மனிதன் தோன்றியது எவ்வாறு?

Kurzgesagt புதிதாக வெளியிட்டுள்ள ஒளிப்பதிவில் மனிதன் எவ்வாறு வன வாழ்க்கையி லிருந்து விடுபட்டு தற்போதைய நவீன வாழ்க்கை முறைக்கு மாறியுள்ளான்.
மனிதன் தோன்றியது எவ்வாறு?
தனக்கேற்ற வகையில் பிற கோள்களையும் மாற்றி யமைத்து ள்ளான் என்பது பற்றிய விளக்கம் தரப்பட் டுள்ளது. இப்பதிவு கிட்டத் தட்ட 6 மில்லியன் வருடங்கள் பின்நோக்கி ஆரம்பிக்கின்றது. 

அதாவது மனித இனம் குரங்கி லிருந்து ஆரம்பிக்கின்றது. பின் 2.8 மில்லியன் வருடங்கள் பின்னோக்கி நகர்ந்து Homo இனம் பற்றி விளக்க மளிக்கின்றது. 

200000 வருடங்கள் பின்னோக்கி தாவி நம் Homo sapiens பற்றிய தகவல்களை தருகிறது. இந்த காலப் பகுதியிலேயே ஆறு வகை மனித இனங்கள் வாழ்ந்துள்ளது. இவ்வேறுபட்ட இனங்களுக் கிடையிலும் பல ஒற்றுமைகள் இருந்துள்ளது. 

ஆயினும் நுண்ணறிவு மற்றும் பௌதீக தோற்றங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. இவற்றில் Homo erectus இனமும் வெற்றிகரமான இனமாக கருதப்பட்டது. 

இவ்வினம் கிட்டத்தட்ட 2 மில்லியன் வருடங்களாக நிலைத்திருந்தது. சில இனங்கள் வாழ்ந்த போதிலும் மற்றைய இனங்கள் 10 000 வருடங்களுக்கு முன்னாடி அழிந்து போயின.
அவை அழிந்து போனமைக்கு இருவேறு கருதுகோள்கள் முன் வைக்கப் படுகின்றன. ஒன்று அவை சூழல் நிலைமைகளுக்கு தாக்கு பிடிக்காமல் இறந்திருக்கலாம். 

மற்றையது அவ்இனங்களுக் கிடையில் போர் மூண்டு இறந்திருக்கலாம் என்பதே. 300 000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் எவ்வாறு பேச ஆரம்பித்தான் என சொல்லப் படுகிறது.
Tags: