கால்கள் வலுவடைவதற்கான எளிய‌ பயிற்சி !

சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் கால் தொடையில் அதிகளவு சதை இருக்கும். இப்படிப் பட்டவர்கள் கீழே தரப்பட்டுள்ள இந்த எளிய உடற் பயிற்சியை தினமும் வீட்டில் 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் படுக்கவும். பின்னர் உடலை ஒரு பக்கமாக திருப்பி படுத்து வலது கையை தலைக்கு துணையாக வைத்து, இடது கையை தரையை தாங்கி இருக்குமாறு வைக்கவும். கால்கள் மடக் காமல் நீட்டி இருக்க வேண்டும். 
இடது காலை மடக்காமல் நேராக இடுப்பு வரை (படத்தில் உள்ளபடி) நீட் டவும். இவ் வாறு 15 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் இவ்வாறு செய்யவும். இவ்வாறு கால்களை மாற்றி செய்யவும். 
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முதல் 25 முறை செய்யலாம். 

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் கால்கள் நன்கு வலுவடையும். மேலும் கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறை ந்து அழகான வடிவம் பெறும்.
Tags: