இனி இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது !

ஜி-மெயிலில் கணக்கு வைத் திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித் துள்ளது. 

இனி இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது !
இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்தி ருந்தது குறிப்பிடத் தக்கது.

ஜி-மெயில் தற்போது .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை பிப்ரவரி 13ம் தேதி முதல் அனுப்ப முடியாது என தெரிவித் துள்ளது. இந்த ஃபைல்களை அனுப்ப முயற்சித் தால் அதனை அனுப்ப முடியாது 

என்ற தகவலையும், ஏன் இந்த மெயில் அனுப்ப இயல வில்லை என்ற செய்தியையும் உங்கள் ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட் டுள்ளது.

ஏன் அனுப்ப முடியாது?

இந்த ஃபைலை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜி-மெயிலில் இருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக எளிதில் வைரஸ் களை பரப்பக்கூடிய ஃபைல்களின் வரிசையில் 
இது இருப்பதால் இந்த வகையான ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என அறிவித் துள்ளது கூகுள்.

இது மட்டுமின்றி சமீபத்தில் கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com, .cpl, .exe, .hta, .ins, .isp, .jar, .jse, .lib, .lnk, .mde, .msc, .msp, .mst, .pif, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf மற்றும் .wsh வகை ஃபைல் களையும் தடை செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

ஜி மெயில்

இந்த ஃபைல்களை எப்படி அனுப்பலாம்?

இந்த ஃபைல்களை ஒரு தனிப்பட்ட நபருடைய ஜி மெயில் கணக்கிற்கு தான் மெயில் மூலமாக அனுப்ப முடியாது என கூகுள் அறிவித் துள்ளது. 

ஆனால் ஒருவருக்கு இதே ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலமாக அனுப்ப முடியும் என்று கூகுள் தெரிவித் துள்ளது.

அதனால் .js ஃபைல்கள் இருந்தால் அவற்றை இன்றைக்கே யாருக்காவது அனுப்புங்கள். இல்லை யெனில் ட்ரைவ் மூலமாக அனுப்புங்கள்.
இது தவிர ஜி-மெயிலில் சில சுவாரஸ் யமான விஷயங்களும் உள்ளன.

1. உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமா னாலும் டாட் வைத்தோ அல்லது வைக் காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். 

இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

2. நீங்கள் அனுப்பிய மெயில் ஏதோ தவறுதலாக இருக்கிறது என்றால் அதனை திரும்ப பெறும் வசதியும் ஜி-மெயிலில் உள்ளது. 

இதற்கு ஒருவர் தனது ஜி-மெயில் செட்டிங்கில் உள்ள அன்டூ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. கூகுளின் பூமராங் எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை ஸ்கெட்யூல் செய்து கொள்ள முடியும்
4. Checker Plus for Gmail என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை திறக்காம லேயே படிக்க முடியும். 

சில சமயம் மாஸ் மெயில் அனுப்பும் நிறுவனங்கள் எத்தனை பேர் இந்த மெயிலை திறந்து ள்ளார்கள் என்ற டேட்டா வையெல் லாம் எடுக்கும்.

5. உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து வலது கை ஓரத்தில் இருக்கும் கமென்ட்டை கவனியுங்கள். 

கடைசியாக எப்போது உங்கள் கணக்கு பயன் படுத்தப் பட்டது என்ற விவரம் இருக்கும் அதன் மூலம் உங்கள் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்து கிறார்களா? என்பதையும் ஆராய முடியும்.
Tags: