EThanthi - வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை | 5 days off banks !

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் About

Flash News

வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை | 5 days off banks !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
வங்கிகளு க்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கை யாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. 
பொதுவாக மாதத்தின் இரண்டா வது மற்றும் நான்காவது சனிக் கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் வங்கிகளு க்கு விடுமுறை தினங்களாக உள்ளன. 

ந்நிலையில் அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகை களால் தொடர்ச்சி யாக ஐந்து நாள் வங்கிகளு க்கு தொடர் விடுமுறை வருகிறது. தமிழகத் தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. 

அக்டோபர் மாதம் 10-ம் தேதி திங்கள் கிழமை ஆயுத பூஜையும், 11-ம் தேதி செவ்வாய்க் கிழமை விஜய தசமியும், 12-ம் தேதி புதன் கிழமை மொகரம் பண்டிகை யும் வருகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாளாகும்.

8-ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை, 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வழக்க மான விடுமுறை யாகும். 

இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வங்கி பணப்பரி வர்த்தனை கள் பாதிக்கப் படுவதுடன், ஏ.டி.எம். மையங்க ளில் பணத் தட்டுப் பாடு ஏற்படலாம். 

இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த் தனையும் நடக்காது என்பதால் வாடிக்கை யாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause