உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு ஒரு எச்ச‍ரிக்கை !

ஐம்பது வருடங் களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச் சண்டை, ஆகி யவற்றை வாலி பர்கள் கற்றுக் கொண்டு உட லமைப்பை பராம ரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சி கள் வந்தன.
உடற்பயிற்சி செய்யும் ஆண்கள்


தற் போது ஜிம் மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவா க்குவ தில்

இளைஞர்கள் ஆர்வம் காட்டு கின்றனர்.

சமீப காலமாக படங்களில் பாலி வுட்டில் அமீர்கான், சல்மா ன்கான், கோலி வுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமை ப்பை காட்டும் வ கையில் நடித்தனர்.

இந்த சிக்ஸ் பேக் ஆசை, இன்றைய இளைஞ ர்களிடம் தீயாக பரவி யுள்ளது. அழகின் முகவரி எது என்று கேட்டால் சிக்ஸ்பேக் என்பார்கள். அந்தளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்திய மாக இருக் கிறார்கள்.

அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன் படுத்துகிறா ர்கள். இது உயிரு க்கே ஆபத்தானது என்கி றார்கள் மருத்து வர்கள்.

பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக் கத்தின் மூலம் இயல்பாக கரைந்து போகும். சில சமயங் களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். 

இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்று பகுதியில் உருமா ற்றுவது தான் சிக்ஸ்பேக். ஒருமுறை சிக்ஸ்பேக் கொண்டு வந்து விட்டா லும் அதை தொடர் ச்சியாக பராமரிப்பது கஷ்டம்.


அதனால் தான் உடற் பயிற்சி மூலம் இதை பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்து கள் எடுத்துக் கொள் கிறார்கள். அதனால் உடலில் ஹா ர்மோன் மாற்றங் கள் ஏற்படும் ஆபத்து உண்டு.

ஆண்மை க்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோ டீரோன் இயல் பாக சுரக்கும் இந்த ஹர்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு. 

இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகும். அதன் மூலம் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் பயங்கர மானவை.. முதலில் ஏற்படுவது ஆண்மை க்குறைவு தான். 

மலட்டுத் தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, பார்வைக் குறைபாடு, போன்றவை ஏற்படவும் வாய்ப்பு ள்ளது. 

அழகான ஆரோக்கிய மான உடலுக்கு அன்றாடம் எளி தான உணவு வகை களும் இயல் பான உடற் பயிற்சி யுமே போதும் என்கி றார்கள் மருத்து வர்கள்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபு ணர் சொல்லுவது.

சிக்ஸ் பேக் உடலுக்கு தயாராகு பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும், நீரின் அளவினை 40 சத வீகிதம் அளவுக்கு குறைத்தே ஆக வேண்டும். மேலும் புரத ச்சத்தை மட்டும் அதிகம் எடுத்து கொள்வ தால் கல்லீரல், சிறுநீரகம், இரண்டும் கடும் பாதிப்புக் குள்ளாகும்.
ஊட்டச்சத்து நிபுணர் சொல்லுவது


ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றி செயலிழந்து விடக்கூடிய அபாயமும் இருக் கிறது. அதிகளவு உடற் பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பம் அதிகரி க்கும் இவ்வாறு கூறுகி றார்கள்.

எலும்பு சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியது.

சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன் றையும் நீக்கி விட்டா ல் உயிர் வாழ்வது க டினம் தான். அதிலும் புரதம், மாவுச்சத்து, இல்லாமல் கடும் உடற் பயிற்சி செய்யும் போது உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

மனிதனுக்கு வலிமை யான தசை நார்களே தேவை. உடல் வலி, காயம், ஏற்படு வதை த் தடுக்கவும் முதுகுவலி வ ராமல் காக்கவும் தசை நார்கள் பயன் படுகின்றன.

ஆனால் சிக்ஸ் பேக் வைப்ப தால் தேவை இல்லாத வலிகள், பிரச் சனைகள் தான் அதிகம். அழகுக் கு ஆசை ப்பட்டு தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞ ர்கள் படை யெடுக்கி ன்றனர். 

ஆனால் நிரந்தர அழகுக்கு ஒருவர் முறை யாக உடற் பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத் தலே முக்கியம். சிக்ஸ்பேக் அழகு என்பது தற்காலி கமான தே, நீடித்தது அல்ல. அழகை விட ஆரோக் கியமே முக்கியம்.
Tags: