EThanthi - டிவிகளுக்கு போனில் ஆபாச அர்ச்சனை.. ஜவாஹிருல்லா கண்டனம் | The phone has a porn offering javahirulla condemned TVs !

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் About

Flash News

டிவிகளுக்கு போனில் ஆபாச அர்ச்சனை.. ஜவாஹிருல்லா கண்டனம் | The phone has a porn offering javahirulla condemned TVs !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
ராம்குமார் குறித்த செய்தி களுக்கு முக்கியத் துவம் கொடுத்து செய்தி வெளி யிட்ட டிவி சேனல் ஒன்றின் அலுவல கத்திற்கு போன் போட்டு சிலர் எச்ச ரிக்கை விடுப்பது போன்ற உரையாடல் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
ராணுவ வீரர்கள் 17 பேர் தீவிரவா திகள் தாக்கு தலில் வீர மரணம் அடைந்த செய்தி யை விட, ராம்குமார் செய்திக்கு முக்கியத் துவம் கொடுக்கி றீர்களே.. 

இது நியாயமா.. என தனியார் தொலைக் காட்சி சேனல் ஒன்றின் ஊழியர் களுடன் போனில் பேசுவதை போல ஆரம்பி க்கும் அந்த உரையாடல் நீண்டு கடைசியில் கெட்ட வார்த்தை யில் திட்டும் அளவுக்கு சென்று நிற்கிறது.

மற்றொரு பக்கமோ, 2 முன்னணி செய்தி தாள்கள் தங்கள் தலைப்பு செய்தி யாக ராம்குமார் தற்கொலை செய்ததை போட்டதை யும், அதற்கு கீழே ராணு வ வீரர்கள் கொல்லப் பட்ட செய்தியை போட்டதை யும் சுட்டிக்காட்டி சமூக வலைத் தளங்க ளிலும் பலர் விமர்சனம் செய்து வருகி றார்கள்.

இந்நிலை யில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹி ருல்லா இன்று வெளியி ட்டுள்ள கண்டன அறிக்கை யில் கூறியிருப் பதாவது:

இந்திய சிறைத் துறை வரலாற்றில் உயர் பாதுகாப்பு சிறையென வர்ணிக்கப் படும் புழல் சிறையில் தான் முதன் முதலாக விசாரணை கைதி ஒருவர் 'மின் கம்பியை வாயில் கடித்து தற்கொலை' செய்துக் கொண்ட வரலாறு சமீபத்தில் அரங்கே றியது.

இது வட இந்தியாவில் நடை பெற்றி ருந்தால் ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் பெரும் அளவில் விவாதித் திருக்கும். (அவர்கள் தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்த மாபாதக மனித உரிமை மீறலை உரிய வகையில் கண்டுக் கொள்ள வில்லை).

சகோதரர் ராம்குமார் மர்ம மரணம் தொடர்பாக பெரும் பாலான தமிழ் தொலைக் காட்சிகள் ஏனோ அடக்கி வாசித்தன. 

இம்மாபாதக மரணம் குறித்து ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக அதே நேரத் தில் நடு நிலை தவறாது நியூஸ் 7 தமிழ் தொலை காட்சி செய்தி களையும் விம ர்சன ங்களையும் விரிவாக வழங்கியது. இதே பாணியில் சத்தியம் தொலை க்காட்சியும் சன் தொலைக் காட்சியும் செய்தி களை வழங்கின.

இந்த மூன்று தொலைக் காட்சிகளும் ராம்குமார் மர்ம மரணத்தில் தங்களை அம்பல ப்படுத்தி யுள்ளதை ஆர்எஸ்எஸ் தலைமை யிலான சங் பரிவார் அமைப்பி னரால் சகித்துக் கொள்ள இயல வில்லை. 

குறிப்பாக நியூஸ் 7 தொலைக் காட்சிக்கு அவர்கள் திட்டமிட்டு மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளா ர்கள். அதன் நெறியா ளர்கள் செந்தில் வேல் மற்றும் நெல்சனுக்கு தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக

தொடர்ந்து மிரட்டல் விடுத்து தங்கள் சிந்தனை பயங்கர வாதத்தை வெளிப் படுத்தி வருகிறார்கள் சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள்.

சங்க பரிவாரின் இந்த மிரட்டல் களை முறியடிக்க அனைத்து ஊடகவிய லாள ர்களும் சமூக அக்கறை கொண்டவ ர்களும் ஓரணியில் நிற்க வேண்டிய காலம் இது. 

சங் பரிவாரின் இந்த அருவருக் கத்தக்க கருத்தியல் பயங்கர வாதத்திற்கு எதி ராக அனைவரும் தங்கள் எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட் டுள்ளது.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause