வீட்­டுக்­குள் கணவன் மனை­வி­யாக வாழும் நண்­பர்கள் | Friends who live in the house as husband and wife ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

வீட்­டுக்­குள் கணவன் மனை­வி­யாக வாழும் நண்­பர்கள் | Friends who live in the house as husband and wife !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
தமி­ழ­கத்தில் ஆண்கள் இருவர் வீட்­டுக்குள் தம்­ப­தி­க­ளா­க வும் ஊருக்குள் நண்­பர்­க­ளா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர்.
இது குறித்து இவர்கள் தமி­ழகத்தி­­ லி­ருந்து வெளி வ­ரு­கின்ற விகடன் சஞ்­சி­கை­க்கு தெரி­வித்­துள்­ளனர்.

அதி­லி­ருந்து…

பெரம்­பூரில் பஸ் நிலை­யத்தை ஒட்­டி­யி­ருக்கும் சிறு வீட்டில் வசிக்­கி­றார்கள் ராஜாவும், ஜோனும்.

வெளியில் நண்­பர்­க­ளாக அறிமுகமாகி யுள்ள இரு­வரும் வீட்­டுக்குள்ளே தம்ப­தி­க­ளாகத் தான் வாழ்ந்து வரு­கி­றார்கள்.

ராஜா அம்மன் பக்தர். கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்­கு­கி­றது.

சமையல் தொடங்கி, சகல வேலை­க­ளையும் ராஜா தான் செய்­வாராம். பெயரை, தன் கண­வ­னுக்­காக ராஜ சுலோ­க் ஷனா என மாற்றி வைத்துக் கொண்­டி­ருக்­கிறார்.

“பத்து வய­சி­லேயே எனக்­குள்ள பெண்மை இருக்­கி­றதை நான் புரிஞ்­சுக்­கிட்டேன்.

ஆனா, அதை எப்­படி வெளிக்­காட்­டு­ற­ துன்னு தெரி­யலே. வீட்­டுல சொல்­லக்­கூ­டிய நிலையும் இல்லை.


எனக்கு ஒர் அக்கா, ஒரு தங்­கச்சி. அவங்க வாழ்க்கை பாதிச்­சி­டு­மேங்­கிற பயம்.

எல்லா உணர்­வையும் மன­சுக்­குள்­ளேயே வச்சு தச்­சுக்­கிட்டு நடைப்­பிணம் போல வாழ்ந்­துக்­கிட்­டி­ருந்தேன்.

என்னை மாதி­ரியே சில சகோ­த­ரிங்க தொடர்பு கிடைச்­சுச்சு.

என்­னால அவங்­கள மாதிரி குடும்­பத்தை விட்­டுட்டு சுதந்­தி­ரமா போக முடி­யலே. படிப்பு ஏறலே.

ஒரு நிறு­வ­னத்­தில ஓபீஸ் போயாக வேலைக்குச் சேர்ந்தேன். எல்­லா­ருமே என்னைத் தவறா பார்த்­தாங்க.

IMG_8245_13420பேசு­னாங்க. பேண்ட் சட்டை போட்­டுக்­கிட்டு ஆம்­பி­ளையா உல­வி­னாலும், மன­சுக்­குள்ள பரி­பூ­ர­ண­மான ஒரு பெண்ணா தான் இருந்தேன்.

அபி­ராமி தியேட்­டர்ல மூணு வருஷம் முன்­னாடி தான் இவங்­களைப் பாத்தேன்.

மத்­த­வங்க பார்த்த பார்­வைக்கும், இவங்க பார்த்த பார்­வைக்கும் நிறைய வித்­தி­யாசம் தெரிஞ்­சுச்சு.

உங்க பேர் என்­னன்னு கேட்­டாங்க. சொன்னேன். சினி­மாவைப் பார்க்­காம என்­னையே பார்த்து சிரிச்­சுக்­கிட்டு இருந்­தாங்க.

படம் முடிஞ்­சதும் “உன் போன் நம்­பரைக் கொடு”ன்னு கேட்டு வாங்­கி­னாங்க.

மறுநாள் பேசி­னாங்க. உங்­க­ளுக்கு கல்­யாணம் ஆயி­டுச்­சான்னு கேட்டேன். இல்லேன்னாங்க. “அப்போ என்னைக் கல்­யாணம் பண்ணிக்கி­றீங்­களா?”ன்னு கேட்டேன்.

“காமெடி பண்­ணா­தடா… ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருப்­போம்ன்னு சொல்­லிட்டு வச்­சுட்­டாங்க.

ஆனா, என்­னால இருக்க முடி­யலே. ஒரு நாள், அவங்க வீட்­டுல போய் நின்னேன்.. என்னைப் பார்த்­ததும் அதிர்ந்து போயிட்­டாங்க..”-

“எனக்கும் இவன் மேல ஈர்ப்பு இருந்­துச்சு.

ஆனா, இதை­யெல்லாம் வெளி­யில சொல்ல முடி­யுமா? வீட்­டுக்கு வந்­த­வனை பிரண்ட்னு சொல்லி அறி­முகம் செஞ்சேன்.


அதுக்­குப்­பி­றகு நிறைய வெளி­யில சுத்­துனோம். வித விதமா பரி­சுப்­பொ­ருட்­களை கொடுப்பான்.

அவங்க வீட்­டுக்கும் கூட்­டிக்­ கிட்டுப் போவான். யாரும் எங்­களை சந்­தே­கத்­தோட பார்க்க மாட்­டாங்க.

ஒரு­ முறை, எனக்கு தாலி கட்­டியே ஆக­னும்ன்னு நின்னான்.

“வெளி­யில வரும் ­போது கழட்டி வச்­சி­டனும்”ங்கிற உறு­தி­ மொ­ழி­யோட நண்­பர்கள் முன்­னி­லை­யில தாலி கட்­டினேன்.

அதுக்குப் பின்னர், திருட்­டுத்­த­ன­மான வாழ்க்கை வேணான்னு முடிவு செஞ்சோம். இந்த வீட்டைப் பிடிச்சோம். வெளி­யில யாருக்கும் எங்க உறவு தெரி­யாது.

ஆனா, வீட்­டுக்­குள்ள நாங்க கணவன் மனைவி. எம்­மேல உயி­ரையே வச்­சி­ருக்கான் ராஜா.

ஒரு பெண்­ணால இப்­ப­டி­யொரு வாழ்க்­கையை எனக்குத் தர முடி­யாது. என்னை உப­ச­ரிக்­கி­ற­ தா­கட்டும்,

எனக்­கான தேவை­களை நிறைவு செய்­யி­ற­தா­கட்டும், அவ்­வ­ளவு சந்­தோ­ஷமா செய்வான்.

எங்க அப்பா, அம்­மாவை அத்தை மாமான்னு தான் கூப்­பி­டுவான்.

எனக்கு கல்­யா­ணத்தை இன்ட்ரஸ்ட் இல்­லைன்னு வீட்­டுல சொல்­லிட்டேன். ராஜா, நல்லா சமைக்கக் கத்­துக்­கிட்டான்.

மீன் குழம்பும், தோசையும் செஞ்சா, எண்­ணிக்கை மறந்து சாப்­பி­டலாம்…” என்­கிறார் ஜோன்.

“எனக்­காக, உற­வு­க­ளையே விட்­டுட்டு வாழ்க்­கையை அர்ப்­ப­ணிச்­சி­ருக்­காங்க. இவங்­க­ளுக்கு நான் வேற என்ன செய்ய முடியும்..?

காலம் முழு­வதும் அவங்­களை கஷ்­டப்­ப­டாம வச்­சுக்­கனும்..” என்று நெகிழ்ந்து சொல்­கிறார் ராஜா என்­கிற ராஜ­சு­லோ­க்ஷனா.

ஜோன் – ராஜா போல, சென்­னையில் நிறைய தம்­ப­திகள் வாழ்­கி­றார்கள்” என்கிறார் இந்­தியன் கம்­யூ­னிட்டி வெல்பேர் ஆர்­க­னி­சேஷன் இயக்­குநர் ஹரி­கரன்.

“ஒருபால் ஈர்ப்பு உள்­ள­வர்கள் பல்­வேறு மட்­டங்­களில் இருக்­கி­றார்கள்.பெண் ஈர்ப்­பா­ளர்கள், ஆண் ஈர்ப்­பா­ளர்கள், திரு­நம்­பிகள் என பல­வ­கை­யினர் இருக்­கி­றார்கள்.

மேல்­தட்டு, அடித்­தட்டு வர்க்­கங்­களில் உள்ள ஒருபால் ஈர்ப்­பா­ளர்கள், தக்க இணை­க­ளோடு வாழும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

நடுத்­தர வாழ்க்­கையில் உள்ள ஒருபால் ஈர்ப்­பா­ளர்கள் தான் ஒருங்­கி­ணைப்பு இல்­லாமல் வாழ்­கி­றார்கள்.

இதுமாதிரியான வாழ்க்கை வெகுஜன சமூகத்திற்கு அதிர்ச்­சி அளிப்பதாகவே இருக்கும்.

ஆனால், இந்த விளைவை மாற்ற முடியாது. எனவே தகுந்த விழிப்புணர்வை உருவாக்குவது ஒன்றே நாம் செய்யக்கூடிய செயல்..” என்கிறார் ஹரிகரன்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close