பாலியல் தொழில் செய்யும் இந்திய சமுதாயத்தினர் !

இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்ட விரோதமான செயல். ஆனால்,
இது சில பகுதி மற்றும் சமுதாயத் தினருக்கு மட்டும் தானா? என்ற கேள்வி பலரது மனதில் நிலவிக் கொண்டி ருக்கலாம். 


நமது நாட்டில் சில குறிப்பிட்ட சமுதாயத்தினர் பாலியல் தொழிலில் தான் ஈடுபட வேண்டும்,

அது தான் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் என எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. 

உலகின் பழமையான தொழில்களில் ஒன்றாக திகழ்கிறது பாலியல்.

இந்தியாவில் சில முக்கிய நகரங்களின் பாக்கெட் அளவிலான அடக்கமான

பகுதிகளில் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் வெளிப்படை யாக செயல்பட்டு வருகிறது. 

எந்த பெண்ணும் இந்த தொழிலுக்கு விரும்பி வருவதில்லை, வேறு வழி இல்லாமலும்,

சிலரின் கொடுமை யாலும் தான் இந்நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 

குடும்ப வருமனாம், அன்றாட தேவைகள், ஒருவேளை சாப்பாடு என மிகவும் அத்தியாவசிய

தேவைகளை பூர்த்திக் செய்துக் கொள்ள வேறு வழியின்றி இந்த தொழிலில் சிலர் ஈடுபடு கின்றனர். 

ஆனால், இந்தியாவில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் இது தான் தங்கள் தொழில் என்று செய்து வருகின்றனர்.

இது இவர்களது அறியாமையா? அல்லது அடக்குமுறையா?

பச்சாரா பழங்குடியினர்

மேற்கு மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் தான் இந்த பச்சாரா பழங்குடியினர்.


இங்கு இவர்களை பாலியல் தொழில் செய்பவர் களாக பார்த்து வருவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

வீட்டில் முதல் பெண் வளர்ந்து இந்த தொழிலுக்கு வருகிறார். இவருக்கு வயதானதும்.

அந்த வீட்டின் அடுத்த இளம் பெண் இதை பொறுப்பேற்று செய்கிறார்.
இதில், கொடுமை என்னவெனில், இவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் தான் இவர்கள் கூட்டி சென்று, கூட்டி வருகிறார்கள்.

இவர்களை பற்றி பல டாக்குமெண்ட ரிக்கள் எடுக்கப் பட்டுள்ளன. படங்களில் மட்டுமின்றி,

இவர்களது வாழ்க்கை யிலும் மாற்றம் கூடிய விரைவில் வந்தால் நல்லது.

நட் புர்வா

கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஹர்தோய் எனப்படும் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் தான் இந்த நட் புர்வா எனும் இடம்.

மிகவும் ஏழ்மையில் வாடும் மக்கள் இவர்கள். நட் எனும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம் வசித்து வருகிறார்கள்.

கடந்த 1871-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறியது.


அந்த கட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் சித்திர வதைக்கு உள்ளாக்கப் பட்டனர். மிருகத் தனமான முறையில் வதைக்கப் பட்டனர்.
அந்த காலக் கட்டத்தில், வாழ்வுரிமைக்கு வேறுவழி இன்றி இந்த சமுதாயத்தின் பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட தூண்டப் பட்டனர்.

இந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண், " எனது பாட்டி, அந்த நேரத்தில் கிராமத்தில்

இருந்த ஒட்டு மொத்த பெண்களும் பாலியலில் ஈடுபட்டதாக" கூறியதாக தெரிவிக்கிறார்.

இந்த கிராமத்தின் பெயரான நட் புர்வா (Nat Purwa) என்பதற்கு பாஸ்டர்ட்ஸ்-ன் கிராமம் என்று பொருளாம். இது எவ்வளவு பெரிய கொடுமையான செயல்.

தேவசாசிகள்

கடவுளுக்கு பணி செய்யும் பெண்களை தேவதாசிகள் என்பார்கள். ஆறாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது

இவர்களது வரலாறு. திருமணம் செய்துக் கொள்ளாமல், கோயில்களில் கடவுளுக்கு திருப்பணி செய்வது,

கலைகளை வளர்ப்பதும் தான் இவர்களது தொழிலாக ஆரம்பத்தில் இருந்துள்ளது.


சமுதாயதில் பெரிய நற்பெயருடன் திகழ்ந்து வந்த இவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சில சிற்றரசுகளால் பாதிக்கப்பட்டு,
கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் உரிமை மற்றும் மரியாதையை இழந்து கடைசியாக

பாலியல் தொழிலில் தான் ஈடுபட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப் பட்டனர்.

தேவதாசி முறை கடந்த 1988-ம் ஆண்டு சட்டப்படி தடை செய்யப் பட்டது.

ஆயினும்,  இன்றளவும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களில் இவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.

வாடியா

வடக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஓர் கிராமம் தான் இந்த வாடியா.

இந்த கிராமம் பாலியல் தொழிலுக்கு மிகவும் பிரபலமான இடமாக திகழ்ந்து வருகிறது.

இந்த கிராமத்தில் தான் பெண்கள் பிறந்தால் அந்த குடும்பம் அந்த குழந்தையை மிகவும் கொண்டாடுகிறது. காரணம், இந்த தொழில்.
பெண்களை அலங்காரப் படுத்தி, அவர்களது வாழ்க்கையை பாலியலில் நுழைக் கிறார்கள்.


இதில் கொடுமை என்னவெனில், 12 வயதிலேயே பெண்கள் இங்கு பாலியல் தொழில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

ஆண்களை ப்ரோக்கர்களாக தயார் படுத்து கிறார்கள். இந்த கிராமத்தில் இருந்து

அகமதாபாத், பாகிஸ்தான், ராஜஸ்தான், மும்பை போன்ற இடங்களுக்கு பெண்கள் 500 - 10,000 ரூபாய் வரையிலும் விற்கப்படு கிறார்கள்.

இந்த பகுதிகளில் இருக்கும் பெண்களின் மறுவாழ்விற்கு யார் உதவுவார்கள்? இது யாருடைய குற்றம்?
Tags: