மக்களை ஏமாற்றும் திருட்டு விசிடி அதிர வைக்கும் தகவல்கள் !

இதோ அடுத்த வெள்ளிக் கிழமை வந்து விட்டது. அவசர மான உலகில் பொழுது போக்கு என்றால் அதற்கு முதலிட மும் முக்கிய இடமும் சினிமா வுக்கு மட்டுமே. 
மக்களை ஏமாற்றும் திருட்டு விசிடி அதிர வைக்கும் தகவல்கள்
இந்த வாரமும் தமிழில் மட்டும் ஐந்து படங்கள் சுடச்சுட ரெடி. பிறமொழிப் படங்கள், ஹாலிவுட் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி க்கை கூடும்.

என்னதான் பீச் மணலில் காலாற நடந் தாலும், ஜயண்ட் வீலில் சுத்திக் கொண்டே கத்தினாலும் நம் உணர்வு களுடன் மோதி நம் பொழுதைப் போக்க வைப்பது சினிமா தான்.
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?
நம் உணர்வு களை யாரோ ஒருவர் நடிக்க திரையில் பார்க்கும் போது ரசிக்கிறோம். சிரிக்கிறோம். அழுகிறோம். அமைதி யாகிறோம்.

சரி போரடிக்காம விஷயத்துக்கு வருவோம்.

ஒரு ஐம்பதோ, அறுபதோ டிக்கெட்டு, இடைவேளையில் பாப்கார்னோ, ஐஸ்க்ரீமோ ஒரு ஐம்பது, இதே மல்டி ப்ளக்ஸ் திரையரங் குகளில் ரூ120 டிக்கெட்டு, 

இடைவேளை க்கு ஒரு 100 எனக் கொண்டால் சுமாராக 4 பேர் கொண்ட ஒரு குடும்பத் துக்கு எண்ணூறு முதல் 1000 ஆகும்.

எனவே புத்திசாலித் தனமாக கணக் கிட்டு ஒரு படத்துக்கு இவ்ளோ செலவா, என யோசித்து ஒரு சிடி வாங்கினால் நாற்பதே ரூபாயில், அம்மா, அப்பா, முதல் ஒன்று விட்ட அக்கா கணவனின் தங்கை வரை பரிமாறிக் கொள்ள லாம்.

இதைக் காட்டிலும் இன்னொரு முறை இருக் கிறது, கொஞ்சம் டெக்னி க்லாக வேலை செய்தால் விசிடியில் ஒரு மாதத்துக்கு 10 படம் எனக் கணக்கி ட்டு அதற்காக ஒரு அன்லிமி டெட்

இணைய வசதி வைத்துக் கொண்டால் 100 படம் கூட இலவசமா கக் காணலாம். என்ன ஒரே குறை? படம் கொஞ்சம் டல்லடி க்கும், திரையரங்க பார்வை யாளர்க ளின் சத்தம் கேட்கும்.

இந்த வியாபரத் திற்கு இன்னும் நாம் அமோக வரவேற்பு கொடுத் தால் அந்தச் சத்தங்களும் அடங்கி தியேட்டரில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் இன்னும் தெளிவான ஒலியுடன் கேட்கும் வாய்ப்பும் கூட கிடைக் கலாம்.

திருட்டு விசிடிக் களை விடுங்கள் தயாரிப்பாளர் காசும், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர் களின் உழைப்பு மட்டுமே சுரண்டப் படுகிறது,. அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன. 
திருட்டு விசிடி
ஆனால் இணைய தளத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மிகப்பெரிய வியாபாரம் நடப்பது உங்களுக்குத் தெரியுமா? 

இதோ சம்மந்தப் பட்ட தளத்திற்கு எந்தப் படம் முதலில் வருகிறதோ அந்தப் படத்தை முதலில் பார்ப்பேன் என்கிறார் 

இந்த நண்பர்.ஒரு டிக்கெட் டில் நீங்கள் ஒரு தயாரிப்பாளருக்குக் கொடுக்கும் பணம் வெறும் 120 ரூபாய், 

ஆனால் ஒரு படம் பார்க்க இணையத்தில் நீங்கள் கொடுப்பது லட்சங்களில். அதிர்ச்சியாக இருக்கலாம். உண்மை அதுவே.
குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க !
நீங்கள் பார்க்கும் ஒரு படத்தை அடைய வேண்டி க்ளிக் செய்த வுடன் சுமாராக மூன்று முதல் நான்கு விளம்பரத் தளங்கள் ஓபன் ஆவதைப் பார்க்கலாம். 

ஒவ்வொரு விளம்பர மும் சுமார் 10 முதல் 40 ஆயிரங்க ளைத் தொடும், அப்படியே படம் பார்க்கும் தளத்தை அடைந்தவுடன் 

உங்களுக்கு பாருங்கள் என அவர்கள் கொடுத்த சின்ன இடத்தைச் சுற்றி இருக்கும் விளம்ப ரங்கள் ஒன்று முதல் 10 எனக் கொண்டால் ஒவ்வொ ன் றும்
சுமாராக 5 முதல் 20 ஆயிரங்க ளைக் கொடுக்கும். ஆனால் இதற்காக அவர்கள் செலவு செய்வது சர்வர் மெயிண் டெய்ன் மற்றும் தளம் என மாதத்திற்கு 15 முதல் 20 ஆயிரங்கள் மட்டுமே.

இதற்கு நாம் செய்யும் வேலை என்ன தெரியுமா? காசே வாங் காமல் ஏதோ ஒரு தளத்துக்கு அழகாக வேலை செய்து கொண்டு இருக்கி றோம். 

அதுவும் நம் காசில், நம் இணைய சேவை யைப் பயன் படுத்தி. எல்லா வற்றிற் கும் மேல் கோடி கோடியாகக் கொட்டிப் படமெடுத்து கண்டிப்பாக ஓடி விடும் 

என்ற நம்பிக்கையில் இருக்கும் ஒரு தயாரிப் பாளர் முதல், இரவும் பகலுமாக நம்மை சந்தோஷ ப்படுத்த பாடுப்பட்ட இயக்குநர், நடிகர்கள், ஏன் ஏழையா கவே இன்றும் இருக்கும் லைட் 

மேன்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் உழைப்பையும் கடலில் கொட்டிய பெருங் காயமாய் மாற்றிக் கொண்டிருக் கிறோம்.

இதே ஒரு பீச் மணலை விசிடியில் காட்டினால் சந்தோஷப் படுவோமா, இல்லை ஜயண்ட் வீலை இணை யத்தில் காட்டினால் ஜாலியாவோமா, 

அதெப்படி ஒரு படத்தை மட்டும் நம்மால் விசிடியிலோ, அல்லது 20 இன்ச் திரையிலோ காட்டினால் சந்தோஷப் பட முடிகிறது.

காரணம் மற்றதில் நாம் கணக்குப் போடுவ தில்லை. சினிமாவை ஒரு ஆடம்பர செலவாகவே நினைத்து இன்னமும் உதாசீனம் மட்டுமே செய்கிறோம்.
ஆரம்பத்தில் உணர்வுப் பூர்வமாக பார்க்கி றோம் என்றோமே, ஆம் அதற்காக செலவு செய்வதையும் கூட உணர்வு பூர்வமாக பார்ப்பதால் தான் 

நம்மால் திருட்டு விசிடிக்களையும், திருட்டு இணையங்களையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
இடை, தொடை சுற்றளவு என்ன?
அதையே கொஞ்சம் புத்திசாலித் தனமாக நினைத்தால் 120 ரூபாய்க்கு நம் மூர்கார ர்கள் பிழைப் பார்கள். இன்னும் நம்மை சந்தோ ஷப்படுத்த படங்க ளைக் கொடுப் பார்கள்.

அப்படி யெனில் இந்த இணைய வாசிகள் நம்மூர்க் காரர்கள் இல்லையா என்றால் தமிழ்ப் படங்களை மட்டுமே கொடுக்கும் இணையங்களின் 

ஹெட் ஆபீஸ் கூட தளத்தை முடக்கிவிட முடியா வண்ணம் அயல் நாடுகளில் இருந்து நடத்து கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
Tags: