முகம் பளபளப்பாக ஸ்வீட்டுக்கு 'பை' சொல்லுங்க | Sweet Face Glow in the 'bag' Yes ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

முகம் பளபளப்பாக ஸ்வீட்டுக்கு 'பை' சொல்லுங்க | Sweet Face Glow in the 'bag' Yes !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
ஒரு சிலரின் முகத்தில் எப்பொழுது பார்த்தா லும் எண்ணெய் வடிந்து கொண் டிருக்கும். இதனால் முகமே டல்லாகி சோகத் துடனே காட்சி யளிப்பர். என்ன தான் செய்தா லும் முகத்தில் எண்ணெய் படிவதை கட்டுப் படுத்த முடியாது. 
இதற்கு காரணம் வாலிபத் தில் சுரக்கும் ஹார் மோன்களே. இதனால் முகத் தில் பருக்கள் தோன்றி அவை மறைவ தற்கும் அதிக நாட்களை எடுத்துக் கொள் ளும். 

இதனால் இளைய தலை முறையினர் அதிக மன உளைச் சலுக்கும் ஆளாவர். இயற்கை யான முறையில் இதை சரி செய்வது குறித்து தெரிவித் துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

வெது வெதுப்பான நீர்

எண்ணெய் பசை சருமத்தை அடிக்கடி வெது வெதுப்பான நீரில் கழுவ வேண் டும் இதனால் சருமத்தின் துவாரங் களில் உள்ள அடைப்பு நீங்கும். எண்ணெய் கரையும். 

எண்ணெய் வழிகிறதே என்று கடின சோப்புகளை உபயோகிக் கக் கூடாது. ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை உபயோகி க்கலாம். யுடிகோலன் கலந்த நீரில் குளித்தால் துவாரங் களில் அடைப்பு ஏற்படாது. எண்ணெய் வழியாது.

சோற்றுக் கற்றாழை ஜெல்

சருமத் தில் சோற்றுக் கற்றாலை ஜெல் தடவினால் முகம் குளிர்ச்சி யடையும். எலுமிச்சை சாறும், சம அளவு தண்ணீரும் கலந்து முகத்தில் தடவி பின்னர் வெந்நீரில் கழுவலாம். 

குளிப்பதற்கு அரை மணி நேரத்தி ற்கு முன்ன தாக எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, வெள்ளரிச் சாறு அரை தேக்கரண்டி, கலந்து பின்னர் வெது வெது ப்பான நீரில் குளிக்கலாம். 

முகம் கழுவும் போது நுனி விரலால் கீழிருந்து மேலாக மசாஜ் செய்யலாம். எண்ணெய் இல்லா மாய்ச்ரை சர்களை உபயோகி க்கலாம். இது முகத்தை இளமையா க்கும்.

இனிப்பும் சாக்லேட்டும் எதிரி

எண்ணெய் சருமம் கொண்ட வர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்க ளில், உப்பு, சர்க்கரை அள வை கட்டுப் படுத்த வேண்டும். 

இனிப்பு உணவுப் பொருட்கள், சாக்லேட், குளிர் பானங்களை தொடவே கூடாது என்பது அழகியல் நிபுணர் களின் அறிவுரை.

பச்சை காய்கறி கள்

பச்சைக் காய்கறி கள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள லாம். புரதச் சத்து நிறைந்த உணவு களை உட்கொள்ள லாம். 
வைட்டமின் பி2 நிறைந்த கொட்டை கள், பீன்ஸ், காராமணி போன்றவை களை உணவில் சேர்த்துக் கொள்வது எண்ணெய் வழி வதை தடுக்கும்.

பேஸ் பேக்

முல்தானி மெட்டி எனப்படும் மண் பூச்சு கொண்டு முகத்திற்கு பேக் போடுவது எண்ணெய் சருமத்தை நீக்கும். அதை விடுத்து கண்ட கண்ட ரசாயனங் கள் நிறைந்த 

பொருட் களை எடுத்துக் கொள்வது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத் தும் என்கின் றனர் அழகியல் நிபுணர்கள். 

முக்கிய மாக நல்ல உறக்கமும், மன அமைதி யும் அவசியம் மேலும் முகத்திற்கு மசாஜ் செய்வதும் எண்ணெய் வழிவதை தடுத்து நிறுத்தும் என்கி ன்றனர் அழகியல் நிபுணர்கள்.

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close