பூச்சிகளை விழுங்கும் செடி !

பூச்சிகளை சாப்பிடும் உயிரினங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், பூச்சிகளை உண்ணும் தாவரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பூச்சிகளை விழுங்கும் செடி !
ஆமாம் அப்படி ஒரு தாவரம் இருக்கிறது. அந்த தாவரத்தின் பெயர் தான் வீனஸ் ஃப்ளைட்ராப் (Venus flytrap)

ஃப்ளைட்ராப் எனப்படும் தாவரம் வட அமெரிக்காவில் உள்ளது. ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்த தாவரத்தின் இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது.

இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும் மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும். 

இரண்டாக மடிக்கும்படி அமைந்துள்ள இலைகளின் ஓரங்களில் நீண்ட முட்கள் இருக்கும், இதன் நடுப்பகுதிகளில் ஜீரணச் சுரப்பிகள் காணப் படுகின்றன.

தாவரத்தின் ரகசியம்
இலைகளின் நிறத்தால் வசீகரிக்கப்பட்டு பூச்சிகள் அமர்கின்றன, உடனே இலைகளில் உள்ள உணர்முடிகளிலிருந்து சமிஞ்சைகள் பெறப்பட்டு பூச்சிகள் உஷார் ஆவதற்குள் இலைகள் பட்டென்று மூடிக்கொள்ளும்.

இலைகளின் ஓரத்தில் இருக்கும் முட்கள் நன்கு பற்றிக் கொள்வதால் பூச்சிகள் வெளியே செல்ல முடியாது.

இதற்கிடையே ஜீரணச் சுரப்பிகளில் இருந்து நீர் சுரக்க ஆரம்பித்துவிடும், இதில் பூச்சிகள் இறந்துவிடுகின்றன.

இவை முழுமையாக செரிமானம் ஆவதற்கு ஐந்து முதல் பத்து நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும், அதுவரை இலை மூடியே இருக்கும்.

இந்த இலை பூச்சியின் உடலில் உள்ள நீர்ச்சத்தை மட்டுமே உறிஞ்சிக் கொள்வதால், இறைச்சியை உண்பதில்லை, எனவே செரிக்கப்படாத பூச்சியின் பாகங்கள் இலை திறந்த பின்னர் வெளியே வந்துவிடும்.
பூச்சிகளை விழுங்கும் செடி !
தாவரம் பூச்சியை உண்பதற்கு என்ன காரணம்?

வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரம் வளரும் நிலத்தில் தேவையான சத்துகள் கிடைக்காத தால், தன்னுடைய பரிமாண வளர்ச்சிக்கு தேவையான சத்துகளைப் பெறுவதற்காக இலைகளை நாடி வரும்

பூச்சிகளிலிருந்து தங்களுக்குத் தேவையான சத்துகளை எடுத்துக் கொள்கின்றன. எனவே வீனஸ் ஃப்ளைட்ராப் உட்பட பல பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் அசைவத் தாவரங்களாக கருதப்படுகிறது.

உயிரற்ற பொருட்கள் தாவரத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

குறும்புக்காக நாம் ஒரு கல்லை எடுத்து அந்த தாவரத்தில் போட்டால் வழக்கம் போல இலைகள் தானாக மூடிக் கொள்ளும்.

பின் அத்தாவரத்தினால் அந்த கல்லை ஜீரணம் செய்ய முடியாததால், 12 மணி நேரங்களுக்கு பிறகு தானாக இலைகள் விரிந்து கல் கீழே விழும்.
Tags: