பிஎஸ்எல்வி சி35 ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியது !





பிஎஸ்எல்வி சி35 ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் 8 செயற்கைக் கோள்களுடன் செப்டம்பர் 26-ஆம் தேதி விண்ணில் பாய 
தயார் நிலையில் உள்ள பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டி ற்கான 48 மணி நேர கவுன்ட வுன் இன்று காலை 8.42-க்கு துவ ங்கியது.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வரும் திங்கள்கிழமை (செப்.26) காலை 9.12 மணிக்கு 8 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் ஏவப் படுகிறது.

அதில் கடல் ஆராய்ச்சி, புயல் சின்னம் கண்டறிதல், கண்காணிப்பு சேவைகள் மற்றும் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட ஸ்காட்சாட் 1 என்ற செயற்கைக் கோள் அனுப்பப் படுகிறது.

மேலும் அல்ஜிரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயாரித்துள்ள 5 செயற்கைக் கோள், இந்திய பல்கலைக் கழகங்கள் உருவாக்கியுள்ள 
2 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 8 செயற்கைக் கோள்கள் இணைத்து அனுப் படுகின்றன.

இதில் “ஸ்காட்சாட்’ செயற்கைக் கோள் துருவ – சூரிய சுற்று வட்டப் பாதையி லும், மற்ற செயற்கைக் கோள்கள் துருவ சுற்று வட்டப் பாதை யிலும் நிலை நிறுத்தப் படுகின்றன.

இந்திய ராக்கெட் ஒன்று இரண்டு சுற்று வட்டப் பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும். 

அந்த வகையில் இந்த பயணம் முக்கியத் துவம் வாய்ந்த தாகக் கருதப் படுகிறது. 
இரு சுற்று வட்டப் பாதைகளில் பயணிக்க வேண்டியி ருப்பதால் இதன் பயண நேரம் இரண்டே கால் மணி நேரமாக இருக்கும். மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிடம் மட்டுமே ஆகும்.

இந்த ஏவுகணை கள் 5 ஆண்டுகள் சூரியனின் ஒளி வட்ட பாதையில் பயணித்து தனது பணிகளை செய்யும் என இஸ்ரோ தெரிவித் துள்ளது.
Tags: