AMP என்ன செய்கிறது?

நீங்கள் ஃபேஸ்புக்கை திறன்பேசியில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “Instant Article” பார்த்து இருப்பீர்கள். ஒரு மின்னல் குறியீடுடன் இருக்கும். இவ்வகைச் சுட்டிகளை க்ளிக் செய்தால், உடனடியாகத் திறக்கும்.

AMP என்ன செய்கிறது? | AMP does what?
ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா?

ஃபேஸ்புக் நிறுவனம், சம்பந்தப்பட்ட செய்தி அல்லது அந்த நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டு அவர்கள் தகவல்களைத் தங்கள் வழங்கியில் (server) வைத்துள்ளது. 

எனவே தான் நீங்கள் க்ளிக் செய்தவுடன் உடனே திறக்கிறது.நீங்கள் சாதாரண ஒரு சுட்டியை திறப்பதற்கும் இந்த “Instant Article” களை க்ளிக் செய்து திறப்பதற்கும் மிகப்பெரிய வேக வித்யாசமுள்ளது.

இந்த முறையில் படிக்க எளிதாகவும் இருக்கும், விளம்பரங்களின் தொல்லைகளும் அதிகளவில் இருக்காது. நீங்கள் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் உணர்ந்து இருப்பீர்கள்.

இந்த “Instant Article” தொழில்நுட்பம் தான் கூகுள் AMP க்கும் பயன்படுத்தப்படுகிறது.

இப்ப கூகுள் AMP க்கு வருவோம்
கூகுள் என்ன செய்கிறது என்றால், AMP வசதி செயல்படுத்தப்பட்ட தளங்களின் அனைத்து கட்டுரைகளையும் தன்னுடைய வழங்கியில் வைத்து இருக்கும், 

Cache மாதிரி. இவ்வகை AMP தளங்களுக்குத் தன்னுடைய தேடல் பக்கங்களில் முன்னுரிமை தருகிறது.

இது உங்களுடைய திறன்பேசிகளில் இருந்து தேடப்படும் தகவல்களுக்கு மட்டுமே! உங்கள் கணினியில் இருந்து கூகுள் தேடலில் தேடப்படும் தகவல்களுக்கல்ல.

அப்படியென்றால்?

AMP வசதி உள்ள தளங்களின் தகவல்கள் கூகுள் தேடலில் முன்னணியில் வரும். கூகுள் தேடலில் இது போல வரும் தகவல்கள் AMP என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். 

அவற்றை நீங்கள் க்ளிக் செய்தால், உடனடியாகத் திறக்கும். காரணம், தேவையற்றதை நீக்கி படிப்பதற்கு என்ன தேவையோ அவை மட்டுமே இருக்கும்.
AMP என்ன செய்கிறது? | AMP does what?
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, இவ்வகைச் சுட்டிகளை க்ளிக் செய்தால், நீங்கள் படிப்பது கூகுள் தளத்தில் இருந்து (Cache) என்பதை.

புரியும்படி கூறுவதென்றால்,

உங்கள் திறன்பேசியில் இருந்து “கூகுள் தேடல்” (http://www.google.com) பக்கத்துக்குச் செல்லவும், பின் தேடலில் சிங்கப்பூர் என்று தட்டச்சுச் செய்யுங்கள். பின்வரும் படத்தில் உள்ளது போலத் தகவல்கள் வரும்.

அதில் ஏதாவது ஒரு சுட்டியை க்ளிக் செய்தால், நான் இது வரை என்ன கூறிக்கொண்டு இருந்தேன் என்று எளிதாகப் புரிந்து விடும். சுட்டியை க்ளிக் செய்தால் உடனடியாகத் திறக்கும்.

எதிர்காலத்தில் கூகுள் AMP தான் ஆதிக்கம் செலுத்தப் போகிறது. எனவே, எவராக இருந்தாலும், இதனுள் வந்தாக வேண்டும்.
உங்களுடைய திறன்பேசியில் கூகுள் தேடலில் AMP சுட்டி க்ளிக் செய்து பார்த்து இருந்தால் மட்டுமே, நான் இது வரை கூறி இருந்தது புரியும். இல்லையென்றால், குழப்பம் இருக்கும்.

நான் கூறியது அல்லது கூற வருவது ஓரளவாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் .

AMP என்றால் என்ன? மற்றும் புதிய தொழில்நுட்பங்களை என்னுடைய தளத்தைப் படிப்பவர்களும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
Tags: