mSata என்பது என்ன? தெரியுமா? உங்களுக்கு !

தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்து சாதனங் களும் சிறிதாகிக் கொண்டு வருகிறது. Hard disk / SSD பற்றிக் கொஞ்ச நாள் முன்னாடி விளக்கி இருந்தேன். 

mSata என்பது என்ன? தெரியுமா? உங்களுக்கு !
அதோடு இனி எதிர்காலம் SSD தான் என்றும் கூறி இருந்தேன். கொஞ்ச நாள் முன்பு என்னுடைய அலுவலகத்தில் பணி புரியும் ஒருவருக்கு அவருடைய மடிக்கணினியில் பிரச்சனை ஆனால், எதனால் என்று கண்டு பிடிக்க முடிய வில்லை.

வழக்கமாக எங்கள் நிறுவனத்திற்கு Dell கணினி தான் வாங்குவோம். Dell சேவையை எவராலும் அடித்துக்க முடியாது. 

அசத்தல் சேவை. வாரண்டியில் இருந்தால் ரொம்பக் கேள்வி கேட்காமல் உடன் சரி செய்து கொடுப்பார்கள்.

பிரச்சனை எதில் என்று கண்டறிய முடிய வில்லை அதனால் Mother Board , SSD (HDD) இரண்டையுமே மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டு இருந்தேன், 

அவர்களும் சரி என்று SSD அனுப்பி விடுகிறேன் என்று என் நண்பனுக்கு அனுப்பி விட்டார்கள்.
அவன் அதை எடுத்துட்டு என்னைப் பார்க்க வந்தான். வந்து “Dell கொடுத்தாங்க!” என்று போஸ்டல் கவர் மாதிரி இருந்த ஒன்றைக் கொடுத்தான். 

இது என்ன.. HDD எங்கே? என்றேன். அது தான் இதுன்னு கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி சொன்னான்.

மச்சி! Dell உனக்கு HDD அனுப்பி இருக்காங் கன்னு சொன்னா ங்களே! அது எங்க? என்றால்.. இது தான் கொடுத்தாங்க என்றான். 

சரின்னு பிரித்துப் பார்த்தால், மேலே படத்தில் நீங்கள் பார்க்கும் RAM போல இருக்கும் சிப் தான் HDD. (RAM அளவை விடச் சிறியது!).

இது 512 GB SSD ன்னு தெரிஞ்சதும் தலை கிறுகிறுத்து விட்டது. அடப்பாவிகளா! 

இனி போகிற போக்கைப் பார்த்தால், HDD பகுதியே இல்லாமல் SD card slot அளவு மட்டுமே போதும் போல இருக்கே! ன்னு கிர்ர் ஆகிட்டேன்.

ஆமாம் மக்களே! நீங்கள் பார்க்கும் இந்தக் குட்டி சாதனம் தான் இனி உங்கள் கணினியில் எதிர்காலத்தில் இருக்கப் போகிறது.

வழக்கமான Sata HDD எடையில் 100 ல் 5 பங்கு எடை தான் இருக்கும் ஆனால், வேகம் 100 மடங்கு தெறிக்கும்.
ஏற்கனவே SSD பற்றி விளக்கமாகவும் எளிமையாகவும் கூறி விட்டதால், புதிதாகப் படிப்பவர்கள் SSD கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ளவும்.

இது போல ஒரு mSata வேண்டும் என்று நான் வழக்கமாக வாங்கும் ஒரு Vendor ரிடம் கேட்டால் அவர்களுக்குத் தெரியவில்லை. மாற்றி அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு விளக்கி பின் சரியாக அனுப்பினார்கள்.

அதனால் நீங்கள் தில்லாக மற்றவர்களை.. “என்னப்பா உன் கணினி mSata ல இருக்கா பழைய மாடலா!!” என்று கலாயிக்கலாம்

Samsung V NAND SSD PRO M.2
உங்கள் ஆச்சர்யம் முடியும் முன்பே இதை விட வேகமான ஒரு SSD சாதனத்தைச் சாம்சங் வெளியிடப் போகிறது. அதன் பெயர் Samsung V NAND SSD PRO M.2.

இதில் 48-layer V-NAND இருப்பதால் சிறிய சாதனத்தில் அதிகத் தகவல்களை அடக்க முடிகிறது (Compressed format).

இதை மேலும் விளக்கினால் உங்களுக்குக் குழப்பமாக இருக்கும். எனவே, இந்த வசதி வரை வந்து விட்டது, நாம எங்க இருக்கோம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

2015 அக்டோபர் (இந்த) மாதம் இந்தச் சாதனம் வெளியாகப் போகிறது.
Tags: