கடலில் கொட்டப்பட்டது ஆஸ்பத்திரி மனித கழிவுகள்?

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி,
கடலில் கொட்டப்பட்டது ஆஸ்பத்திரி மனித கழிவுகள்?
கடலில் கலந்தது. எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத் திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது.

இதில், எர்ணாவூர் கடலோரப் பகுதியில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது. இதனால் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் கசிவை நீக்க துரித நடவடிக்கையில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு கடலோர காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ரா கூறும்போது, கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அளவை எங்களால் அளவிட முடியவில்லை. 

இதனை கப்பலின் உரிமையாளர் தான் கூற வேண்டும். இது அவர்களின் கடமை. கச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளது. 

கடலில் கலந்துள்ள கழிவை சுத்தம் செய்ய நாங்கள் எந்த வேதியியல் பொருட்களையும் பயன்படுத்த வில்லை.
ஒரு மாசை நீக்க மற்றொரு மாசுகேட்டை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமே எண்ணெய் நீக்கப்பட்டு வருகிறது.

இது விபத்தா அல்லது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தபட்டதா? ஈராக்கில் இருந்து எல்பிஜி காஸ் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கப்பல் (M.T.BW MAPLE) ஈராக் நோக்கி சென்று கொண்டு இருந்தது, 2 கடல் மைல் கடந்து போய் இருக்கிறது.

பின்பு மும்பையில் இருந்து ஆயிலை ஏற்றி வந்த ஒரு கப்பல் இதோடு மோதிச்சாம். சரி உலகத்திலேயே கப்பலும் கப்பலும் நேருக்கு நேர் மோதிய புதிய செய்தி. 

நடுக்கடலில் எந்த வித இயற்கை சீற்றம் இல்லாமல் மோதி இருக்கிறது. இதன் எந்த போட்டோக்களும் இல்லை. ஈராக் செய்திகளிலும் இது குறித்து எந்த செய்தியும் இல்லை. 
காரணம் கப்பல் ஈராக்கில் இருந்து சரக்கு கொண்டு வந்த கப்பல், அந்த கப்பல் திரும்ப வராமல் விபத்து என்று செய்திகள் வரவில்லை. அப்படியே அந்த கப்பல் பயங்கர சத்தத்துடன் வெடித்தது என்று இருக்கிறது. 

வெடித்து தீப்பற்றிய எந்த படங்களும் இல்லை. இப்படி ஒரு செய்தியை கசிய விட்டு 33 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகளை கொட்டி இருக்கிறார்கள் என்கிறது அந்தப் பத்திரிக்கை.

அதுவும் அரபு நாடுகளின் ஆஸ்பத்திரிகளில் டன் கணக்கில் குவிந்த மனித உறுப்புகள் அறுத்து எடுக்கப் பட்ட உறுப்புகள் அபார்ஷனில் கலைக்கப்பட்ட மனித சிசுக்கள் மற்றும் ஆலை கழிவுகள்.

இது போன்ற ஆபத்தான கழிவுகள், மோதல் பெயரில் கொட்டப்பட்டு விட்டது 
கடல் பகுதியை சாக்கடையாக, விஷமாக மாற்றப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால் எத்தனை ஆயிரம் மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் இறந்தன. 

இந்த கடலில் பிடிக்கப் படும் மீன்கள் மற்றும் நண்டுகளை மனிதன் உட்கொண்டால் என்ன ஆகும்? ஆபத்து சென்னைக்கு மட்டும் அல்ல மொத்த தமிழ்நாட்டிற்கும் தான்.
Tags: