ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணம்?





ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணம்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தமிழக முதல்வர் ஜெயலலி தாவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்ட தற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை போயஸ் கார்டன் ஊழியர் ஒருவர் கூறியதை படியுங்கள்
ஜெயலலிதா உடல் நலக் குறைவு  காரணம்?
முதல்வ ருக்கு சர்க்கரை குறைபாடு, மூட்டு பிரச்னை என உடல் ரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பே, அமெரிக்க மருத்து வர்கள் குழுவினர் முதல்வ ருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். 

இதன் பின்னர், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பொது இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம், மிகுந்த கவன மாகவே இருப்பார். 

நேற்று மாலை கார்டனுக்குள் இருந்த முதல்வருக்கு, டெல்லியில் இருந்து சில தகவல்கள் வந்து ள்ளன.

டெல்லி தகவலால் கவலையில் ஆழ்ந்தார் முதல்வர். அதன் பின்னர் சசிகலா மற்றும் அரசு செயலர்களுடன் தீவிரமாக விவாதித்தார். 

அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் குறித்தும் ஆலோசி த்துக் கொண்டி ருந்தார். 
மிகுந்த மனஅழுத்த த்தோடு பேசிக் கொண்டி ருந்தார். நீர்ச்சத்து குறை பாட்டோடு சர்க்கரை அளவும் குறைந்து விட்டது. லேசான காய்ச் சலும் இருந்தது. 

தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை அறிந்த சசிகலா உள்ளிட்டவர்கள், பதறிப் போய் உடனடி யாக அப்பல் லோ மருத்து வனைக்கு அழைத்துச் சென்றனர்.

வழக்கமாக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறுநீரகம் தொடர்பான பரிசோத னையை முதல்வர் மேற் கொள்வது வழக்கம். 

தொடர்ச்சியான பணிகளின் காரணமாக, இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்ள வில்லை. அதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.
உடல் ரீதியான அனைத்து பரிசோத னைகளும் அப்பல்லோ மருத்துவ மனையில் நடந்ததால், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டு விட்டது. 

ஆனால், முதல்வர் இப்போது நன்றாக இருக்கிறார். விரைவில் முழு நலத்தோடு இயல்புக்குத் திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரை கவலையில் ஆழ்த்தும் அளவுக்கு வந்த டெல்லி தகவல் என்ன? என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி
Tags: