காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது.. மோடி அரசு !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, இவ்விவ காரத்தில் நீதிமன்றம் தங்களை கட்டுப் படுத்த முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன் றத்தில் தெரிவித்துள்ளதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்ப தாகக் கூறப் படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது.. மோடி அரசு !
காவிரி பிரச் சினையும் பிரதமரும்..

காவிரி நதிநீர் பங்கீடு விவகார த்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மவுனம் காத்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி கர்நாடகா வில் வன்முறை வெடித்தது. 

அப்போது மட்டுமே பிரதமர் மவுனம் கலைத்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.

காவிரியில் இருந்து தமிழகத் துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கடந்த செப்டம்பர் 20,27,30 தேதிகளில் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், இது வரை எந்த ஒரு உத்தர வையும் கர்நாடக அரசு அமல் படுத்த வில்லை.

கவனம் ஈர்த்த தேவகவுடா:

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் பிரதமரும் மதச்சார் பற்ற ஜனதாதள கட்சித் தலைவருமான தேவகவுடா கர்நாடகத் துக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. 

பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
தேவகவுடாவை கர்நாடக பாஜக மூத்த தலைவர்கள் சதானந்த கவுடாவும், அனந்த குமாரும் சந்தித்தனர். 

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சுமுகமான முடிவையே பிரதமர் எடுப்பார் எனத் தெரிவித்தனர். இதனை யடுத்து அவரும் போராட்டத்தை கை விட்டார்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தேவகவுடாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது எனத் தெரிவித்துள்ளார். 
இத்தக வலை தேவகவுடாவும் உறுதிப்படுத்தி யிருக்கிறார். காவிரி விவகாரத்தில் தேவகவுடாவிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படை யிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, 

இவ்விவகா ரத்தில் நீதிமன்றம் தங்களை கட்டுப் படுத்த முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசியல்...

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அதன் முடிவு நிச்சயம் கர்நாடகா வுக்கு எதிராகவே அமையும். 2018-ல் கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடை பெறவிருக் கும் நிலையில்,

கர்நாடகாவை குறி வைக்கும் பாஜக பின் வாங்கலாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்ப திலிருந்து பின் வாங்குகிறது என கர்நாடக அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப் படுகிறது.
அதாவது, காவிரி நீர் பங்கீடு விவகார த்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு இன்று (திங்கட் கிழமை) தெரிவித் துள்ளது.

'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளு மன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். 

இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது' என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags: