எங்கே செல்லும் இந்த பாதை இது ஒரு உண்மை கதை | The path to where.. It is a true story !

என்றும் போல அல்லாமல் அன்று காலை 6 மணிக்கே எழுந்து விட்டேன். அன்று மட்டும் என்னவோ அனைத்தயும் ரசிக்க தோணியது மனது. இனம் புரியாத மகிழ்ச்சி மனதில். 
காலை 8 மணிக் கெல்லாம் குளித்து காலை உணவிற் காக மெஸ் கு சென்று விடேன். அந்த பொங்கலை பார்த்ததும் சற்று ஏளன சிரிப்பு என் முகத்தில் இன்னும் 15 நாளைக்கு உனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை. 

விடுமுறை க்காக ஊருக்கு போறேன். எங்க ஊரு மீன் குழம்பு வாசம் என் மூளையில் கடந்து போனது. அதுவும் அந்த மீன் குளம்பு சாப்பாட்டை அம்மா பிசஞ்சு வாயில் ஊட்டி விடுறப்போ இருக்க சுவையை எந்த அமிர்தமும,் இந்த கால பிஸ்சா பர்கர் இந்த பாஸ்ட் food உம் அடிச்சிக்க முடியாதுங்க. 

என்ன கனவுகளோடு எங்களுக்கு ரோசம் வரணும் னு உப்பு நிறைய அள்ளி போட்டு கொடுத்த அந்த பொங் கலையும் சந்தோச மாகவே சாப்பிட்டு முடிச்சேன்.

சரி இது யாரு நு யோசிக்கு றீங்களா. இந்த நவீன உலகத்துல படிச்ச படிப்புக்கு ம் படிக்க வச்ச பெத்தவர்க ளுக்கும் பலனை கொடுக்க வேண்டும் என்ற இலட்சி யத்தோடு M .E டிக்ரீ முடித்து கல்லூரி யில் வேலை செய்யும் ஒரு பெண். கன்னியா குமரி மாவட்டம் தான் எங்களது.

ஒரு வழியாக வேலை எட்டா கனியாக இருக்கும் இந்த காலத் திலும் எட்டி பிடித்த வேலை இந்த கல்லூரி பேராசிரியை வேலை . நேரம் ஆகி விட்டது; பேருந்தும் வந்து விட்டது. 

இன்னும் மாணவர் களுக்கு உள்ள குறும்பு மாறாத பெண்ணாய் நான் என் நண்பர்க ளுடன் சேர்ந்து அடி பிடித்து ஜன்னல் ஒர இருக்கை யில் அமர்ந்து கொன்டேன். அலைபேசி யில் அப்பாவிற்கும் தொடர்பு கொண்டேன்.
அப்பா பஸ் ஏறிட்டேன் பா... சரியா 11 மணிக்கு நம்ம ஊர்ல இருப்பேன். அடிக்கடி போன் பண்ணா தீங்க. ரொம்ப பத்திரமா வந்து சேந்திடு வேன்னு சொல்ல. அப்பாவும் சரி மக்களே பாத்து வானு, அப்பாவை பெற்ற பெண்களுக்கே உள்ள பயத்தில் சொல்லி விட்டு phone ஐ துண்டித்தார். 

அந்த மாலை வேளையில் ஜன்னல் ஒர இருக்கையும் காதில் தேனாய் பாய்ந்த மோகன் சார் பட பாடல்களும் வாழ்க்கை யில் நான் தான் ரொம்ப குடுத்து வச்சவளோ , சொந்த கால்ல நிக்குறேன், 

கல்யாண வயசிலும் பொண்ண நம்பி மையில் தாண்டி வேலை விடுற அப்பா அம்மா, மனசுக்கு புடிச்ச வேலை, இந்த இரவிலும் தனியா பயணம் பண்றதைரியம் , ஒரு வேளை பாரதி கண்ட புதுமை பெண் நான் தானோ என்று எண்ண அலைகள் என் மனதில்.

5 மணி நேர பயணத்தின் முடிவில் , நாகர் கோயில் எல்லாம் இறங்குங்கநு கண்டக்டர் அவசரப் படுத்த மனசு இன்னும் குதூகல மானது.

எனக்காக என் தம்பி பேருந்து நிலையத் தில் காத்திருக்க மகிழ்ச்சி யில் ஹேய் பக்கி எப்படா வந்த செம பசி சீக்கிரம் கிளம்பு போலாம்நு அவசர படுத்த அவனும் பைக்கை வேகமா உதைக்க கிளம்பினோம். 

வழியில் அக்கா தம்பிக்கே உரிய கேலிகளும் கிண்டலு மாக சென்று கொண்டிருந் தோம் . வா வா என் தேவதையேநு அப்பா அழைக்க , அப்பா 10 நிமிசத்துல வந்திடு வோம்நு டென்ஷன் ஆகாதீங்கனு கொஞ்சம் செல்லமா கண்டிச்சிடு போன கட் பண்ணி ட்டேன் .

தம்பி பசிக்குது நு சொல்ல சாப்பாடு ராமி நு சிரிச்சிட்டே சொல்லி 2 நிமிஷத் துல ,,,,, ஆஆஆ ஆ ஆஆஆ அமமா அம்ம்மா சத்தம் மட்டுமே. என்ன நடந்திச்சு எனக்கு. கீழ விழுந்தேன். ஐயோ என் தம்பி , பேச்சு மூச்சி ல்லை.. யாருமே இல்லியே. 

இரவு 11 மணி .. ஐயோ என் கை கு என்ன ஆச்சு..:- ( எனக்கு கையே இல்லாத உணர்வு. தூரத்தில் வா வா என் தேவதையேநு அலைபேசியில் அப்பா அழைக்க , மனம் கனத்தது … அப்ப்பா அப்பா நு கண் முழுக்க ஈரம்.
தம்பி என் அழுகுரல் கேட்டு மெல்ல எழுந்தான். அந்த இரவிலும் ஊர் மக்கள் திரள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டோம். அதற்குள் எங்கள் வீட்டிற்கு தகவல் சொல்லப் பட்டது அப்பா அமமாவிற்கு. தம்பிக்கு பெரிய அளவில் காயம் இல்லை. 

எனக்கு தான் கை உடைந்து விட்டது ஆபரேஷன் பண்ணணும். ஆன இப்போ பண்ண முடியாது. ஏற்கனவே 5 அப்பரேஷன் இருக்கு இன்னிக்கு. எல்லாம் அச்சிடேன் கேஸ் தான் . அம்மா என் அருகில் வந்து தன் கையால் முகத்தை தடவி கொடுத்தார்.

மனம் மிகவும் அழுதது, அமமா வலிக்கு தும்மா பசிக்கு தும்மாநு மனசு சொல்லிச்சு ஆனாலும் அழுகையை வெளிக்காட்ட வில்லை. நான் அழுதால் அமமா உடைந்து போவார்.

ஒரு வழியாக ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சேந்தேன் . பெரிய accident அதனால சொந்தகாரங்க நண்பர்கள் நு எல்லாரும் பாக்க வந்தாங்க. எல்லோரும் பரிதாப பட்டாங்க.. அய்யோ பாவம் இனி வேலைக்கு போக முடியாதே . 

இஃது தான் சொல்றது ராத்திரி நேரம் பொண்ணுங்க வெளிய போக கூடாதுனு. எல்லாம் பேய் வேல தான்னு ஒரு கூட்டம் சொல்ல , கொஞ்சம பேர் எல்லாமே கண் திருஷ்டி நு சொல்ல எனக்கு தலையே சுத்திச்சு. 

ஐயோ அது எல்லாம் இல்லீங்க பெரிய பள்ளம் ரோடு சரி இல்ல அஃது தான் உண்மை நு சொன்னா சொல்ராங்க நீங்க படிச்சியி ருக்கீங்க அதனால நாங்க சொல்ரது உங்களுக்கு விளையாட்டா தான் இருக்கும் நு.

எப்படி தான் சொல்லி புரிய வைப்பது … அதிர்ச்சி இன்னும் மாற வில்லை. அய்யோ இன்னும் எத்தனை பேர் இந்த மாதிரி அடி பட்ருப்பாங்க. என் அம்மாவுக்கு அவங்க பொண்ணோட கையோட போச்சு. எத்தனை அம்மாக்க ளுக்கு பொண்ணு பையன் இல்லாமலே போயிருப் பாங்க.

எல்லாரும் சொல்ராங்க சாமியாரை கூட்டிட்டு வந்து அடிங்க திருஷ்டி சுத்தி போடுங்கனு. அடிக்க வேண்டியது இந்த அரசியல் வாதிகளுக்கு தங்க.

இப்டியே போச்சு நா எங்க மாவட்டமே காலி ஆகி மக்களை தொகை உம் கணிசமா கொறஞ்சு இந்தியா வரை படத்துல எங்க கன்னியா குமரி மாவட்டமே இல்லாம போய்டும். சிட்டிசன் பட அத்திப்பட்டி மாதிரி.

தலைக்கவசம் உயிர் கவசம் நு போஸ்டர் வைக்குறீங்க, தலைகவசம் அணியம போன பைன் போடுறீங்க. லைசென்ஸ் இல்லாட்டி பைன் போடுறீங்க. ஏன்? விபத்தை தடுக்க தானே? அப்போ இந்த மாதிரி குண்டும் குழியுமா இருக்க நாங்க யாருக்குங்க பைன் போடுறது. 
விழுவ தெல்லாம் எழுவதற்கே என்கிற பழமொழியை உண்மை யாக்க தான் ரோடு குண்டும் குழியுமா இருக்குதோ? கை வலியே தாங்க முடியல அப்போ எத்தனயோ உயிரை காவு வாங்குதே இந்த கேவலமான ரோடு அந்த குடும்பம் எவ்ளோ துடிக்கும்.

அவசிய தேவை அத்தியா வசிய தேவை உடனடி தேவை .. என் கனவுக ளுக்கு முற்று புள்ளி வைத்த இந்த கொடூரமான சாலை யார் வாழ்க்கையிலும் இனி விளையாட வேண்டாம். உங்கள இலவச scooty எங்கள் தேவை இல்லை . எங்கள் உழைப்பில் நாங்கள் வாங்கிய scootyil

மரண பயமின்றி பயணம் செய்ய நல்ல தரமான சாலை மட்டுமே எங்கள் தேவை
Tags: