திமுக தோல்வி மு.க.அழகிரிக்கு வெற்றியா?

சட்டசபை தேர்தலில் தான் கூறியபடியே திமுக தோல்வி அடைந்துவிட்டது என்று கூறி அழகிரி சந்தோஷமாக சிரித்ததாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
திமுக  தோல்வி மு.க.அழகிரிக்கு வெற்றியா?
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்ச மு.க. அழகிரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கூறிய படியே நடந்துள்ளதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று காலை முதலே ஆதரவாளர்கள் அழகிரியின் வீட்டில் கூடியுள்ளனர். 

அதிமுக முன்னிலை என்று டிவியில் வந்ததை பார்த்து விட்டு அண்ணன் பலமாக சிரித்தார். பார்த்தீங்களா, நான் சொன்னது நடந்து விட்டது என்று எங்களிடம் கூறினார். 
என்னை ஒதுக்கி விட்டு வென்று விடலாம் என ஸ்டாலின் போட்ட கணக்கு என்னாச்சுன்னு பார்த்தீங்களா? மதுரை, தேனி, விருது நகரில் ஈஸியா ஜெயிச்சிருக்கலாம். 

எல்லாத்தையும் கெடுத்தது ஸ்டாலின் தான். இனி கட்சி என்ன செய்கிறதுன்னு பார்க்குறேன் என்று அவர் எங்களிடம் கூறினார் என்றார்.
Tags: