உயர் கல்விக்கு படிக்க உதவும் அமைப்புகள் !

+2 முடிக்கும் மாணவர்களில் 40% பேர் பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழலால் உயர் கல்வியைத் தொட முடியவில்லை என்கிறது 
ஒரு ஆய்வு. விண்ணப்பிக்கும் எல்லா மாணவர் களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும்

என்று மத்திய அரசு அறிக்கை மேல் அறிக்கை விட்டாலும், சொத்துப் பிணையும், பரிந்துரையும் கொண்டு வருபவருக்கே வங்கிகள் கடன் தருகின்றன.


நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அடுத்தபடியில் ஏற முடியாமல் தவித்து நிற்கும் இம்மாதிரி மாணவர்களைத் தேடிப்பிடித்து,

அவர்கள் விரும்பும் படிப்பில், விரும்பும் கல்லூரியில் சேர்த்து, முழுச்செலவையும் ஏற்றுக் கொள்கின்றன சில தன்னார்வ அமைப்புகள். அது மாதிரியான சில அமைப்புகள்... 

ஆனந்தம் இளைஞர் நல இயக்கம் அடித்தட்டுக் குடும்பங்களில் பிறந்து, சுய முனைப்பால் முன்னேறி இன்று பெரும் தொழில் நிறுவனங்களின்

முதலாளி களாகவும், சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகி களாகவும் வளர்ந்துள்ள இளைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு இது.

கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங் களைச் சேர்ந்த, அரசுப்பள்ளியில் படித்த,

பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க முடியாமல் தவிக்கும்,
விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளை தேர்வுசெய்து, அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்த்து,

முழுச்செலவையும் ஏற்றுக் கொள்கிறது இந்த அமைப்பு. படிப்புக்கு செலவு செய்வதோடு அல்லாமல், 

ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக ஒருவரை நியமித்து, தாய்மை உணர்வோடு கவனித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

படிப்பு முடிந்ததும் பணி வாய்ப்புகள் பெறவும் உதவுகிறார்கள். இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.  

தொடர்பு முகவரி: ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு, 15-21, பசுமார்த்தி தெரு, 2வது லேன், ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24. மொபைல்; 9551939551

அகரம் பவுண்டேஷன் நடிகர் சூர்யாவால் தொடங்கப் பட்டுள்ள அகரம் பவுண்டேஷன்,


ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர்வு செய்து முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது. 

கிராமப் புறங்களைச் சேர்ந்த, அரசுப்பள்ளியில் படித்த, முதல் தலைமுறைப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். 

குடும்பப் பின்னணி மற்றும் மாணவர் பற்றிய விரிவான சுய விபரக்குறிப்போடு +2 காலாண்டு,

அரையாண்டு (பொதுத்தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை) மதிப்பெண்களை இணைத்து,  

அகரம் பவுண்டேஷன், 29, விஜய் என்கிளேவ், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும். தொடர்பு எண்; 044-43506361, 9841891000 முகவரி பவுண்டேஷன்

ரமேஷ் என்கிற, சேலத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டு, இன்று பெரும்

 விருட்சமாக வளர்ந்து நிற்கிறது முகவரி பவுண்டேஷன். +2வில் அதிக மதிப்பெண் பெற்று, 

படிக்க வசதியில்லாத அல்லது பெற்றோர் இல்லாத மாணவர் களைத் தேர்வு செய்து, அவர்களின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது இந்த அமைப்பு. 
ஒவ்வொரு ஆண்டும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதுவரை 270 பேர் இவர்களின் அரவணைப்பில் படித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.  

இந்த அமைப்பின் தொடர்பு முகவரி; முகவரி பஃவுண்டேஷன், 66/9, கண்ணகி நகர், காமராஜபுரம், வேளச்சேரி, சென்னை-42. மொபைல் எண்; 9566150942

கோல்ட்ஹார்ட் பவுண்டேஷன் அம்மா அல்லது அப்பா இல்லாத, உயர்கல்வி படிக்க வியலாத,


நன்கு படிக்கும் மாணவர்களைத் தத்தெடுத்து, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், டிப்ளமோ படிப்புகளை படிக்க வைக்கிறது இந்த அமைப்பு.

கடந்த ஆண்டு 183 பேர் இந்த அமைப்பின் மூலம் உயர் கல்வியில் இணைந்தார்கள்.

இந்த கல்வியாண்டில் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பிக்க லாம். 

இந்த அமைப்பின் முகவரி; கோல்ட்ஹார்ட் பவுண்டேஷன், 13,சரவணன் தெரு, லட்சுமி அம்மன் நகர், எருக்கஞ்சேரி, சென்னை- 118. மொபைல் எண்; 98846 29206

டீம் எவரெஸ்ட் ஐ.டி.துறையில் பணிபுரியும் இளைஞர்கள் இணைந்து நடத்தும்

இந்த அமைப்பு, +2 முடித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவர் களுக்காக ‘Iam the Change’ என்ற பெயரில்

ஒரு கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல் படுத்துகிறது. இந்தாண்டு 100 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ஒரு மாணவருக்கு ரூ.35,000 வீதம் உதவித்தொகை வழங்கப் படுகிறது. சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிப்பவராக இருக்க வேண்டும். அம்மா 


அல்லது அப்பா இல்லாத மாணவர் களுக்கு முன்னுரிமை. மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும்.

+2வில் 70 சதவீதத்துக்கு மேல் (840க்கு மேல்) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், விடுமுறை நாட்களில்

‘இன்டர்ன்ஷிப்’பாக சமூக சேவை செய்ய வேண்டும். இந்த அமைப்பின் தொடர்பு எண்: 8939612365, 8939912365
Tags: