பான் மசாலா வியாபாரி கணக்கில் 10 கோடி | Pan masala Bank, accounted for 10 million ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்

Flash News

பான் மசாலா வியாபாரி கணக்கில் 10 கோடி | Pan masala Bank, accounted for 10 million !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
வங்கி கணக்கில் ரூ.10 கோடி அனாமத்தாக வரவு வைக்கப் பட்டிருந் ததை பார்த்ததால் ஜார்கண்ட் மாநில பான் மசாலா வியாபாரி கடும் அதிர்ச்சி யடைந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். 

ஜார்க்கணட் மாநிலம் கிரிடி மாவட்ட த்தைச் சேர்ந்தவர் பப்புகுமார் திவாரி. பான் மசாலா வியாபாரம் செய்து வரும் இவர் கிரிடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத் துள்ளார். 

இந்நிலை யில், தமது வங்கிக் கணக்கில் ரூ.4500 டெப்பாசிட் செய்து வைத்தி ருந்தார். அந்த பணத்தில் இருந்து செலவிற் காக ரூ. 1 ஆயிரம் எடுக்க அருகில் உள்ள ஏ.டி.எம். க்கு சென்றார்.

அப்போது, அந்த ஏடிஎம்.இல் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்ட தால் அவரால் பணம் எடுக்க முடிய வில்லை. எனவே, அந்தப் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றார். 

அங்கு பணம் எடுப்பதற் கான செல்லான் நிரப்பிக் கொடுத்து ரூ.1 ஆயிரம் தருமாறு வங்கி அலுவல ரிடம் கோரினார். அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்த அலுவலர் அதில் ரூ.10 கோடி இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். 

மேலும், இவ்வளவு பணம் உங்களது வங்கிக் கணக்கில் எவ்வாறு வந்தது என்றும் அவரிடம் வங்கி அலுவலர் கள் கேட்டனர். பப்புகுமார் திவாரி மிகவும் சாதாரண ஒரு பான் மசாலா வியாபாரி என்பது வங்கி அலுவலர் களுக்கு நன்கு தெரியும். 

ஆகையால் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டதில் ஆச்சரியப் படுவதற் கில்லை. இந்தத் தகவலை அறிந்த பப்பு குமார் திவாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். ரூ.10 கோடி எப்படி வந்தது என்ற விபரம் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். 

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பப்புகுமார் திவாரி யிடம் விசாரணை நடத்தி னார்கள். மேலும், பப்பு குமாரின் சேமிப்புக் கணக்கும் முடக்கப் பட்டது. இதுகுறித்து பப்புகுமரார் கூறிய தாவது: 

நாள்தோறும் பான் மசாலா விற்று வருகி ன்றேன். அதில் கிடைக்கும் வருமான த்தை வங்கியில் சேமித்து வருகிறேன். தற்போது, திடீரென எனது வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி வரவு வைக்கப் பட்டிருப்பது அறிந்தது மிகவும் அதிர்ச்சிக் குள்ளானேன்.

இந்த தகவல் தெரிந்து இரவு முழுவதும் நானும் என் குடும்பத் தினரும் தூங்க முடியாமல் தவித்தோம். இந்த பணத்தை என் கணக்கில் போட்டது யார் என்று எங்களு க்கு தெரியாது. மேலும், உழைக் காமல் வரும் ஒரு காசு கூட எனக்கு சொந்த மில்லை.

எப்போதும், கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடவே நான் விரும்பு கிறேன் என்றார் பப்புகுமார். 500, 1000 ரூபாய் நோட்டுக் களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் கருப்புப் பணத்தை பப்புகுமார் கணக்கில் யாரும் போட்டு விட்டு சென்றிருக் கலாம் என்று கூறப் படுகிறது. 

இருப்பி னும், இவ்வளவு பெரிய தொகையை வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறை நிரந்தரக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் எப்படி வரவு வைத்தி ருக்க இயலும் என்ற கேள்வியும் எழுகிறது.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause