பீட்டாவிலிருந்து விலகா விட்டால் வாய்ப்பு நோ.. நடிகர் சங்கம் !

தமிழகத்தில் இத்தனை பெரிய அறப்போராட்ட த்திற்கும், இத்தனை பெரிய கலவரத்துக்கு காரணமானது பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு.
பீட்டாவிலிருந்து விலகா விட்டால் வாய்ப்பு நோ.. நடிகர் சங்கம் !
இந்த அமைப்பில் ரஜினிகாந்தின் குடும்பமும், த்ரிஷா, நாசர், விஷால், தனுஷ், மாதவன், சன்னி லியோன், எமி ஜாக்சன், தமன்னா, 

காஜல் அகர்வால், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்கள் மட்டுமின்றி, வெளியே தெரியாத பல நடிகர், நடிகையர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள நடிகர், நடிகையர்கள் படங்களை தியேட்டரில் பார்க்க மாட்டோம் புறக்கணிப்போம் என்று தமிழக இளைஞர்கள் சொல்லி வரும் நிலையில், 
பீட்டா நடிகர் - நடிகைகள் அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்று நடிகர் சங்கம் சொல்லியுள்ளது.

இருந்தாலும், தமன்னா, காஜல் அகர்வால் போன்றோர் எதுவும் பதில் தெரிவிக்காத நிலையில்,விலகா விட்டால்,தமிழில் நடிக்க வாய்ப்பு கிடையாது என்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுத்து ள்ளதாம் நடிகர் சங்கம்.
Tags: