அணு குண்டிலும் அழியாமல் ஜப்பானி லிருந்து அமெரிக்கா வந்த மரம் | The wood from the United States, Japan lost nuclear bomb ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

அணு குண்டிலும் அழியாமல் ஜப்பானி லிருந்து அமெரிக்கா வந்த மரம் | The wood from the United States, Japan lost nuclear bomb !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண் டுள்ளது.தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்து ள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டு கொள்ளப்பட வில்லை என்பது ஆச்சரியம்.
இந்த மரம் ஓங்கி வளர்ந்த பெருமரம் இல்லை. ஜப்பானி யர்களை போலவே குட்டை தன்மை கொண்டது. இதன் தோற்றம் பார்க்க காளான் போல் உள்ளது. இதனுடைய நடுப்பகுதி மரம் 1.5 அடி விட்டம் கொண்ட சிறிய மரம்.

இந்த குறைகளே 4 வது நூற்றாண்டை கடக்க இருக்கும் இந்த மரத்துக்கு நிறைகளாக அமைந் துள்ளதா என்பது ஆராயக் கூடியது.

அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது, 1945, ஆகஸ்ட் 6 ம் திகதி ஜப்பானின் ஹிரோஷிமா மீது லிட்டில் பாய்(Little Boy) அணு குண்டை வீசியது. அப்போது, குண்டு விழுந்த இடத்துக்கு இரண்டு 2 கி.மீ. தூரத்தி லேயே இந்த வெள்ளை பைன் மரம் இருந்தது.

குண்டு வீசப்பட்ட இடத்தி லிருந்து பல மைல் தூரத்தில் இருந் தவர்கள் பெரும் பாதிப் பிலிருந்து தப்பினார்கள். ஆனால், 2 கி.மீ. தூரத்தில் பெரும் பாதிப்புக் குள்ளாகி அழிந்த பகுதியில் இருந்த இந்த மரம் சேத மில்லாமல் தப்பியது பிறகு தான் கண்டு பிடிக்கப் பட்டது.

மரத்தின் உயரத்து க்கு சுற்றுச்சுவர் மறைத்தி ருந்தாலும் வெளியில் கிளைகள் தெரிந்த படியே இருந்தது. ஆனாலும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப் படவில்லை.

இந்த ஜப்பானிய வெள்ளை பைன் மரம், மற்றும் 53 சேகரிப் புகளும் (Specimen) போன்சாய் ஆசிரியர் மாசறு யமகி என்பவரால், அமெரிக் காவின் தேசிய இரு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1976 ம் ஆண்டு அருங் காட்சிய த்திற்கு வழங்கப் பட்டது.

ஆர்போ ரேட்டம் தேசிய போன்சாய் மற்றும் பெஞ்சிங் மியூசிய த்தில் ஒரு ஒரு சிறந்த சேகரிப் பாக வைக் கப்பட்டிரு க்கிறது.

மார்ச் 8, 2001 வரை அதன் சிறப்பு ஒருவரு க்கும் தெரிய வில்லை. பிறகு, அங்கு வந்த இரண்டு ஜப்பானிய சகோதரர்கள் தங்களது தாத்தா தந்த மரத்தை பற்றிய சிறப்பு களை தெரியப் படுத்தினர்.

”விலை மதிப்பற்ற போன்சாய் மரத்தை எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் அடிப்ப டையில் எதிரியாக இருந்த அமெரிக்கா விற்கு, மாசறு யமகி நன்கொ டையாக அளித் துள்ளது ஆச்சரி யமானது.

அதைப் போற்று வதற்கு வார்த்தை யில்லை” என்று லாப நோக்கமற்ற தேசிய போன்சாய் அறக் கட்டளை தலைவர் பெலிக்ஸ் லாப்லின் உணர்ச்சி பொங்க கூறினார்.

வாஷிங் டனில் உள்ள தேசிய ஆர்போரேட் டத்திற்கு, யமகி இந்த மரத்தை கொடுத்த போது, ஏன் இந்த மரத்தை பற்றிய ரகசி யத்தை சொல்ல விரும்ப வில்லை என்பது, இன்னும் புரியாத புதிராக அவர்க ளுக்கு இருக்கிறது. ”இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
என்ற திருக்குறள் வரிகள் தரும் சிந்தனை யமகிக் குள்ளும் இருந்திருப் பதையே இந்த செயல் காட்டுகிறது.

400 வருடங் களுக்கு முன் இந்த மரத்தை ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து வளர்த் தவர்கள் இருந்திரு ப்பார்கள். ஆனால், பல தலை முறை களையே பார்த்து விட்டது இந்த போன்சாயி மரம்.
அணு குண்டிலும் அழியாமல் ஜப்பானி லிருந்து அமெரிக்கா வந்த மரம் | The wood from the United States, Japan lost nuclear bomb ! அணு குண்டிலும் அழியாமல் ஜப்பானி லிருந்து அமெரிக்கா வந்த மரம் | The wood from the United States, Japan lost nuclear bomb ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 11/12/2016 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚