பெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women !

தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கும். 
தண்டில் முட்கள் வளர்ந்திருக்கும். இதன் கிழங்கு கொத்தாக காணப்படும். அதிக தசை பகுதியை கொண்டது. நீர்த்தன்மையும் நிறைந்திருக்கும். இந்த கிழங்கில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 

பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிர சாதம். பருவம் அடைந்த காலத்தில் இருந்து, மாதவிடாய் முழுமையாக நிற்கும் மனோபாஸ் காலம் வரை பெண்களுக்கு ஏற்படும்

பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. 

இதற்கு சாதாவேரி, சதாமூலம் ஆகிய இருவேறு பெயர்களும் உண்டு. தண்ணீர் விட்டான் கிழங்கு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உடலை சீர்செய்யும். 

விட்டு விட்டு வரும் காய்ச்சல், காசநோய் போன்றவைகளையும் குணப்படுத்தும். அதிக சூட்டினால் உண்டாகும் வெள்ளைப்படுதல், வெட்டை நோய் போன்றவைகளுக்கும் இது சிறந்த மருந்தாகின்றது.

இதற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் வறட்சியை நீக்கும். அதிகரிக்கும் பித்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.

இன்று பெரும்பாலான இளம்பெண்கள் சினைப்பை நீர் கட்டியால் பாதிக்கப்படு கிறார்கள். அதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருக்கும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக் கிறது.

பருவமடைந்த பெண்களில் சிலர் உடல்மெலிந்து ரத்த சோகையுடன் காணப்படு கிறார்கள். 

அதனால் வெள்ளைப்படுதல் தோன்றும். உடலின் உள்பகுதி சூடாகத் தோன்றும். தலைமுடி உதிரும். மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் தோன்றுவார்கள். 

இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும். அதனால் மார்பக வளர்ச்சியும் மேம்படும். பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இது உதவும்.

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாகவும், உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியதாகவும்,

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கக் கூடியது, தண்ணீர் விட்டான் கிழங்கு.

‘தண்ணீர் விட்டான் கிழங்கு நெய்யை’ தினமும் இரவு, ஒரு தேக் கரண்டி வீதம் கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிதாகும். 

கர்ப்பகால இறுதியில் பனிகுடத்தில் உள்ள நீர் குறையாமல் சுக பிரசவம் ஏற்பட இது உதவுகிறது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலை உருவாகும். உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை தோன்றும். மனச் சோர்வு, பிறப்பு உறுப்பில் வறட்சி, கை- கால் எரிச்சல் போன்றவை உருவாகும்.

மருத்துவர் ஆலோசனைபடி தண்ணீர் விட்டான் கிழங்கு உணவுகளை சாப்பிட்டால், அந்த அவஸ்தைகளில் இருந்து பெண்கள் விடுபடலாம்.

உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்டு முதல் வாரத்தை ‘உலக தாய்ப்பால் வாரமாக’ அறிவித்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் பெருக்கத்திற்கு சிறந்தது, தண்ணீர் விட்டான் கிழங்கு.

இந்த தாவரத்தை பணப் பயிராக இந்தியா முழுவதும் பயிரிடுகிறார்கள். இதை அலங்கார செடியாக தொட்டிகளிலும் வீடுகளில் வளர்க்கலாம். ஒரு வருடத்தில் கிழங்குகள் கிடைக்கும்.