பட்டா மாற்ற அலைகிறீர்களா.. இதப்படிங்க முதல்ல !

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும் போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.
பட்டா மாற்ற அலைகிறீர்களா.. இதப்படிங்க முதல்ல !
பதிவுத்துறையின் மூலமாகவே, நமது பட்டா மாறுதல் மனு வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984.
ஆனால், நடை முறை அப்படியா இருக்கிறது? இல்லவே இல்லை. நிலத்தை ப் பதிவு செய்து விட்டு, பட்டா பெயர் மாறுதலுக்காக வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.

அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர் பார்க்கிறார். வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ சல்லிக்காசு கூட கட்டணமில்லை. 

ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில் தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்து தான் பட்டா பெற முடியும் 

என்பதாக நம்மிடம் அளந்து, நம்மிடம் எதிர் பார்க்கும் தொகைக் கான பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை விரிக்கிறார்.
இந்தக் கொள்ளையை எதிர்த்து, சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத் துள்ளார்.
தலைமை நீதிபதி திரு. சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வா ணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு 

அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், “நிலம் பதிவு செய்யும் போதே, பட்டா மாறுதலு க்கான மனுவும் பெறப்படு வதால், பதிவு செய்த ஒரு மாத காலத்து க்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவ ருக்கு வழங்கப் பட வேண்டும். 
புதிதாக விண்ணப் பிக்க வேண்டிய தில்லை!” என்றும் அத் தீர்ப்பில் ஆணையி ட்டுள்ளனர். இதோ நண்பர்களே, அந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்து விட்டது. www.google.co.in

தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம். எல்லோரு க்கும் போய்ச் சேருமளவு இத் தகவலைப் பரப்புங்கள்!
Tags: