கெஸட் நகல்கள் ஆகிய வற்றில் உள்ள விவரங்கள் பல கேள்வி களை எழுப்பியதால் ‘சான்றி தழ்களில் சந்தேகம் உள்ளது’ என கதிரேசன் - மீனாட்சி தரப்பின் வழக்கறிஞர் சொன்னார்.

மருத்துவச் சோதனைக் காக நீதிமன்றத்தின் பதிவாளர் அறைக்கு தனுஷ் அழைத்துச் செல்லப் பட்டார். 

அங்கு பதிவாளர்கள் இளங்கோவன், உமா முன்னிலை யில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரி பார்க்கப் பட்டன. அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்த தனுஷின் முகம் மிகவும் வாடிப் போயிருந்தது. 
நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிக்கும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள், தனுஷுக்கு சோதனை நடந்த அறையைச் சுற்றிலும் நின்று கொண்டனர்.

கஸ்தூரி ராஜா பி.ஜே.பி-யில் இருப்பதால் மத்திய அரசு வீரர்கள் இப்படி பாதுகாப்புக் கொடுக்கிறார்கள் என மீடியா வட்டாரத்தில் பேச்சுக் கிளம்பியது. 

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தம்பி யோகியும் பாதுகாப்புக்கு ஜிம்பாய்ஸ் களை அழைத்து வந்திருந்தார். தனுஷின் வழக்கறிஞர் இருளப்பன், ‘‘இது பொய் வழக்கு. 

கஸ்தூரி ராஜாவின் மகன் வெங்கடேஷ் பிரபு தான் தனுஷ். அதற்கான ஆவணங் களைச் சமர்ப்பி த்துள்ளோம். 

மருத்துவப் பரிசோதனை அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் போது உண்மை தெரியவரும்’’ என்றார். கதிரேசன் - மீனாட்சி தம்பதியிடம் பேசினோம். 
எங்கள் மகன் கலைச்செல்வன் தான் தனுஷ். சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் எங்களைத் தேடி வந்து விடுவான் என்று காத்திருந்தோம். 

ஆனால், அவனை கஸ்தூரி ராஜா குடும்பம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கிறது. அதற்கான எல்லா ஆதாரங் களையும் சமர்ப்பித் துள்ளோம். 

ஏழையான நாங்கள் நீதிமன்றத்தை தான் நம்பியுள்ளோம் என்றனர் அழுதபடி. இவர்களின் வழக்கறிஞர் டைட்டஸிடம் பேசினோம். 

தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், தனுஷ் என்று 2003-ல் கெஸட்டில் மாற்றி விட்டோம் என்றும் சான்றி தழ்களை அவர்கள் சமர்ப்பி த்துள்ளனர். 

அந்தச் சான்றி தழ்களில் பல சந்தேகங்கள் உள்ளன. கலைச்செல்வன் என்ற தனுஷ், வீரகுடி வெள்ளாள இனத்தைச் சேர்ந்தவர். 

ஆனால், கம்பம் அருகே சங்கரபுரத்தைச் சேர்ந்த கஸ்தூரி ராஜாவும், அவர் மனைவியும் பி.சி வகுப்பான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

ஆனால், தனுஷின் பள்ளி மாற்றுச் சான்றிதழில், எஸ்.சி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எஸ்.சி-யில் என்ன பிரிவு என்று குறிப்பிடப் படவில்லை. 
சந்தேக பட வைக்கும் தனுஷ் சான்றிதழ்கள் !
பி.சி வகுப்பைச் சேர்ந்த ஒருவர், எதற்காக தன் பிள்ளையின் சான்றிதழில் எஸ்.சி என்று குறிப்பிட வேண்டும்? 

எனவே, இந்தச் சான்றிதழ் களை ஆய்வு செய்ய வேண்டும். இந்தச் சான்றிதழை வழங்கிய வர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.

கஸ்தூரி ராஜா என்ற பெயரில் நீண்ட காலமாக சினிமா எடுத்து வந்தாலும், தன் ஒரிஜினல் பெயரான கிருஷ்ண மூர்த்தி என்பதை, கஸ்தூரி ராஜா என்று அதிகார பூர்வமாக கெஸட்டில் வெளியிட்டது 2015-ம் ஆண்டில் தான். 

ஆனால், அதற்கு முன்பாகவே வெங்கடேஷ் பிரபு என்ற பெயரை தனுஷ் என்று கெஸட்டில் மாற்றிய தாகக் காட்டும் ஆவணத்தில் தந்தையின் பெயராக கஸ்தூரி ராஜா என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 
இது எப்படி சாத்தியம்? அப்படி யென்றால், கஸ்தூரி ராஜா என்ற பெயரில் ஏற்கெனவே ஆவணங் களை உருவாக்கி வைத்திருந்தார்களா? இந்தப் பெயரில் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் வாங்கியி ருக்கிறாரா?

இவற்றை வழங்கிய அதிகாரிகள் யார்? அவர் காட்டியிருக்கும் ரேஷன் கார்டில் இருக்கும் முகவரியும், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவின் முகவரியும் வேறு வேறாக உள்ளன. 

இப்படி பல கேள்விகள் உள்ளன. ஆவணங்களின் நம்பகத் தன்மை பற்றியும் டி.என்.ஏ டெஸ்ட் வேண்டியும் மனு செய்துள்ளோம்’ என்றார்.யார் சொல்வது பொய் என்பதை நீதிமன்றம் கண்டுபிடிக்க வேண்டும்!
Tags: