EThanthi - குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு | Diarrhea in children !

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் About

Flash News

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு | Diarrhea in children !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
குழந்தைக ளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர் கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் கள் உணர்வ தில்லை. சுகாதார மற்ற தண்ணீரை குழந்தை கள் பருகுவதால் இந்த நோய் ஏற்ப டுகிறது. 
நீரால் ஏற்படும் இந்த நோயை குணப் படுத்த தண்ணீரே மருந்தாக பயன் படுகிறது. வயிற்றுப் போக்கி னால் பாதிக்கப் படும் குழந்தைக ளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தை நல மருத்து வர்கள். 

உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள படி குழந்தைக ளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு.

இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் ஆகிய வற்றால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலமும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

வயிற்றுப் போக்கின் போது குழந்தை களின் உடலில் இருந்து அதிக அளவுநீர் வெளி யேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடை கின்றனர். ஆரம்பத்தில் குழந்தைக ளுக்கு நாவறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும்.

வயிற்றுப் போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழி விழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோ ர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்து வர்கள்.

வயிற்றுப் போக்கு பாதித்த குழந்தைக ளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப் பதை நிறுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் கூறு கின்றனர். ஏனெனில் இது குழந்தை யை மேலும் சோர் வடையச் செய்து விடும். தாய்ப் பால் மட்டும் குடிக்கும் குழந்தை களுக்கு தாய்ப் பாலை தொடரலாம். 

வாந்தி மட்டும் எடுக்கும் குழந்தை களுக்கு கெட்டி யான உணவுகளை நிறுத்தி விட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப் போக்கு இருக்கும் குழந்தை களு க்கு சர்க்கரை + உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும்.

இழந்த நீரினை பெற இது குழந்தைக்கு உதவும். வயிற்றுப் போக்கு ஏற்படும் போதெ ல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும். உப்புக் கரைசல் பாக்கெட் (ஓஆர்எஸ் பவுடர்) மருந்துக் கடைகளில் விற்கிறது. 

அதனை வீட்டி லேயே தயாரித்தும் கொடுக்கலாம் ஒரு தம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்க ரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சம நிலையை அடையும்.
உணவு உண்ணும் குழந்தைக ளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது.

வயிற்றுப் போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிக்கும் இதனை தடுக்கக் கூடாது. இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக ளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீன ப்படுத்தக் கூடாது, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின் றனர், மருத்து வர்கள். 

அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடல டித்தல் என மூட நம்பிக்கை யோடு செயல்படுவது குழந்தை களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரி க்கின்றனர்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause